மர்ஹும் எஸ்.எம். ஹனிபாவும் அவர் வளர்த்த கல்ஹின்னை தமிழ் மன்றமும்

மர்ஹும் எஸ்.எம். ஹனிபாவும் அவர் வளர்த்த கல்ஹின்னை தமிழ் மன்றமும்


கண்டி மாநகரிலிருந்து பன்னிரு மைல் தொலைவில் அமைந்துள்ளது கல்ஹின்ன என்ற சிறு கிராமம். இக் கிராமத்தின் பெயரை ஈழத்து இலக் கிய வரலாற்றிலும், தமிழ்ப் பதிப்புலக வரலாற்றிலும் இடம்பெறச் செய்த பெருமை கல்ஹின்ன தமிழ் மன்றத்திற்குரியது. இந்தத் தமிழ் மன்றத்தை அந்த மண்ணில் வித்தூன்றி, அதன் முளை கண்டு, அது பின்னர் கிளைவிட்டு மரமாகக் கண்ட பெருமை பிரபல தமிழறிஞரும். சட்டத்தரணியுமான அல்ஹாஜ் எஸ்.எம்.ஹனிபா (24.06.1927 -29.05.2009) அவர்களுக்குரியது.

தமிழ்ப்பணியும் சமூகப்பணியும் தன் வாழ்வுடன் இரண்டறக் கலந்துவிட்ட நிலையில் அமைதியாக கல்ஹின்னை தமிழ் மன்றத்தின் வாயிலாக நூற்றுக்கும் அதிகமான நூல்களை வெளியிட்டு வைத்துள்ள அமரர் எஸ்.எம்.ஹனிபா பற்றிய சில நினைவுக் குறிப்புகளை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதும்
அவரை நினைவுகூர்வதும் இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.

நூல்வெளியீட்டுத் துறையிலே ஐம்பது வருடங்களுக்கும் மேலாக ஈடு பட்டு 105 நூல்களைத் தாயகத்தில் வெளியிட்டுச் சிறப்பிடம் பெற்றுத் திகழ்ந்த ஒருவர் எஸ்.எம்.ஹனீபா அவர்கள். சுமார் ஐந்து தசாப்த காலமாக இப்பணியில் அயராது ஈடுபட்டுப் பல எழுத்தாளர்களையும் ஊக்கப்படுத்தி கைதூக்கிவிட்ட கல்ஹின்ன தமிழ்மன்றத்தின் தாபகர் என்ற பெருமை இவருக் குரியது. இன்று கல்ஹின்னை என்றால் அமரர் எஸ். ஹனீபாவின் பெயரும், தமிழ்மன்றமும் கூடவே நினைவுக்கு வந்துவிடுகின்றன. தன் பதிப்பகத்தின் வாயிலாக அவர் பிறரது எழுத்து முயற் சிகளை ஊக்குவித்ததுடன் நில்லாது தானே சுயமாக எழுதியும் தமிழ் இலக்கி யத்துக்குப் பெரும்பங்காற்றி வந்திருக் கின்றார்.

கல்ஹின்னைக் கிராமத்தின் செல் வாக்கு மிக்க குடும்பமாகவிருந்த செய்யத் ஹாஜியார், ஸபியா உம்மா தம்பதியினரின் மகனாக 24.06.1927இல் ஹனிபா பிறந்தார். அந்நாளில் பிர பல்யம் பெற்றிருந்த நாகூர் பிச்சை லெப்பை என்ற அறிஞரிடம் ஆரம்ப மார்க்கக் கல்வியைப் பெற்றுக் கொண்டார். தன் ஆறாம் வயதிலேயே மார்க்க அறிவைப் பெற்று கமாலியா முஸ்லிம் பாடசாலையில் (இன்று அல் மனார் மகாவித்தியாலயம்) சேர்க்கப் பட்டு, பின்னர் ஆங்கிலக் கல்வியைப் பெறும் பொருட்டு மாத்தளை விஜய கல்லூரியில் இணைந்துகொண்டார். பின்னாளில் கொழும்பு சாஹிரா கல் லூரியில் சேர்ந்து கொழும்பிலிருந்த இலங்கைப் பல்கலைக்கழகத்திற்கு 1951இல் தேர்வு பெற்றார்.

