கல்ஹின்னை வரலாற்றில் முதன் முதலாக நடந்த மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி

கல்ஹின்னை வரலாற்றில் முதன் முதலாக நடந்த மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி

முன்னாள் உலக பிலியர்ட்ஸ் செம்பியன் மர்ஹூம் எம். ஜே. எம். லாபிர்
ஞாபகார்த்த கேடய கிரிக்கெட் சுற்றுப் போட்டி-1984
மே மாதம் 12, 13, 15, 19, 20ஆம் திகதிகள்
கல்ஹின்னை அல்மனார் மு. ம. வித்தியாலய
விளையாட்டு மைதானம்


Lloyd's Cricket Club GALHINNA

President:S.M.IMTHIYAZ
Secretary:S.H.M.NAEEM
Treasurer:M.C.NIZAMDEEN
Captain :K.M.KAMIL
Vice Captain:J.M.BAKIR
K.M.NAZEER 
MAHINDA PERERA 
S.H.M.NIZAM 
S.H.M.MUNAWAR 
M.Z.M.ZACKY 
S.H.M.NAZEER 
M.J.M.NAZAR 
M.J.M.MUNAS 
M.H.M.FAHMY

LLOYD'S CRICKET CLUB
258/1, KANDY ROAD,
GALHINNA.

    தலைவர் செய்தி .....!    
எமது "லொயிட்ஸ்" கழகம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாத காலமே ஆகின்றது. இக்குறுகிய காலத்துள் நாம் ஏற்றிருக்கும் பொறுப்பு மிகப் பெரியது என்றாலும், எமது உறுப்பினர்களின் ஆர்வமும், அயரா உழைப்பும், எமது கிராமத்தின் விளையாட்டு வரலாற்றில் ஒரு முக்கிய சாதனையை ஏற்படுத்தும் வலிமையை எமக்குத் தந்துள்ளது. எமது கிராமத்தின் கிரிக்கெட் வரலாற்றில் மர்ஹூம் எம். ஜே. எம். லாபிர் ஞாபகார்த்தக் கேடய கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

எமது தாய்த் திருநாடு சர்வதேச தரத்திலான 'டெஸ்ட்' கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பற்றும் இக்காலத்தில் அதற்குரிய தகுதிபெற்ற வீரர்களைத் தயார்படுத்தும் பணி ஒவ்வொரு கிராம மட்டத்திலும் மேற்கொள்ளப்பட வேண்டும். எதிர்காலத்தில் சாதனை படைக்கும் சிறந்த விளையாட்டு வீரர்களை நாட்டுக்களிக்கும் பணியில் எமது கழகமும் தன்னாலான பங்களிப்பைச் செய்ய முன்வந்துள்ளது.

எமதூரின் இளைஞர்கள் அறிவும், ஆற்றலும், தகுதியும் நிரம்பப் பெற்றவர்கள். இவர்களை ஒன்றிணைத்து எமது கிராமத் தில் புதியதொரு விளையாட்டு வரலாற்றை உருவாக்கும் நோக்கத்துடன் லொயிட்ஸ் கழகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நன் நோக்கம் வெற்றிபெற எம்முடன் ஒத்துழைக்குமாறும், எமக்கு நல் ஆலோசனைகள் தந்து, எமது முயற்சி வெற்றிபெற உதவுமாறும் எமதூர் மக்களுக்கு எமது கழகத்தின் சார்பாக அன்பழைப்பு விடுக்கிறேன்! |

எமது முயற்சி வெற்றி பெற அல்லாஹ் அருள்பாலிப்பானாக!

எஸ். எம். இம்தியாஸ்
தலைவர்
LLOYD'S CRICKET CLUB GALHINNA


 நன்றிகள்!  
எங்கள் லொயிட்ஸ் கழகம் கல்ஹின்னையில் முதன் முதலாக  இந்த கிரிகெட் சுற்றுப்போட்டியை நடாத்துகின்றது.

