நல்ல நட்பினை விட்டு
விலக்குது
தப்பு நட்பினை தேடிக்கொடுக்குது
மனிதகுலத்தின் மதிப்பை
குறைக்குது
உழைக்கும் மனிதனின்
ஊதியம் கரைக்குது!
விடலை பருவத்தை எட்டும்
சிறுவனின்
காதலாக கண்ணில் தெரிகிறது
போதை-மது இன்று
பள்ளி பருவத்தில்
பழகும் பழக்கமாய்
போதை-மதுவின் புழக்கமோ
மலிந்து போனது
உலகில் இன்று
போதை-மது உயிருக்கும்
வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு
என்றிருந்தும் மற்றவர்
அறியாதபடி
பல ஊர்களில் மறைந்திருக்கும்
போதை-மதுவே
இன்று சில மனிதர்களின்
உபதேசமாகிப் போனது!
தரத்திற்கேற்ப தங்கநிற
மது அருந்தும்
மாமனிதன் ஒரு புறம்
உலகில் ஏற்றதாழ்வு
பார்க்காத மது-போதை
ஏழை மனைவியின் இருதயம்
நிரப்பும் கண்ணீர்!
நரம்பு தளர்ச்சியோ
இரும்பு மனிதனுக்கு
சிறுநீரக கோளாறு சீறும் இளைஞனுக்கு
நுரையீரல் பாதிப்பும்
என நூதன பெயரில்
போதை-மதுவினால் வருகுது
நோய்கள்
போர்களம் ஒன்று செய்வோம்
போதை-மது புழக்கத்தை
விரட்டி வெல்வோம்
இளைஞர்கள் சபதம் கொள்வோம்
இனி
உயிர் கொல்லி போதை-மதுவை
தீண்டோம்
தந்தையர் திருந்திட
வேண்டும்
தன் தலைமுறை நலம்தனை
எண்ணி!
இன்ஷா-அல்லாஹ் இனி
ஆயிஷாவுக்கு
நடந்த அந்த
கொடூரம்
நித்தமும் நினைவுகொள்வோம்
எங்கும் போதை-மதுவாசம்
விலகி
அமைதியின் வாசனை வீசட்டும்!
Tags:
கவிதை