பல்கலைக்கழக வாழ்வில் பேராசிரியர் சு.வித்தியானந்தனின் முதல் மாணாக்கர்களுள் ஒருவராக எஸ்.எம். ஹனிபா விளங்கியுள்ளார். பேராசிரியர் சு.வித்தி யானந்தன் லண்டனிலிருந்து தன் பட்டப்பின்படிப்பை முடித்துக்கொண்டு 1950ஆம் ஆண்டு கொழும்பு திரும்பி, இலங்கைப் பல்கலைக்கழகத்தில் (அன்று இலங்கையில் ஒரேயொரு பல் கலைக்கழகமே இருந்தது) தமிழ் விரி வுரையாளராகக் கடமையாற்றினார். 1951 ஜுலை மாதத்தில் தமிழை 1951 ஜூலை மாதத்தில் தமிழை ஒரு பாடமாகக் கற்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுள் எஸ்.எம். ஹனிபாவும் அடங்கியிருந்தார். கல்ஹின்னையிலிருந்து பல்கலைக்கழகத்திற்குச் சென்ற முதல் மாணவனும் இவரேயாவார். பல் கலைக்கழகத் தமிழ்ச்சங்க நடவடிக்கைகளை சு.வித்தியானந்தன் முன்னெடுத்த போது உடனிருந்து உதவியவர் ஹனிபா என்று பேராசிரியர் தனது பல கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார். வித்தியின் நாடகங்களிலும் ஆர்வத்துடன் பங்கேற் றதுடன், தமிழ்ச்சங்கத்தின் 'இளங்கதிர்” இதழின் ஆசிரியராகவும் 1952இல் ஹனிபா பணியாற்றியுள்ளார்..

பல்கலைக்கழக மாணவனாக இருந்த காலத்திலேயே எஸ்.எம்.ஹனிபா தனது கிராமத்தில் கல்ஹின்ன தமிழ் மன் றத்தை நிறுவி, நூல்வெளியீட்டு முயற் சிகளில் துணிவுடன் ஈடுபடத் தொடங்கிவிட்டார். கலாநிதி எம்.எம்.உவைஸின் தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம்கள் ஆற்றிய தொண்டு (Muslim contribution to Tamil Literature) என்ற ஆங்கில மொழியிலான நூல்வெளியீட்டோடு எஸ். எம்.ஹனிபாவின் வெளியீட்டுப்பணி 1953இல் ஆரம்பமாகியது. இந்நூல் கலாநிதி உவைஸின் எம்.ஏ.பட்டத்திற்கான ஆய்வாகும். தன் மாணவப் பருவத்திலேயே துணிச்சலுடன் வெளியீட்டுத் துறைக்குள் புகுந்துவிட்டவர் இவர்.

இவர் 1956ஆம் ஆண்டு பட்டதாரி ஆசிரியர் நியமனம் பெற்று ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். தனது இலக்கிய வேட்கை காரணமாக இரண்டு ஆண் டுகளிலேயே ஆசிரியத் தொழிலைத் துறந்துவிட்டு லேக் ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தில் இணைந்து தினகரன் உதவி ஆசிரியராக ஏழாண்டுகள் பணி யாற்றியுள்ளார். தொடர்ந்து Ceylon Observer, Daily News, ஆகிய ஏரிக்கரைப் (Lake House) பத்திரிகைகளிலும் மூன்று வருடங்கள் பணியாற்றியுள்ளார். இக் காலகட்டங்களில் தன் விருப்பத்துக்குரிய சட்டக் கல்வியையும் பயின்று 1973ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சட்டத்தரணியாகிய போதிலும், எஸ்.எம்.ஹனிபாவின் பெயர் தமிழ் இலக்கிய, வெளியீட்டுத் துறைக களிலேயே விதந்து பேசப்படுகின்றது.

1971ஆம் ஆண்டில் இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்திப் பிரிவில் சிரேஷ்ட உதவிச் செய்தி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். 1977ஆம் ஆண்டில் தன் சுயவிருப்பின் பேரில் இவர் இப்பதவியிலிருந்தும் இராஜி னாமாச் செய்தார்.

இவர் 1982இல் மலையகக் கலை இலக்கிய பேரவையின் உபதலைவரா கவும், 1984ஆம் ஆண்டு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஆயுட்கால உறுப் பினராகவும், அதன் இலக்கியக்குழுச் செயலாளராகவும். 1986ஆம் ஆண்டு கொழும்பு மாளிகாவத்தை தேசியக் கவுன்சில், வை.எம்.எம்.ஏ யின் கௌரவ சட்ட ஆலோசகராகவும் பணியாற்றி யுள்ளார்."