சுற்றுப்போட்டியை நடாத்தத் தீர்மானித்தவுடன் யார் பெயரில் நடாத்த வேண்டும் என்ற கேள்வி எழுந்தது.முதன் முதலாக நடாத்தும் இந்தப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு வழங்கும் கேடயம் புகழ் பெற்ற ஒரு விளையாட்டு வீரரின் நினைவாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எமக்குத் தோன்றியது .அப்பொழுது நமது தாய்த்திருநாட்டிற்கு அகில உலகப் புகழ் பெற்றுத் தந்த உலக பிளியட் வீரர் எம்.ஜே.எம்.லாபிர்அவர்களுடைய பெயர் எமது நினைவுக்கு வந்தது,அவர் பெயரிலேயே இந்த நினைவுக் கேடயத்தை கொடுக்கத் தீர்மானித்தோம்.

இந்தத் தீர்மானத்தை அறிவித்து அனுமதி கேட்டபோது ஜனாப் லாபிர் அவர்களின் துணைவியார் திருமதி எம்.ஜே.எம்.லாபிர் அவர்கள் மகிழ்வுடன் அனுமதி தந்தார்.ஜனாப் லாபிரின் சகோதரர் அல்ஹாஜ் எம்.ஜே.எம்.இஸ்ஸத் அவர்களும் அவரது வரலாற்றுக் குறிப்புக்களை தந்துதவினார் அவர்களுக்கு எமது மனம் கனிந்த நன்றி உரித்தாகும்.

எமக்கு ஆலோசனைகள் கூறி எம்மை உற்சாகமூட்டும் கவிமணி ஜனாப் எம்.ஸீ.எம்/ஸுபைர்,சுற்றுப்போட்டியை நடாத்த எமக்கு ஊகமளித்த ஜனாப் எஸ்.எச்.எம்.தாஜுதீன் .அல்ஹாஜ் எஸ்.எம்.ஸுபைர்,குறுகிய காலத்தில் இச்சிறப்பிதழை அச்சிட்டுத் தந்த டெவலோ அச்சக உரிமையாளர் ஜனாப் என்.எச்.நிலாம்தீன் மற்றும் எமது விளம்பரதாரர்கள் ஆகியோருக்கும் எமது மனம் கனிந்த நன்றிகள்.

இச்சுற்றுப்போட்டியை திறம்பட நடாத்த என்னுடன் ஒத்துழைத்த எமது கழக அங்கத்தவர்களுக்கும் எமது நன்றிகள் .

இச் சுற்றுப்போட்டி எதிர்வரும் காலங்களில் சிறப்பாக நடைபெற இறைவன் அருள் புரியட்டும்.
எஸ்,எச்.எம்.நயீம்.
செயலாளர்.
LLOYD'S CRICKET CLUB GALHINNA



இந்து சமுத்திரத்தின் எழில் முத்து இலங்கை. அந்த ஒளி முத்தின் மணிவயிற்றில் பிறந்து அந்த முத்துக்கே அகில உலகப் புகழ் பெற்றுத் தந்ததொரு தனிமுத்து!

இதுவரை அன்னைத் திருநாட்டுக்கு எவரும் பெற்றுத்தராத தனிப்புகழைப் பெற்றுத் தந்த அந்த முத்து!

- கொழும்பு மெஸஞ்சர் தெரு 'பிலியட்' சக்கரவர்த்தி முஹம்மத் ஜூனைத் அன்புத் தாய் நாட்டுக்குத் தந்த அரும் பரிசு!

தாய் நாட்டுக்குத் தனிப்புகழ் தேடித்தந்த அந்த முத்துக்கு அன்புத் தந்தையவர் வைத்த பெயர் தான் முஹம்மது லாபிர்!

அவர் தான் உலக 'பிலியட்' வீரர் எம். ஜே. எம். லாபிர்.

அன்று 1973-12-14 ஆம் திகதி இந்தியாவின் பம்பாய் நகரத்திலே உலக பிலியட் வீரராக வெற்றி பெற்றுத் திகழ்ந்த வீரத் திருமகன் எம். ஜே. எம். லாபிர் நண்பர்களுடன் தங்கியிருந்த அறையில் தொலைபேசி மணி ஒலித்தது!

வீரர் லாபிர் ரிஸீவரை எடுத்தார்.
''உங்களையிட்டு நாங்கள் மிகப் பெருமையடைகின்றோம். அன்பு வாழ்த்துக்கள்''

மிக்க நன்றி'' என்றார் லாபிர்.
அன்று நமது நாட்டுப் பிரதமராயிருந்த திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்காவின் மகிழ்வில் திளைத்த குரல் தான் அது.

