1.நபி (ஸல்..) அவர்கள் பிறப்பு :
ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 12
2.பிறந்த இடம் :
திரு மக்கா
3.பெற்றோர் :
அப்துல்லாஹ் - அன்னை ஆமீனா
4.பாட்டானார் :
அப்துல் முத்தலீப்
5.தந்தை மரணம் :
நபி (ஸல்..) அவர்கள் கருவில்
இருக்கும் போது
6.தாயார் மரணம் :
நபி (ஸல்..) அவர்களின் ஆறு வயதில்
7. பாட்டனார் மரணம் :
நபி (ஸல்..) அவர்களின் எட்டு வயதில்.
Also read more இஸ்லாமிய சிந்தனை,
8.வளர்ப்பு :
பாட்டனாருக்குப் பின்
பெரிய தந்தை அபூதாலிப்.
9.செவிலித் தாய்மார்கள் :
ஹள்ரத் துவைஃபா (ரலி..) என்ற
அடிமைப் பெண். பின்பு
ஹள்ரத் ஹலிமா (ரலி..) அவர்கள்.
10.பட்டப் பெயர்கள் :
அல் அமீன்
(நம்பிக்கைக்கு உரியவர்),
அஸ்ஸாதிக்
(உண்மையானவர்)
11.முதல் வணிகம் :
அன்னை கதீஜா (ரலி..)
அவர்களின் வணிகக் குழுவில்
சேர்ந்து சிரியா தேசம் பயணம்.
12.முதல் திருமணம் :
அன்னை கதீஜா (ரலி..) அவர்களுடன்.
13.மஹர் தொகை :
500 திர்ஹம்கள்.
14. திருமணத்தை நடத்தி வைத்தவர் :
அபதாலிப் அவர்கள்.
15.நபி (ஸல்..) அவர்கள் மனைவியர் :
அன்னை கதீஜா (ரலி..),
அன்னை ஸவ்தா (ரலி..),
அன்னை ஆயிஷா (ரலி..),
அன்னை ஹஃப்ஸா (ரலி..),
அன்னை ஜைனப் பின்த் குஜாமா(ரலி...),
அன்னை உம்முஸல்மா (ரலி..),
அன்னை ஜைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி..),
அன்னை ஜுவைரிய்யா (ரலி..),
அன்னை உம்மு ஹபீபா (ரலி..),
அன்னை ஸஃபிய்யா (ரலி..),
அன்னை மைமூனா (ரலி..),
அன்னை மரியத்துல் கிப்தியா (ரலி..)
16.ஆண் மக்கள் :
காஸிம் (ரலி..)
அப்துல்லாஹ் (ரலி..),
இப்றாஹீம் (ரலி..)
இவர்கள் குழந்தைப் பருவத்திலேயே
மௌத்தாகி விட்டார்கள்.
17.பெண் மக்கள் :
ஜைனப் (ரலி..),
ருகையா (ரலி...),
உம்முகுல்தூம் (ரலி..),
ஃபாத்திமா (ரலி..)
18.பேரர்கள் : உமாமா (ரலி..),
முஹ்சின் (ரலி..),
ஹசன் (ரலி..)
ஹுசைன் (ரலி..)
19.ஊழியர்கள் :
பிலால் (ரலி..),
அனஸ் (ரலி...),
உம்மு அய்மன்
மாரியா (ரலி..)
20.அடிமை :
ஜைதிப்னு ஹாரிதா (ரலி..)
21.பெருமானார் (ஸல்..) அவர்களின்
தகப்பனார் உடன் பிறந்தோர் :
மொத்தம் 12 பேர். அவர்களில்
இஸ்லாத்தை ஏற்றவர்கள்
ஹள்ரத் ஹம்ஜா (ரலி..),
ஹள்ரத் அப்பாஸ் (ரலி..)
22.பெருமானார் (ஸல்..) அவர்களின்
தாய் உடன் பிறந்தோர் :
மொத்தம் 6 பேர். அவர்களில்
இஸ்லாத்தை ஏற்றவர்கள்
ஹள்ரத் அம்மாரா (ரலி..),
ஹள்ரத் ஆத்திகா (ரலி..),
ஹள்ரத் ஸஃபிய்யா (ரலி..)