இளம் வயது முதலே பாடசாலை மலர்களிலும், தேசியப் பத்திரிகைகளிலும் தன் படைப்புக்களை எழுதி வந்த எஸ்.எம்.ஹனிபா மார்ச் 1948இல் 'சமுதாயம்" என்ற காலாண்டுச் சஞ்சிகையினைத் தன் சொந்தச் செலவில் சில காலம் நடத்திவந்துள்ளார். இதன் காரணமாகப் பின்னாளில் 'சமுதாயம் ஹனிபா" என்று நண்பர்களால் அழைக்கப்பட்டு வந்துள்ளார்.

இவர் எழுதிய நூல்களுள் உலகம் புகழும் உத்தமத் தூதர், துஆவின் சிறப்பு, ஆகிய இரண்டு நூல்களும் சமயம் சார்ந்தவையாகும். The Great Son, மகாகவி பாரதி, உத்தமர் உவைஸ் ஆகியவை வாழ்க்கைச் சரிதங்களாகும். இஸ்லா மிய இலக்கிய வளர்ச்சி, இலக்கிய மறு மலர்ச்சி ஆகிய இரு நூல்களும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் திறனாய்வு நூல்களாகும். எங்கள் ஊர் கல்ஹின்னை, Money Power பணப்பசி (குறுநாவல்) ஆகிய நூல்களும் இவரது பெயர் சொல்லும் நூல்களாகும். தான் எழுதிய நூல்களைவிட பிற அறிஞர்களினதும், படைப்பாளிகளினதும் நூல்களை வெளியிடுவதிலேயே எஸ்.எம். ஹனிபா அதீத அக்கறை காட்டிவந்துள்ளார்

இவரைப்பற்றி அமரர் பீ.எம்.புன்னியாமீன் குறிப்பிட்ட கீழ்க்கண்ட வாசகங்களின் வாயிலாக எஸ்.எம்.ஹனீபாவின் குணாதிசயத்தினை எளிதில் விளங்கிக்கொள்ள முடியும்.

"இவ்விடத்தில் ஒரு சிறிய விடயத்தை மனந்திறந்து குறிப்பிடல் வேண்டும். ஒரு எழுத்தாளன் என்ற அடிப்படையில் இன்று நான் 150 புத்தகங்களை எழுதி வெளியிட்டாலும்கூட ஏதோ ஒரு வகையில் புத்தக வெளியீட்டில் எனக்கு உத்வேகத்தைத் தந்தவர் அல்ஹாஜ் எஸ். எம். ஹனிபாவே. 1979ஆம் ஆண்டில் என் முதல் சிறுகதைத் தொகுதி 'தேவைகள்" எனும் தலைப்பில் வெளி வந்த பின்பு சுமார் ஏழாண்டுகள் எந்த வொரு புத்தகத்தையும் நான் வெளியி டவில்லை. அதற்குரிய நிதிவசதிகளும் என்னிடம் இருக்கவில்லை.

இந்நிலையில் அப்போதைய மாளிகா வத்தை வை.எம்.எம்.ஏ.யின் செயலாளர் நாயகம் அஸ்ரப் ஹாசிமினால் எஸ்.எம். ஹனிபாவிடம் நான் அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன். எமது முதல் அறிமுகத்துடனே எனது இரண்டாவது நூலான 'நிழலின் அருமை"யை கல்ஹின்னை தமிழ்மன்றத்தின் 28ஆவது வெளியீடாக வெளியிட அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா ஒப்புக்கொண்டார். 1986 மார்ச்சில் அப் புத்தகம் வெளிவந்தது.

அவரின் சுறுசுறுப்பும், பழகும் சுபாவமும், விருந்தோம்பும் பண்பும், அவரின் தமிழ் இலக்கியப் பணிகளும் என்னை வெகுவாகக் கவர்ந்ததினால் அவரைப் பற்றிய ஒரு ஆய்வினை மேற்கொள்ள நான் முடிவெடுத்தேன். இதன் விளைவாக 1987ஆம் ஆண்டு 'இலக்கிய உலா", 'இலக்கிய விருந்து" ஆகிய இரண்டு நூல்களை நான் எழு தினேன். 'இலக்கிய உலா" அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபாவின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளை உள்ளடக் கியது. இந்நூலின் முதலாவது பதிப்பு
1987ஆம் ஆண்டு மே மாதம் வெளிவந் தது. சென்னை மில்லத் பப்ளிகேஷன்ஸ் இந்நூலை வெளியிட்டது. 'இலக்கிய விருந்து" அதுவரை கல்ஹின்னை தமிழ் மன்றம் வெளியிட்டிருந்த முதல் 30 நூல்களைப் பற்றிய ஆய்வு நூலாக அமைந்தது. இந்நூல் கல்ஹின்னை தமிழ்மன் றத்தின் வெளியீடாக 1977 ஏப்ரல் மாதம் வெளிவந்தது. இதே காலக்கட்டத்தில் இந்தியா அல்பாசி பப்ளிஷர்ஸ் வெளி யீடாக எனது 'அடிவானத்து ஒளிர்வுகள்" நாவல் வெளிவரவும் பூரண ஒத்துழைப்பினை அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபாவே வழங்கினார்.