ஆம்! நமது அன்னைத் திருநாட்டு வாபிர் அகில உலக வீரர்கள் ஒன்பது பேருடன் ஆடி, அனைவரையும் வென்று அகில உலக பிலியட்' ஆட்ட வீரர் என்ற வெற்றி விருது பெற்றதைப் பாராட்டி நமது பிரதமர் தொலைபேசியில் தெரிவித்த வாழ்த்துக் குரல்தான் அது.

தாய்த் திருநாட்டுக்குத் தனிப்புகழ் தேடித்தந்த லாபிர் திரும்பி வந்தார்.

நமது கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலே பேரரசர்களுக்கு, ஜனாதிபதிகளுக்கு அளிக்கப்படும் அதியுயர்ந்த செங்கம்பள வரவேற்பு வீரர் லாயிருக்கு அளித்து வரவேற்றது. நமது நாடு!

அதைத் தொடர்ந்து மோட்டார் பவனியில் கொழும்பு சோனகர் இஸ்லாமிய கலாசார நிலையத்துக்கு அவர் அழைத்து வரப்பட்டார்.

அங்கு நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில் அன்றைய விளையாட்டமைச்சர் கே பி. ரத்னாயக்கா உரை நிகழ்த்தும் போது 

லாபிர் நமது தாயகத்துக்குப் பெற்றுத் தந்த புகழையிட்டு நாடு முழுவதும் பெருமைப்படுகிறது. அவர் தெரிவு செய்த விளையாட் டின் மூலம் அகில உலகத்திலும் நம் நாட்டுப் புகழைப் பெருக்கி விட்டார். " என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

தலைவர் ஸேர். ராஸிக் பரீத் அவர்கள் -

''இலங்கையின் முதல் உலகச் செம்பியனாகத் தெரிவு செய் யப்பட்ட லாபிர் நம் தாயகத்துக்குப் பேரும் புகழும் சேர்த்துள்ளார்'' என்று குறிப்பிட்டார்.

அன்றைய கல்வி மந்திரி அல்ஹாஜ் கலாநிதி பதியுத்தின் மஹ்மூத்
 ''உண்மையிலேயே நாங்கள் பூரிப்படைகின்றோம் என்று குறிப்பிட்டார்.

அத்தனை பாராட்டுகளையும் அடக்கமாகக் கேட்டுக் கொண் டிருந்த அகிலத்து 'பிலியட் வீரர் லாபிர் நன்றியுரை கூறினார்.

"எனது விளையாட்டின் மூலம் எனது தாய்த்திரு நாட்டுக்கு அகில உலகப் புகழைத் தேடித்தர வேண்டும் என்ற இலட்சியத தோடு நான் உழைத்தேன். அல்லாஹ்வின் பேரருளால், இந்த இலட்சியத்தில் நான் வெற்றி பெற்றேன். எனது வெற்றிக்காகக் களமமைத்துத் தந்து என்னை வளர்த்து, ஊக்கமும், உற்சாகமும் உதவியும் தந்த அத்தனை பேருக்கும், இயக்கங்களுக்கும் எனது நனறியைத் தெரிவித்துக் கொள்றேன்" என்பது அவரது பண் பாட்டின் பிரதிபலிப்பு.

முஹம்மது வாபிர் முழு உலகமும் வியக்கும் விளயாட்டு வீரர். உலகச் செம்பியனாக வெற்றி விருது பெற்றுப் புகழின் உச் சியில் நின்று பிரகாசித்தவர்.

அந்த நிலையிலும், "பணியுமாம் என்றும் பெருமை'' என்ற பண்பாடு அவரை ஆட்கொண்டிருந்தது. அமைதி, அடக்கம், விட் டுக் கொடுக்கும் தன்மை, வெற்றியிலும் தோல்வியிலும் சம நிலையில் நிற்கும் பண்பு, தனக்குத் தெரிந்த விளையாட்டுத் திறமை உத்திகளைத் தன்னுதவியை நாடிப் பயிற்சி பெறுவருபவருக்கும் கற்றுக் கொடுக்கும் பரந்த உள்ளம்; எவருடனும் கலகலப்பாகப் பழகும் சுபாவம். இலட்சியத்தைச் செய்து முடிக்கும்வரை ஏற்படும் இடர்களைக்கண்டு அஞ்சாது. அயராது தொடர்ந்து உழைக்கும் துணிவு, தன்னம்பிக்கை, தாய், நாட்டுப் பற்று ஆகிய தகைமைகள் அனைத்தாலும் ஒரு பண்பட்ட முன்மாதிரியான விளையாட்டு வீரராகத் திகழ்ந்த வர் எம். ஜே. எம். லாபிர்.

