சோதனையிலும் பொறுமை வேண்டும்'-கல்ஹின்னை மஸ்ஜித் நிர்வாகத் தலைவரின் அறிவுரை

சோதனையிலும் பொறுமை வேண்டும்'-கல்ஹின்னை மஸ்ஜித் நிர்வாகத் தலைவரின் அறிவுரை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் வபரக்காத்துஹு.
எப்படியெல்லாம் வாழலாம் என்று வாழும் இன்றைய மானிட சமூகத்தில் இப்படித்தான் வாழணும்னு தனக்கென்று ஒரு கொள்கையை வகுத்துக் கொண்டு வாழும் மனிதர் எத்தனை பேர்? தான் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கும் சமூகத்தில் தன்னைச் சூழ்ந்த சமூகமும்

துன்பமின்றி வாழனும் என்ற உயர்ந்த எண்ணம் எங்களில் எத்தனை பேருக்குத்தான் வரும்?எல்லா வசதி,வாய்ப்புகள்  இருந்தாலும் மற்றவர்களுக்கு உதவணும்கிற மனம் எல்லோர்க்கும் எளிதில் வருவதில்லை.தனது உறவுகளுக்கே உதவும் மனமில்லாத உறவுகள் மத்தியில்,தனது உறவுகள் மட்டுமல்லாது முகமறியா உறவுகளுக்கும் உதவணும்கிற கருணை உள்ளம் கொண்ட ஓர் பிறவிதான் கல்ஹின்னை பெரிய ஜும்மாப் பள்ளிவாசலின் தற்போதைய நிர்வாக சபையின் தலைவர் அல்-ஹாஜ் ரியாஸ் லதிப் அவர்கள் 25,ம் திகதி பெப்ரவரி 2022, அன்று ஜும்மாத் தொழுகையின் பிறகு ஊர் ஜமாத்தார்களுக்கு ஒலிபெருக்கி மூலம் முஸ்லிம் ஆகிய நாம் உலகில் வாழும்போது எப்படி வாழ்ந்துகொள்ள வேண்டுமென மிக அருமையாக எடுத்துரைத்தார் அல்ஹம்துலில்லாஹ்.

அதாவது கடந்த 20,ஆம் திகதி பூதல்கஹா தக்கியப்பள்ளியில் நடந்து முடிந்த ஓர் சம்பவத்தில் அப்பிரதேச வாசியான ஒருவர் அறிய நிலையில் மற்றவர்கள் வெறுக்கத்தக்க ஓர் செயலில் ஈடுபட்டார். இருந்த போதும்கூட கல்ஹின்னை பெரிய ஜும்மாப் பள்ளிவாசலின் தற்போதைய நிர்வாக சபையின் தலைவர் அல்-ஹாஜ் ரியாஸ் லதிப் அவர்கள். மிக பொறுமையாக, திறமையாக அவ்விடயத்தில் செயல்பட்டு ஊரின் தன்மானத்தை காத்துநின்றார் அல்ஹம்துலில்லாஹ்.


சோதனையில் பொறுமை:
ஆதமின் மகனே! சோதனை ஏற்பட்ட ஆரம்பக் கட்டத்திலேயே பொறுமையைக் கடைபிடித்து, என்னிடத்தில் கூலியையும் எதிர்பார்த்தால் அதன் கூலியாக சொர்க்கத்தை தவிர வேறு எதனைத் தரவும் நான் விரும்ப மாட்டேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூ உமாமா -ரலி, நூல்: இப்னுமாஜா)

