நமது உயிரினும் மேலான கண்மணி ரஸூலே கரீம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுக்கு,,
"ஹபீபுல்லாஹ்" இறைவனின் நண்பர் என்று ஒரு பெயர் உண்டு...!!
இவர்கள் என்னுடைய நண்பர் என்று அல்லாஹ் ஒரு பேச்சுக்காக சொல்லவில்லை. அல்லாஹு த ஆலா கண்மணி ஹபீப் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களை எப்படி நேசித்தான் என்பதற்கு சில உதாரணங்கள்...!!
1.அபுலஹப் கண்மணி ஹபீப் நாயகத்தை திட்டிய போது அல்லாஹ் அபீலஹபை சபிக்கிறான் .
2.ஒரு யூதன் ஆண் வாரிசு இல்லாதவர் என்று கண்மணி நபிகளார் ஹபீப்ﷺ அவர்களை பார்த்து கூறியபோது அந்த யூதனை அல்லாஹ் சபிக்கிறான்.
3.நபிகளாருக்கு முன்னாள் உங்கள் குரலை உயர்த்த வேண்டாம் என்று கூறி நபிகளார் ஹபீப்ﷺ அவர்களை கண்ணியப்படுத்துகிறான்
4.பைத்துல் முகத்தஸை நோக்கி தொழுத நேரத்தில் கஃபத்துல்லாஹ்வை கிப்லாவாக ஆக்கினால் நன்றாக இருக்குமே என எண்ணி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் நினைத்த போது கஃபதுல்லாஹ்வை நோக்கி தொழுவதற்கு வஹி இறக்கினான்.
5. நபிகளார் ஹபீப்ﷺ அவர்களை மனைவி மார்கள் சில பிரச்சனைகள் செய்த போது தன் ஹபீபுக்காக பரிந்து பேசுகிறான்.
6.குர்ஆன் மறந்து விடுமோ என்ற எண்ணத்தில் வேக வேகமாக ஓதிய போது உங்கள் மனதில் நாம் பதிய வைப்போம் நீங்கள் சிரமப்படாதீர்கள் என்று கூறி சிரமத்தை குறைக்கிறான்.
7. மக்கள் இந்த மார்க்கத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கும்போது நபிகளார் ஹபீப்ﷺ அவர்களின் கவலையை பார்த்த அல்லாஹ் இந்த மக்களின் மீது கவலை கொள்ள வேண்டாம், என்று அவர்களுக்கு கவலையை நீக்குகிறான்..!!
8.குர் ஆனிலே மற்ற நபிமார்களின் பெயரை நேரடியாக அழைத்த அல்லாஹு த ஆலா நபிகளார் ஹபீப்ﷺ அவர்கள் பெயரை மட்டும் நேரடியாக அழைக்காமல்,,
யாஸீன் ,தாஹா என்றும் முஹம்மத் என்ற பெயரை கூறினாலும் அதோடு ரசூலுல்லாஹ் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)என்ற பெயரையும் இணைத்தே அழைத்து அழகு பார்க்கிறான் .
9.நபியே உம் புகழை நாம் உயர்த்துவோம் என்று கூறுகிறான் .
10.நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது நானும் வானவர்களும் சலவாத் சொல்கிறோம் நீங்களும் சலவாத் சொல்லுங்கள் என கட்டளையிடுகிறான்(ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் )
11.ஃப அவ்ஹா இலா அப்திஹி மா அவ்ஹா என்று கூறி ரகசியம் பேசுகிறான்.
12.ஜைனப் ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு அண்ணலாரை திருமணம் செய்து வைக்கிறான் .
இவை அனைத்தையும் விட "நபியே நீங்கள் கூறுங்கள் அல்லாஹ் உங்களை விரும்ப வேண்டுமென்றால் என்னை பின்பற்றுங்கள் அல்லாஹ் உங்களை விரும்புவான் என கூறுங்கள் "
என்று கூறி இம்மை மறுமை அனைத்தும் அண்ணலார் ஹபீப்ﷺ விரும்புவதிலே பின் பற்றுவதிலே இருக்கிறது என்று கூறி நம்முடைய வெற்றி தோல்வி அனைத்தும்,,,
அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின் பற்றுவதிலே இருக்கிறது என்று நமக்கு உறுதியாக சொல்லுகிறான்...!!
அல்லாஹும்ம ஸல்லி அலா ஸையிதினா முஹம்மதின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வ அலா ஆலி முஹம்மதின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வபாரிக் வஸல்லிம் அலைஹி !!
Amir Qathiri
whatsapp
Tags:
படித்ததில் பிடித்தது