குற்றவாளியிடம் விசாரணை செய்யாமல் எந்த ஒரு முடிவையும் நீதிபதியால்கூட எடுக்க முடியாது-பூதல்கஹா விவகாரம்

குற்றவாளியிடம் விசாரணை செய்யாமல் எந்த ஒரு முடிவையும் நீதிபதியால்கூட எடுக்க முடியாது-பூதல்கஹா விவகாரம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் வபரக்காத்துஹு.
கல்ஹின்னை ஜும்மாப் பள்ளிவாசல் நிர்வாகத்தின் கவனத்திற்கு!
நண்பர்களே! இஸ்லாம் பற்றிய விடயங்கயை பிற சகோதரனுக்குச் சொல்வதும் கடைமையான விடயமே..மற்றவர்களுக்குச் எடுத்துச் சொல்வதன் முலம் நன்மையை ஏவி தீமையை தடுக்க முடியும். இதன் முலம் மறுமையில் இறைவனிடம் நற்கூலியையும் பெற்றுக்கொள்ளலாம்.
பூதல்கஹா மகளாவைச் சேர்ந்த ஜனாப் ஜெமீல் ஜமால்தீன் (C.T.B) பஸ் சாரதி அவர்கள் மது அருந்திய நிலையில் புதல்கஹா தைக்கியாப் பள்ளிவாசலுக்குள் சென்று சுயநினைவு அற்றநிலையில் சில சேதங்களை உண்டுபண்ணியது அப்பிரதேச மக்களுக்கு மற்றுமின்றி முஸ்லிம் சமூகத்திற்கே கவலைக்குரிய ஓர் விடயமாகும்.

இருந்தபோதும் அவர் 23,ம் திகதி பிப்ரவரி மாதம் 2022,யில் புதன்கிழமை அஷர் தொழுகைக்கு சென்று அப்பிரதேச ஜமாத்தார்களுடன் ஓன்று சேர்ந்த தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டதையும் காணக்கூடியதாக இருந்தது அல்ஹம்துலில்லாஹ்.

அதுமட்டுமல்ல தன்வீட்டில் இருந்து தக்கியாப் பள்ளிக்கு தொழுகைக்காக வெளியாக முன்பே பூதல்கஹா தக்கியாப் பள்ளியின் நிர்வாகப் பொறுப்பாளர்யாக இருக்கும் அல்-ஹாஜ் பசீல் அவர்களை தொலைபேசி மூலம். ஜனாப் ஜெமீல் ஜமால்தீன் தொடர்பு கொண்டு தான் செய்த தவறுக்காக அல்லாஹ்விடமும் தவ்பா செய்து கொண்டிருக்குகிறேன் என்றும் அத்தோடு உங்கள் இடத்திலும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

விசாரணைக்கு முன்பாகவே சம்பவத்தின் ஒளிநாடாவை பகிரங்கப்படுத்திய நபர் யார்? என்பதை தேடாது அதற்கான நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பது தனக்கும் தன் குடும்பத்தார்களுக்கும் மிகக் கவலையும் ஏற்படுத்தியுள்ளது என அறிவித்தார்.

அதேசமயம் அப்பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமராவில் பதிவுக்குள்ளாகும் அனைத்து நிகழ்வுகள் பூதல்கஹா தக்கியப்பள்ளி நிர்வாகமே பொருப்பனதாகும் என்பதை நாம் அறிவோம், 

இன்று 24,ம் திகதி பெப்ரவரி மாதம் 2022,யில் இஷா தொழுகைக்கு பிறகு கல்ஹின்னை ஜும்மாப் பள்ளிவாசல் நிர்வாகசபை உறுப்பினரான அல்-ஹாஜ் பரீசிடீன் அவர்கள் ஜனாப் ஜெமீல் ஜமால்தீன் அவர்களை இவ்விடயம் சம்பந்தமாக விசாரணை செய்வதற்காக கல்ஹின்னை ஜும்மாப் பள்ளிவாசலுக்குள் அழைத்து வரப்பட்டார். 

உண்மையிலேயே நல்லதோர் முயற்சி, ஊர் பொறுப்பு வாய்ந்த ஒரு நிர்வாகம் என்றும்,எதற்காகவும் ஒருதலைப்பட்சமான தீர்மானம் எடுக்க கூடாது முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டுமென அன்பாய் வேண்டிக்கொள்கிறேன்.

அத்தோடு ஒலிநாடாவை விசாரணைக்கு முன்பே வெளியிட்டவர்கள் யார் என்பதையும் அக் குடும்பத்தார்களுக்கு அறியப்படுத்துங்கள் அதுவே முஸ்லிங்களின் அழகிய பண்பாகும்.  

எனவே அப்பள்ளியில் இருக்கும் நிர்வாக சபை அல்லாஹ்வுக்கு மாத்திரம் பயந்தவர்களாக இவ்விடையத்தில் உண்மையான ஓர் நிர்வாகமாக கவனம் செலுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

CCTV ஒழி நாடாக்களை வெளியிட்டு ஒரு மனிதனை அவமானப்படுத்திய அத்தனை பொறுப்பையும் அந்தப் பள்ளி நிர்வாகம்தான் ஏற்க வேண்டும். 

அதுமட்டுமல்லாமல் சட்டப்படி குற்றம் என்பதையும் மறந்துவிட வேண்டாம். 

ஒருவர் எதோ ஒரு வகையில் குற்றம் புரிந்தால் அவரிடம் விசாரணை செய்யாமல் எந்த ஒரு முடிவையும் நீதிபதியால்கூட எடுக்க முடியாது.அப்படியிருக்கும்போது ஒரு பள்ளி நிர்வாகம் இப்படிப்பட்ட கீழ்த்தரமான காரியத்தை செய்துள்ளது மிகவும் கவலைக்குரிய விடயமும் ,சிந்திக்க வேண்டிய விடயமும் கூட.

நபி ஸல்) கூறுகின்றார்கள் ; மஹ்ஸர் நெருங்கும்போது தகுதியில்லாதவர்களின் கையில் தலைமைத்துவம் இருக்கும் என்று .அது கல்ஹின்னைக்கு மிக,மிக பொருத்தமான ஒரு ஹதீஸ் .

Post a Comment

Previous Post Next Post