வளரும் எமது கழகத்துக்கு அவரது அரும் பண்புகள் அழ சிய முறையில் வழிகாட்டும் என்ற நம்பிக்கை எமக்கு.

ஆகவேதான், நமது சுற்றுப் போட்டியின் வெற்றிக் கேட யத்தை அன்னைத் திருநாட்டுக்கு அனைத்துலகப் புகழ்சேர்த்த அவ ரது நினைவாக அளிக்க முன்வந்துள்ளோம்.

-கொழும்பு மெஸஞ்சர் வீதி இல்லத்தில் முஹம்மது ஜூனைத் அவர்களின் மகனாகப் பிறந்து. பைருல் மிஸ்ரியாவை மணந்து, முஹம்மது அப்ஸல் (13). முஹம்மது ரியாஸ் (11), முஹம்மது பலால் (10), பாத்திமா பர்ளினா. ஆகிய மக்களைப் பெற்று, வெள்ளவத்தை விவேகானந்த விதி. 4 ஆம் இலக்க இல்லத்தில் மகிழ்வுடன் வாழ்ந்த வர் எம். ஜே. எம். லாபிர்.

தந்தையார் பிலியட் வீரராக இருந்தாலும் மகன் லாபிர் 'பிலியட்' விளையாடுவதை ஆரம்பத்தில் ஆதரிக்கவில்லை. எனினும் மகனின் ஆசை விடவில்லை.

ஒரு தும்புக்கட்டுத் தடியும். இரண்டு மாபில்களும், வீட் டுச் சாப்பாட்டு மேசையும் லாபிரின் ஆரம்ப பிலியட் ஆட்டத்துக்குக் கருவிகளாக அமைந்தன. ஆர்வம் வளர்ந்தது. ஆட்டப் பயிற்சியும் சிறந்தது. அவதானித்து வந்த தந்தையாரின் அனுமதியும் கிடைத்தது.

பன்னிரண்டு வயதிலேயே 'பிலியட்' 'ஸ்னூக்கர்' ஆகிய இரண்டு விளையாட்டுகளிலும் திறமை பெற்றவர் லாபிர்.

ஹமீத் அல்-ஹுசைனி வித்தியாலய மாணவர் லாபிர். 19- ஆம் வயதிலேயே அகில இலங்கை பிலியட், ஸ்னூக்கர் விளையாட்டுப் போட்டியிலே செம்பியனானார் லாபிர்.
அகில உலகப் பிலியட் செம்பியனாக வரும்வரையும் அதன் பின்னரும் அவரது சாதனைகள் நம்மை வியப்பிலாழ்த்துவன; 
அவை
1956 ஆம் வருடம் இந்தியா 'ஸ்னூக்கர்' செம்பியன் போட்டியில் முதலிடம் பெற்றுச் செம்பியனானார். தொடர்ந்து பதின்மூன்று வருடம் செம்பியனாகத் தெரிவானார். 
1967-ல் இலங்கையில் நடந்த அகில உலக 'பிலியட்' செம்பியன் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றார். 

1968-ஆம் வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக 'ஸ்னூக்கர்' செம்பியன் போட்டியில் நாலாம் இடத்தைப் பெற்றார். 

1969-ல் லண்டனில் நடந்த 'பிலியட்' போட்டியில் இரண் டாமிடத்தைப் பெற்றார். 

1970-ல் ஸ்கொட்லாந்து பிலியட்' போட்டியில் குறைந்த அளவு புள்ளிகளால் வெற்றி பெறத் தவறினார். 

1971-ல் மோல்டா தீவில் நடந்த உலக பிலியட் போட்டியில் நாலாமிடத்தைப் பெற்றார். 

1972-ல் அயர்லாந்து சென்று அகில உலக 'ஸ்னூக்கர் போட்டியில் நாலாமிடத்தைப் பெற்றார்.

 1973-ம் வருடம் இந்தியா, பம் பாயில் நடந்த உலக 'பிலியட்' செம்பியன் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றார். 

