# சப்தம் ஒருபோதும் பிரச்சினையை சுலபமாக்காது.
# முறைப்பாடுகள் அர்த்தம் அற்றதாக ஆகும் போது மௌனம் பல அர்த்தங்களை கற்றுத்தரும்.
# மௌனம் தன்னுடைய இலக்கை அடைந்து கொள்வதற்கு உங்களுக்கு உதவி செய்கிறது.
# மௌனம் உங்கள் வெற்றிக்கு உதவுகிறது.
# மௌனம் அது மிகப்பெரும் வணக்கமாகும்.
# மௌனம் உங்களுடைய தேவையற்ற உணர்வுகளை அடக்கி ஒரு ஆளுமையுள்ள மனிதனாக மாற்றி விடுகின்றது.
# மௌனம் எவ்வாறான ஒரு வணக்கம் என்றால் மலக்குமார்களாலும் அதை பதிவு செய்ய முடியாது ஷைதானாலும் பழுதாக்க முடியாது யாருமே அதனைப் புரிந்து கொள்ள முடியாது.
# சிரித்துப் பேசுபவர்கள் திடீரென மௌனம் கொள்ளும் பொழுது அந்த மௌனத்தின் பின் விரோதிகளுக்கு அச்சம் தோன்றிவிடும்.
# அவமதிக்கப்பட்டவனின் மௌனத்தை பயந்து கொள்ளுங்கள்.
# இரண்டு விடயங்கள் மனிதனை பலவீனமானவனாக ஆக்கி விடுகின்றது
ஒன்று மௌனம் காக்க வேண்டிய நேரத்தில் பேசுவது. மற்றது பேச வேண்டிய இடத்தில் மௌனம் காப்பது.
# மௌனம் மிகவும் சிரமமானது ஆனால் எதிரிக்கு மௌனியின் மௌனம் மிகப்பெரிய தண்டனையாகும்.
# மௌனிகளின் துஆவும் பாசமும் மிகவும் சக்தி வாய்ந்தது.
# மௌனம் அர்த்தமுள்ளது. அது கவலைகளையும் வேதனைகளையும் மனிதனின் உள்ளத்தில் இருந்து உறிஞ்சி விடுகின்றது.
# மௌனம் யாருக்கு சிறந்ததாகி விடுகின்றதோ அவர் தேவையற்றதை ஒருபோதும் பேசவே மாட்டார்.
Tags:
படித்ததில் பிடித்தது