23.நபிப் பட்டம் கிடைத்தது :
40 ஆம் வயதில் (கி.பி. 610)
24.நபிப் பட்டம் கிடைத்த இடம் :
ஹிரா குகை
25.முதல் வஹீ :
" இக்ரஃ பிஸ்மி "
என்ற வசனம்
26.முதல் முதலாக ஈமான்
கொண்டவர்கள் :
பெண்களில் -
ஹள்ரத் அன்னை கதீஜா (ரலி..),
சிறுவர்களில் - ஹள்ரத் அலீ (ரலி..),
ஆண்களில் ஹள்ரத் அபூபக்கர் (ரலி..),
அடிமைகளில் - ஹள்ரத் பிலால் (ரலி..)
27.முஸ்லிம்களின் முதல் ஹிஜ்ரத் :
அபிசினியாவிற்கு, நபித்துவம்
5 – ஆம் ஆண்டில்,
மன்னர் நஜ்ஜாஸி ஆட்சியில்.
28.முதல் ஹிஜ்ரத் செய்தவர்கள் :
நபி (ஸல்..) அவர்களின்
மகள் ருகையா (ரலி..),
மருமகன் ஹள்ரத் உஸ்மான் (ரலி..)
மற்றும்
ஆண்கள் 11 பேர், பெண்கள் 4 பேர்.
29.தாயிஃப் நகரில் தவ்ஹீத் :
நபித்துவ 10 – ஆம் ஆண்டில்,
துணையாகச் சென்றவர்
ஹள்ரத் ஜைது (ரலி..)
30.மக்காவில் தீன் அழைப்புப் பணி :
13 ஆண்டுகள்
31.மதீனாவிற்கு ஹிஜ்ரத் :
நபித்துவ 14 – ஆம் ஆண்டில்
32.உடன் சென்றவர் :
ஹள்ரத் அபூபக்கர் (ரலி..)
33.ஹிஜ்ரத்தின் போது மறைந்திருந்த
குகை :
" தௌர் "
34. மதீனா சேர்ந்த நாள் :
ஈஸவி 25-09-622 - இல்
35.பத்ரு யுத்தம் :
ஹிஜ்ரி 2, ரமளான் மாதம்
36.தொழுகைக்கு பாங்கு
அறிமுகப்படுத்தப்பட்டது :
ஹிஜ்ரி - 2 இல்
37.நபி (ஸல்..) அவர்கள் காலத்தில் கஃபா
கிப்லாவாக ஆக்கப்பட்டது :
ஹிஜ்ரி - 2 இல்
38.உஹது யுத்தம் :
ஹிஜ்ரி - 3 இல்
39.அகழ் யுத்தம் :
ஹிஜ்ரி - 5 இல்
40.ஹுதைபிய்யா உடன்படிக்கை :
ஹிஜ்ரி - 6 இல்
41.மது ஹராமாக்கப்பட்டது :
ஹிஜ்ரி - 6 இல்
42. நபி (ஸல்..) அவர்களின் புனித பல்
ஷஹிதான யுத்தம் :
உஹது யுத்தம்.
43.நபி (ஸல்..) அவர்களின் காலத்து
போர்களில் சில :
பனூ முஸ்தலிக்,
ஹுனைன்,
தாயிப்,
பனூ கைனூக்,
பனூ நஸீர்,
பனூ குறைளா,
கைபர்,
மூத்தா,
தபூக் யுத்தங்கள்
44.மக்கா மீது படையெடுப்பு :
ஹிஜ்ரி - 8 இல்
45.மிஃராஜ் :
நபித்துவ 12 – ஆம் ஆண்டில்,
ரஜப் பிறை 27 திங்கட் கிழமை.
46.தொழுகை கடமையாக்கப்பட்டது :
மிஃராஜில்.
47.ஹஜ் கடமை :
ஹிஜ்ரி - 9 இல்
48. நபி (ஸல்..) அவர்கள் ஹஜ் செய்தது :
ஹிஜ்ரி – 10 இல்.
49.நபி (ஸல்..) அவர்களின் தலையிலும்
தாடியிலும் இருந்த மொத்த
நரை முடிகள் :
17
50.நபி (ஸல்..) அவர்கள் செய்த இறுதிப்
பிரசங்கம் :
ஹஜ்ஜத்துல் விதாவில்.
