பதட்டத்துடன் பென் ஸ்டோக்ஸ்

பதட்டத்துடன் பென் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து ஆல்-ரவுண்டரான நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் மிகவும் பதற்றமடைந்து போட்டியை காண முடியாமல் பெவிலியனில் அமர்ந்திருந்த வீடியோ வைரலாகியுள்ளது.

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நடைபெற்றது.

இந்த தொடர் முழுவதிலுமே அவுஸ்திரேலியாவின் கையே ஓங்கியுள்ளது. ஆனால் இப்போட்டியில் இங்கிலாந்தின் தோல்வியை பிராட் மற்றும் ஆண்டர்சன் ஆகியோர் தடுத்து ஆட்டத்தை டிரா செய்தனர்.

இப்போட்டியின் ஒரு கட்டத்தில் கடைசி 3 ஓவர்களை ஆண்டர்சென்-பிராட் ஜோடி தாக்குப்பிடித்தால் போட்டி டிராகிவிடும் என்ற நிலை வந்தது.

அப்போது இருவரையும் அவுஸ்திரேலிய வீரர்கள் மைதானத்தில் சுற்றி வளைத்து பீல்டிங் செய்தனர்.

இதனால் அவர்கள் அவுட்டாகிவிடுவார்களோ என இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மிகவும் பதற்றமடைந்து போட்டியை காண முடியாமல் பெவிலியனில் அமர்ந்து தவிர்த்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Post a Comment

Previous Post Next Post