இவ்வாறாக இரண்டாண்டுகளுக்குள் என்னுடைய நான்கு புத்தகங்கள் அச்சாவதற்கு ஒத்துழைத்திருந்தார். அச்சீட் டுத்துறையிலும், வெளியீட்டுத்துறை யிலும் பல்வேறுபட்ட நுணுக்கங்களை எனக்கு அவர் போதித்தமையினாலேயே பிற்காலத்தில் என்னால் சுயமாக 150 புத்தகங்களை எழுதி வெளியிடவும், அவரு டைய அடிச்சுவட்டைப் பின்பற்றி எனது வெளியீட்டு நிறுவனமான 'சிந்தனை வட்டத்தின்" மூலம் 300க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிடவும் முடிந் துள்ளது."
இது அமரர் புன்னியாமீனின் வரிகள்.

இவர் கனிவான சுபாவமும் முத் தமிழ்ப் பற்றும் விரிந்த உள்ளமும் விசா லமான சிந்தனைகளும் உடையவர். பல் கலைக்கழகத்தில் தனக்கு ஆசான்களாக விளங்கிய பேராசிரியர்கள் க.கணபதிப் பிள்ளை, சு.வித்தியானந்தன் ஆகியோர் மீது பெருமதிப்பும் பெரு விருப்பும் கொண்டவர். அவரது தமிழ்ப் பற்றி னையும், இலக்கியப் பணிகளையும் தமிழ் அறிஞர்கள் மீது வைத்திருக்கும் பெரு மதிப்பையும் வியக்கத்தக்க அவரது நூல் வெளியீட்டுப் பணிக 1987ஆம் ஆண்டு மே மாதம் வெளிவந் தது. சென்னை மில்லத் பப்ளிகேஷன்ஸ் இந்நூலை வெளியிட்டது. 'இலக்கிய விருந்து" அதுவரை கல்ஹின்னை தமிழ் மன்றம் வெளியிட்டிருந்த முதல் 30 நூல் களைப் பற்றிய ஆய்வு நூலாக அமைந் தது. இந்நூல் கல்ஹின்னை தமிழ்மன் றத்தின் வெளியீடாக 1977 ஏப்ரல் மாதம் வெளிவந்தது. இதே காலக்கட்டத்தில் இந்தியா அல்பாசி பப்ளிஷர்ஸ் வெளி யீடாக எனது 'அடிவானத்து ஒளிர்வுகள்" நாவல் வெளிவரவும் பூரண ஒத்துழைப் பினை அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபாவே வழங்கினார்.

இவ்வாறாக இரண்டாண்டுகளுக்குள் என்னுடைய நான்கு புத்தகங்கள் அச் சாவதற்கு ஒத்துழைத்திருந்தார். அச்சீட் டுத்துறையிலும், வெளியீட்டுத்துறை யிலும் பல்வேறுபட்ட நுணுக்கங்களை எனக்கு அவர் போதித்தமையினாலேயே பிற்காலத்தில் என்னால் சுயமாக 150 புத் தகங்களை எழுதி வெளியிடவும், அவரு டைய அடிச்சுவட்டைப் பின்பற்றி எனது வெளியீட்டு நிறுவனமான 'சிந்தனை வட்டத்தின்" மூலம் 300க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிடவும் முடிந் துள்ளது.
"இது அமரர் புன்னியாமீனின் வரிகள்.

