கல்ஹின்னையில் ஒரு சிறிய பொது நூலகமாவது இயங்குகின்றதா என்பதை அறிவதற்காக பல்கோணங்களில் முயற்சித்தும் விடை கிடைக்கவில்லை.
அதன் பொருள் சுமார் 50 வருடகாலமாக முயற்சித்தும் கல்ஹின்னையில் நூலகம் ஏற்படுத்தும் பணியில் எவரும் கரிசனை காட்டவில்லை; காட்டியவர்களும் காணாமற் போய்விட்டனர்!
1970களில் கல்ஹின்னைக்கு ஒரு நூலகம் நிறுவும் பாரியதொரு திட்டத்தை மேற்கொண்டு 'காலண்டர்' விற்பனை மூலமும், மற்றும் சில பல வழிகளின் மூலமும் பணத்தைத் திரட்டியபோதிலும் அத்திட்டம் நிறைவேறாமல் போய்விட்டதை அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் நன்கு அறிவர்.
இறுதியில், பணத்தைத் திரட்டிவர்கள் கனரக வாகனம் வாங்கி, தமது சொந்த வர்த்தகத்தை மேம்படுத்திக் கொண்டனர்.
இதுபற்றி 1973.08.31ம் திகதிய செய்திப்பத்திரிகைகளில் ஆசிரியருக்குக் கடிதங்களில் கூட செய்தி வெளி வந்தது.
காலம் தாழ்த்திய நிலையிலும் GDI என்ற அமைப்பொன்று நூலகம் நிறுவும் பணியில் திட்டம் ஒன்றை வகுத்ததாக கோவிட்-19க்கு முன்னர், "வேட்டை"க்கு தகவல் ஒன்று கிடைத்தது. இதனை GDI ஒரு சவாலாகவே ஏற்றுக் கருமம் ஆற்றும் என எதிர்பார்த்தோம்.
ஆனால், அது இன்றுவரையும் கானல் நீராகிவிட்டமை வருந்துதற்குரிய விடயமாகும்!.
Tags:
கல்ஹின்னைபோஸ்ட்