இந்த சம்பவத்தை துருக்கியைச் சேர்ந்த ஆலிம் விவரிக்கிறார் பாருங்கள்.
மஸ்ஜித் நபவி வளாகத்தில் இருக்கும் ஒரு கழிவறையின் வெளியே நான்கு காவல் அதிகாரிகள் காத்திருக்கிறார்கள்.அப்போது உள்ளே இருந்து வெளியே வந்துகொண்டிருந்த ஒரு 35 வயது மதிக்கத்தக்க ஒரு அல்பானிய நாட்டைச் சேர்ந்த இளைஞனை அந்த காவலர்கள் கைது செய்கிறார்கள். அந்த இடமும் சற்று சலசலப்பாக காணப்பட்டது,
அந்த இளைஞர் என்னை விடுங்கள் என்றும் நான் என்ன தவறுசெய்தேன் என்றும் அழுது கதறுகிறார். நான் ஒன்றும் திருடனோ கடும்குற்றம் செய்த குற்றவாளியோ இல்லை என்னை விடுங்கள் என்று கதறுகிறார்.
நான் அருகே சென்று அந்த இளைஞனை பார்த்தேன். அந்த இளைஞன் தான் தினமும் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ரவ்ழாவில் அருகே அமர்ந்துகொண்டு அழுதுகொண்டே இருப்பார்.
அதனால் நான் அந்த காவலர்களிடம் அந்த இளைஞனை கைது செய்யாமல் விடுதலை செய்யச் சொல்லி கேட்டேன்,
அதற்கு அந்த காவல் அதிகாரிகள், துருக்கியரே நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் இவன் மீதான குற்றம் தங்களுக்கு தெரியாது என்றார்கள்,
நான் அப்படி என்ன குற்றம் செய்தார் என்று கேட்டேன்
அதற்கு அவர்கள் இவன் இங்கே வந்து ஆறு வருடம் ஆகிவிட்டது விசா பெர்மிட் இல்லாமல் இங்கே இருப்பது குற்றம் என்றார்கள்.
அதுமட்டுமல்ல இவனை கைது செய்ய ஒவ்வொரு முறை முயற்சி செய்யும்போதும் அவன் மஸ்ஜித் நபவி பள்ளிக்குள் சென்று ஒழிந்து கொள்கிறான் பள்ளியில் வைத்து அவனை கைது செய்யமுடியவில்லை
6வருடம் கழித்து இன்று தான் கண்ணில் பட்டான். அதனால் தான் உடனே கைது செய்தோம் என்றும் காவலர்கள் கூறினார்கள்.
இப்பொழுது இவனை நீங்கள் என்ன செய்யபோகிறீர்கள் என்று நான் கேட்டேன் அதற்கு அவர்கள் கைது செய்து அவனது நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைப்போம் என்றார்கள் காவலர்கள்,
அடுத்த விமானத்தில் அவனது நாடான அல்பானியாவிற்கு அனுப்பிவிடுவோம் என்றார்கள்.
இதை கேட்ட அந்த இளைஞன் நான் திருடனோ கடும் குற்றவாளியோ இல்லை என்னை இங்கேயே இருக்க விடுங்கள் நான் இங்கே இருக்க ஒரே ஒரு காரணம் நாயகத்தின்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மீது கொண்ட பேரன்பால் தான் என்றும் கதறினார் அந்த இளைஞர்.
காவலர்கள் அப்படியெல்லாம் இங்கே இருக்க முடியாது என்று அதட்டினார்கள்.
இப்பொழுது அந்த இளைஞர் கூறினார் சரி என்னை எனது நாட்டிற்கு அனுப்பவதற்கு முன்னால் நான் நாயகத்திடம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இறுதியாக ஒருமுறை பேசவேண்டும் என்னை ரவ்ழாவிற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கோரிக்கை வைக்கிறார்.
அந்த காவலர்களும் இளைஞரை அழைத்துச் சென்று பச்சை குப்பா தெரியும்படி நிற்க்க வைக்கிறார்கள்.
அந்த இளைஞன் ரவ்ழாவை பார்த்து அரபியில் இப்படி பேசுகிறார் எஜமானே நான் தங்களிடம் செய்துகொண்ட ஒப்பந்தம் இப்படியா முடிவுர வேண்டும். இதற்காகவா நான் என் தாய் தந்தையரை விட்டு என் தொழில்களை மூடிவிட்டு இங்கே வந்தேன் தங்களுடைய நேசம் மட்டும் போதும் தங்களுடைய அருகாமையில் காலமெல்லாம் இருக்கவேண்டும் என்பதற்காகவே தவிர நான் இங்கே வரவில்லையே.
யா ரஸூலுல்லாஹ் எனக்காக தாங்கள் ஏன் இந்த விஷயத்தில் உதவி செய்யவில்லை என்று அழுதுகொண்டே பச்சை குப்பாவை பார்த்தவாறே கீழே சரிந்து விழுகிறார்
காவலர்கள் அந்த இளைஞரை எழுப்ப முயற்சி செய்கிறார்கள் பொய்யனே நடிக்காதே எழுந்திரு என்று சத்தமிடுகிறார்கள்.
ஆனால் அந்த இளைஞரிடம் எந்த அசைவும் இல்லை.
பிறகு மஸ்ஜித் நபவியின் ஏழாவது வாசல் வழியாக ஆம்புலன்ஸ் வரவைக்கப்பட்டு மருத்துவ சோதனைக்குப் பிறகு அவர் இறந்துவிட்டதை உறுதி செய்தார்கள்.
கைது செய்த காவலர்கள் பெருங்குற்றம் செய்துவிட்டோம் என்ற குற்ற உணர்ச்சியோடு தரையில் அமர்ந்து இப்படி ஒரு முஹப்பத்தா என்று கைசேதப்பட்டார்கள்.
ஜனாஸா உடனே ஜன்னத்துல் பகீயில் ஜானாஸா குளிபாட்டும் இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்ய ஆயத்தம் ஆன நிலையில் அந்த காவல்துறை அதிகாரிகள் அங்கே வந்து நாங்கள் செய்த காரியம் எங்களை காலகாலத்திற்கும் குற்ற உணர்ச்சியோடு வாழ வைத்துவிட்டது இவருடைய நல்லடக்க வேலைகளை நாங்களே செய்கிறோம் என்று கபுரில் இறங்கி அடக்கம் செய்தார்கள் ....
எம்பெருமானார் ரஸூலே கரீம் முத்து முகம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது காதல் கொண்ட ஒரு ஆஷிகீன் அவர் நாயகத்திடம் செய்த ஒப்பந்தம் போலவே அவர்கள் அருகாமையிலே காலாகாலத்திற்கும் இருக்கும் பாக்கியத்தை பெற்றார் ..
மலாய் மொழியின் தமிழாக்கம்
Aziz Ahamed Bin Habib
Tags:
படித்ததில் பிடித்தது