இவர் கனிவான சுபாவமும் முத்தமிழ்ப் பற்றும் விரிந்த உள்ளமும் விசாலமான சிந்தனைகளும் உடையவர். பல்கலைக்கழகத்தில் தனக்கு ஆசான்களாக விளங்கிய பேராசிரியர்கள் க.கணபதிப் பிள்ளை, சு.வித்தியானந்தன் ஆகியோர் மீது பெருமதிப்பும் பெரு விருப்பும் கொண்டவர். அவரது தமிழ்ப் பற்றி னையும், இலக்கியப் பணிகளையும் தமிழ் அறிஞர்கள் மீது வைத்திருக்கும் பெரு மதிப்பையும் வியக்கத்தக்க அவரது நூல் வெளியீட்டுப் பணிகளையும் ஆய்வு முயற்சிகளையும் பலர் பலவாறெல்லாம் பாராட்டிக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியிருக் கிறார்கள். அனைவரும் இவரது இன, மத, பேதம் கடந்த தமிழ் இலக்கியப் பணிகளை விதந்து கூறியிருக்கிறார்கள். ஒருபுறம் அகண்டு விரிந்த தமிழ் இலக் கிய உலகிற்கும், மறுபுறம் அவ்வுலகின் மிக முக்கிய கூறாக விளங்கும் இஸ்லா மியத் தமிழ் இலக்கிய உலகிற்கும் அவர் ஆற்றியுள்ள பணிகள் என்றும் நிலைத்து நிற்கக் கூடியன.

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மாணவியாக இருந்த சியாமா யூசுப் என்பவரால் 'இலக்கியச் சுவடுகள்" என்ற அரிய நூல் ஒன்று 2001இல் எழுதப்பட்டுள்ளது. இந்த நூல் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைச் சிறப்புப் பட்டமாணித் தேர்வுக்காக சியாமா யூசுப் சமர்ப்பித்த ஆய்வேட்டின் நூல்வடிவமாகும். அந்த ஆய்வு முற்றாகத் அறிஞர் எஸ்.எம். ஹனிபாவின் தமிழ்ப்பணிகள் பற்றி யதாகும். 1953 ஆகஸ்ட் மாதம் தமிழ் மன்றத்தின் ஆரம்பம் முதல் 1998ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குரிய வரலாற்றையும் அதனூடாக அறிஞர் ஹனிபாவின் தமிழ்ப் பணியையும் இந்நூலில் பதிவு செய்துள்ளார். தமிழ் மன்றம் 100 நூல்களுக்கு மேலாக வெளியிட்டு வைத்துள்ள நிலையில் 1998ஆம் ஆண்டு வரை தமிழ்மன்றத் தினால் வெளியிடப்பட்ட அனைத்து நூல்களையும் சியாமா யூசுப் இலக்கியச் சுவடுகள் என்ற இந்த நூலில் ஆய்வு  செய்துள்ளார்.

2001ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்மன்றத்தின் 100ஆவது நூல் வெளியீடு இடம் பெற்றுள்ளது. 'மலை ஒளி" என்ற அந்த நூலின் வெளியீட்டு விழாவன்று அறிஞர் ஹனிபாவுக்கு தமிழ்க்காவலர் என்னும் பட்டமும் வழங்கிக் கௌரவிக்கப் பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவர் 2009இல் மறைந்தவேளை அவருக்கு வயது 83ஆகும். ஈழத்து இலக்கியப் பரப்பில் நின்று நூல் வெளி யீட்டில் தன் வாழ்வின் பெரும்பங்கைக் கழித்த முதுபெரும் அறிஞர் அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபாவின் இறுதி நூலாக 'சோனியா சரிதை" என்ற நூலை கல்ஹின்ன தமிழ் மன்றத்தின் 105ஆவது வெளியீடாக டிசம்பர் 2005இல் வெளி யிட்டிருந்தார். அயராத  தமிழ்ப்பணியில் ஈடுபட்டிருந்த அவர் தன் வாழ்வின் இறுதிப் பகுதியை கொழும்பின் பொரளைப் பகுதியில் அமைந்திருந்த அவரது இல்லத்தில் அமைதியாகக் கழித்து வந்தார்.

எம்மைவிட்டுப் பிரிந்தாலும் இலங்கை தமிழ் இலக்கியத்துக்கும், இலக்கியவாதிகளுக்கும் அல்ஹாஜ் எஸ். எம். ஹனிபாவினால் வழங்கப்பட்ட ஆதரவும், ஒத்துழைப்பும், வழிகாட்டலும் என்றும் மறக்கமுடியாதவை.

என்.செல்வராஜா 
(நூலியலாளர், லண்டன்)
Virakesari illustrated weekly 
Sunday, July 23, 2023

Post a Comment

Previous Post Next Post