யாரேனும் நோயாளியை விசாரிக்கச் சென்றால் அல்லது அல்லாஹ்வுக்காக மார்க்கச் சகோதரனைச் சந்திக்கச் சென்றால் -மலக்குமார்களில்- அழைப்பவர் அவரை அழைத்து நீ மிகச் சிறந்த காரியம் செய்தாய்! மிகச் சிறந்த செயலுக்காக அடியெடுத்து வைத்துள்ளாய்! மேலும் இதனால் நீ சொர்க்கத்தில் உனக்கென ஒரு வீட்டை ஏற்படுத்திக் கொண்டாய்! என்று கூறுவார். (நபிமொழி, அறிவிப்பவர்: அபூஹுரைரா-ரலி. நூல்:திர்மிதீ)
இப்படியான சில குர்-ஆன் ஹதீஸ்களையும் எடுத்துக்காட்டி எமதூர் ஜாமியத்துள் உலமா சபை அங்கத்துவர்களினதும் உலமாக்களின் ஆலோசனை பிரகாரம் அந்த மனிதருக்கு 24,ஆம் திகதி பெப்ரவரி 2022,ல் இஷா தொழுகைக்குப் பிறகு மிக கண்ணியமான முறையில் தன் நிர்வாக உறுப்பினர்கள்,மற்றும் பூதல்கஹா தக்கியப் பள்ளி நிர்வாக உறுப்பினர்கள், கல்ஹின்னை உலமாக்களை ஒன்றுசேர்த்து அந்த மனிதருக்கு இஸ்லாமிய பண்பு, ஒழுக்கம், மரியாதை, மற்றவர்கள் முன் ஒரு முஸ்லிம் இவ்வுலகில் எப்படி வாழ்ந்துகொள்ள வேன்றுமென்ற விளக்கத்தை பல மணிநேரம் தன் சிரமம் பாராமல் வழிநடத்திச் சென்றார்,

கல்ஹின்னை பெரிய ஜும்மாப் பள்ளிவாசலின் நிர்வாக சபையின் தலைவர் அல்-ஹாஜ் ரியாஸ் லதிப் அவர்கள். அல்ஹம்துலில்லாஹ்.

தலைவர் அல்-ஹாஜ் ரியாஸ் லதிப் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அழகிய தலைமைத்துவம் என்றால் அவருக்கு நிகர் அவரே என்றால் மிகையாகாது மாஷா-அல்லாஹ்,

எந்தவொரு காரியத்தையும் கையாளும் விதம் கற்ற ஓர் மகான் என்று  சொல்லும் அளவுக்கு பொருத்தமானவர் சுமார் மூன்று வருடகாலத்துக்கு மேல் கல்ஹின்னை ஜும்மாப் பள்ளிவாசலின் நிர்வாகப்பணிகளைப் வழிநடாத்திச் செல்கின்றார் எச்சந்தர்ப்பத்திலும் பக்கசார்பற்ற நிலையிலேயே நடந்து கொள்வார்  அத்துடன் இன்று  (25-02-2022) வெள்ளிக்கிழமை  அவரினால் ஊருக்கு ஜமாத்தார்களின் கவனத்திற்கு அவரின் ஒளிநாடா செய்மதியை வெளிப்படுத்தியுள்ளோம் இத்துடன் இணைத்துளோம்

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: யார் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு தொழுகையையும் கடைப்பிடித்து, ஸகாத்தும் கொடுத்து வருவதுடன், அல்லாஹ்வையன்றி மற்றெவருக்கும் பயப்படாமலும் இருக்கிறார்களோ, அவர்கள்தாம் அல்லாஹ்வுடைய பள்ளிகளைப் பராமரிக்கத் தகுதி உடையவர்கள். இத்தகையவர்கள்தாம் நேரான வழியில் இருப்பவர்கள். (9: 18) 

பள்ளிவாசல் நிர்வாகப் பொறுப்பில் இருப்போர் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் என்னென்ன தன்மைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் உயர்ந்தோன் அல்லாஹ் தெளிவாகக் கூறியுள்ள இவ்வசனத்தைப் படித்த பிறகேனும் ஒவ்வொரு பள்ளிவாசல் தலைவரும் தம் பொறுப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து நபியவர்கள் செயல்படுத்திய திட்டங்களையெல்லாம் தத்தம் மஹல்லாக்களில் செயல்படுத்துவார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழியில் ஒரு பள்ளிவாசலை எவ்வாறு நிர்வாகம் செய்வது, அதன்மூலம் இந்தச் சமுதாயத்திற்கு என்னென்ன பயன்களைக் கொடுக்கலாம் என்பதைத் தெரிந்துகொண்டு அதன்படி செயல்பட்டால் பள்ளிநிர்வாகிகள் ஈருலகப் பயன்களைப் பெறுவதோடு சமுதாய மக்களும் தமக்குத் தேவையான பயன்களை அடைந்துகொள்வார்கள்.

மாஷா-அல்லாஹ் கல்ஹின்னை ஜும்மாப் பள்ளிவாசல் நிர்வாகத் தலைவரைப் போன்று ஏனைய ஊர் தக்கியப் பள்ளி நிர்வாக தலைவர்களும் பக்கசார்பற்று செயல் படவேண்டுமென்று அன்பாய் கேட்டுக்கொள்கிறேன். 




Post a Comment

Previous Post Next Post