1978-ம் வருடம் இந்தியாவில் 'பிலியட்' 'ஸ்னூக்கர்' போட்டிகளில் முதலாம் இடத்தைப் பெற்றார். '

 1979-ல் இலங்கையில் நடந்த பிலியட் போட்டியில் நாலாமிடத்தைப் பெற்றார்.

வெற்றியைக் கண்டு மமதை கொள்ளாமலும், தோல்வியைக் கண்டு துவண்டு விடாமலும் இருப்பது வீரர் லாபிரின் வியத்தகு பண்பாகும்.

1930 - 05 - 27-ல் பிறந்து அன்னைத் திருநாட்டுக்கு விளையாட்டுத் துறையில் இதுவரை அடையமுடியாத புகழை ஈட்டித் தந்த அகில உலக பிலியட்ஸ் வீரர், எம். ஜே எம். லாபிர் 26 - 04- 81-ல் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். 

அவர் நாமம் ஆண்டாண்டு காலம் வாழும்!

அன்னைத் திருநாட்டுக்கு அகில உலகப் புகழ் தேடித் தந்த தனிப்பெரும் விளையாட்டு வீரர் லாபிர். அவர்களை கௌரவிக்குமுகமாக, அன்னாருக்கு அரசாங்கம் நினைவு முத்திரை வெளியிட்டு நன்றி தெரிவிக்கவேண்டும், என்று நமது கல்ஹின்னை லொயிட்ஸ்' கிரிகெட் கழகம் நயமாக வேண்டிக் கொள்கிறது.
LLOYD'S CRICKET CLUB
GALHINNA

  லொயிட்ஸ்   

எஸ். எம். இம்தியாஸ் 
எஸ். எச். எம். நயீம் 
எம். ஸீ. எம். நிஸாம்தின் 
கே. எம். காமில் 
ஜே. எம், பாகிர் 
கே. எம். நஸீர் 
மகிந்த பெரேரா 
எஸ். எச். எம். நிஸாம் 
எஸ். எச். எம். முனவ்வர் 
எம். இஸட். எம். ஸக்கி 
எஸ் எச். எம். நஸீர்ர் 
எம். ஜே. எம். நஸார் 
எம். ஜே. எம். முனாஸ் 
எம். எச். எம் பஹ்மி

  எவர்டென்   

எம். ஐ. எம். இஸ்ஹாக் 
எம். எச். அப்துல்லா 
எம். எச். எம். பாயிஸ் 
ஏ. ஆர். எம். ஹில்மி 
எம். ஜே. எம். நயீம் 
இஸட். எம். மாஹிர் 
எப். எம். தஸ்லீ ம் 
எம். எச். எம். ஸாபி 
எம். ஐ. எம். மஹ்பூப் 
எம். ஐ. எம். இல்யாஸ் 
எஸ். எம். மௌஜுத் 
எச். எம். தையூப் 
எம். ஸீ. எம். மன்சூர் 
எம். எச். எம். அப்துல்லா

  லக்கி ஸ்டார்ஸ்   

எஸ். எம் ஸஹீல் 
எம். டி. அமானுல்லா 
எஸ். எம். அமீன் 
ஏ. எம். அப்துல்லா 
எம். எப். எம். இஸ்ஸாக் 
எஸ். எம். நஸீம் 
எம். எச். எம். நவாஸ் 
எம். எச். எம். அப்துல்லா 
எம். ஸீ. எம். அக்பர் 
எம், எஸ். எம். காமில் 
எம். டி. ரஹ்மத்துல்லா 
எம். எம். ஹில்மி 
எம். இஸட். எம். தஸ்லீம்

  கல்ஹின்னை அல்மனார் மஹா வித்தியாலயம் 

எம். ஸீ. எம். நயீம் 
ஏ. எம். எம். ஜிப்ரி 
ஏ. ஏ. எம். மன்சூர் 
எம். என் எம். அக்ரம் 
ஜே. எம். ஜெஸ்லி 
எஸ். எம். அஸ்ஹ ர் 
வை. எஸ். அஷ்ரப் 
டி. எம். அஸ்மி 
ஜே. எம். அஷ்ரப் 
எஸ். எம். ஜவ்பர் 
டி. எம். ஆரிப்
 ஏ. எம். நவ்பர் 
ஜே. எம். அஸ்லம்


Post a Comment

Previous Post Next Post