51.இறுதி வஹி :
110 – ஆம் அத்தியாயம்.
52.நபி (ஸல்..) அவர்கள் உலகைப் பிரிந்த
நாள் :
ஹிஜ்ரி 10, ரபீஉல் அவ்வல் பிறை 12,
திங்கட்கிழமை.
53.நபி (ஸல்..) அவர்களின்
புனித உடலை கழுவ நீர்
எடுக்கப்பட்ட கிணறு :
அரீஸ் கிணறு.
54.நீராட்டியவர்கள் :
ஹள்ரத் அலீ (ரலி..),
ஹள்ரத் அப்பாஸ் (ரலி..),
ஹள்ரத் பழ்ல் (ரலி..),
ஹள்ரத் குஸீ (ரலி..),
ஹள்ரத் உஸாமா (ரலி..),
ஹள்ரத் ஷக்ரான் (ரலி..),
உஸ் இப்னு கௌல் அன்சாரி (ரலி..)
55.ஜனாஸா தொழுகை :
72 முறை நடந்தது
56. கப்ரில் இறக்கியவர்கள் :
ஹள்ரத் அலீ (ரலி..),
ஹள்ரத் அப்பாஸ் (ரலி..),
ஹள்ரத் பழ்ல் (ரலி..),
ஹள்ரத் குஸீ (ரலி..)
57.நபி (ஸல்..) அவர்களை இறுதியாகக்
கண்டவர்கள் :
ஹள்ரத் பழ்ல் (ரலி..),
ஹள்ரத் குஸீ (ரலி..)
58.வாழ்ந்த நாட்கள் :
சந்திரக் கணக்குப்படி
63 வருடங்கள், 3 நாட்கள்,
6 மணி நேரம்.
சூரியக் கணக்குப்படி
61 வருடங்கள், 49 நாட்கள்,
6 மணி நேரம்.
59.உலகில் விட்டுச் சென்ற பொருட்கள் :
ஒரு சீப்பு,
சுர்மா கூடு,
2 தொழுகை பாய்கள்,
ஒரு திரிகை,
ஜோடி காலணி,
போர்வை,
ஊன்றுகோல்,
கேத்தல்,
கீழ் ஆடை,
குர்ஆனில் சில தொகுப்புகள்,
மிஸ்வாக்,
ஜிப்பா,
மூன்று பாய்கள்,
இரண்டு சுர்மா கோல்.
60.அண்ணலாரைப் போன்று தோற்றம்
அளித்த சஹாபி :
ஹள்ரத் முஸ்அப் இப்னு உமைர் (ரலி..)
61அண்ணலாருக்குப் பின் ஆண்ட
கலீஃபாக்கள் :
ஹள்ரத் அபூபக்கர் (ரலி..),
ஹள்ரத் உமர் (ரலி..),
ஹள்ரத் உஸ்மான் (ரலி..),
ஹள்ரத் அலீ (ரலி..)
62.அதிக அளவில் ஹதீஸ்களை
அறிவித்தவர்கள் :
ஆண் சஹாபி -
ஹள்ரத் அபூஹுரைரா (ரலி...),
பெண் சஹாபி -
ஹள்ரத் ஆயிஷா (ரலி..)
63.அன்னை பாத்திமா (ரலி..) மரணம் :
பெருமானார் (ஸல்..)
மறைந்த ஆறு மாதத்தில்.
நபி பெருமானார் (ஸல்..) அவர்களின் வாழ்க்கை முழுவதும் குர்ஆனாகவே இருந்தது...
*ஸல்லல்லாஹு அலா முஹம்மது*
*ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம்.*
(இந்த குறிப்புகளை நாமும் நமது குடும்பத்தார்களும் அதிலும் குறிப்பாக நம்முடைய குழந்தைகள் மற்ற ஏனையவர்களும் தெரிந்துக் கொள்வது சிறப்பாகும். நபிகள் பெருமானார் ஸல். அவர்கள் பிறந்த மாதமல்லவா ! இதை நாம் தெரிந்துக் கொள்வதில் ஆர்வமல்லவா ! இன்ஷாஅல்லாஹ் ! முயற்சி எடுத்துக் கொள்வோம்.)
Tags:
இஸ்லாமிய சிந்தனை