விதை வெடிக்கப் பயந்தால் விருட்சம் எழாது.

விதை வெடிக்கப் பயந்தால் விருட்சம் எழாது.

(கோவயம்புத்தூர் திருக்குறள் ஆய்வுக் கழகத்தின் நிறுவனரும், தலைவருமான தமிழ்ச் செம்மல் முனைவர் மு.க.அன்வர் பாட்சாவின் "சிந்தனையை தூண்டும் வாழ்வியல் நிஜங்கள்" என்ற புத்தகத்திலிருந்து)

அது ஒரு யுத்த காலம். சிறிய விமானமொன்றை மலைவாசி மக்கள் வாழும் ஒரு குக்கிராமத்தில் விட்டுச்சென்று விடுகிறார்கள் சில விமானிகள். படிப்பறிவில்லாத அக்கிராமவாசிகள் அதைப் பார்க்கின்றனர். விமானம் பற்றிய அறிவு அவர்களுக்கு இல்லை. இது ஏதோ ஒரு வகை புதுமையான மாட்டு வண்டியாகத்தான் இருக்க முடியும் என்று மாட்டு வண்டியாக அதைப் பயன்படுத்துகிறார்கள் அக்கிராம மக்கள்.

அதே கிராமத்தில் ஒரு படித்த இளைஞன் ஒருவன் அதைப் பார்க்கின்றான். அவன், இது மாட்டு வண்டி அல்ல. காரணம் இதற்கு கியர் இருக்கிறது. சக்கரங்கள் இருக்கின்றன. எனவே இது ஒரு கார் என்று சொல்லி முயற்சி செய்து, அதைக் காரைப் போல பயன்படுத்த ஆரம்பித்தான்.

சில மாதம் கழித்து விமானப் படையில் பணிபுரியும் வீரர் ஒருவர், அதைப் பார்த்து இது மாட்டு வண்டியும் அல்ல ; காரும் அல்ல ; போரில் பயன்படுத்தும் விமானம் என்று கூறினார்.

இன்று உலகில் பெரும்பாலானோர் நமக்குக் கிடைத்த இந்த வாழ்க்கையை மாட்டு வண்டியாகத் தான் கருதுகிறார்கள். சிலர் காராக நினைக்க, மிகச் சிலரே விமானம் என்பதை மிகச் சரியாகப் புரிந்து கொள்கின்றனர். |

ஆம், மனிதர்களும் பயத்தால், கவலையால், பொறாமையால், சந்தேகத்தால், தாழ்வு மனப்பான்மையால் பட்டுப் பூச்சியைப் போல தங்கள் மகிழ்ச்சிக்குத் தாங்களே ஒரு தடையை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அதைவிட்டு வெளிவரத்தெரியாமல் தவிக்கிறார்கள்.

விதை வெடிக்கப் பயந்தால் விருட்சம் எழாது. புழு கூட்டைக் கிழித்து வெளியே வர பயந்தால் வண்ணத்துப் பூச்சி வானில் பறக்க முடியாது. நீரில் குதிக்கப் பயந்தால் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது. காற்றைச் சுவாசிக்கப்பயந்தால் உயிர் வாழ முடியாது.

கல்ஹின்னை டுடே 
galhinnatoday@gmail.com

Post a Comment

Previous Post Next Post