கடந்த வெள்ளிக்கிழமை (28-10-2022,யில்) ஜூம்மாத் தொழுகைக்குப் பிறகு கல்ஹின்னை பெரிய பள்ளிவாசலின் நிர்வாகசபைத் தலைவர் அல்-ஹாஜ் ரியாஸ் லதிப் அவர்கள் ஒலிபெருக்கி மூலம் ஊர் ஜமாத்தார்களுக்கு அறிவித்தார்
Also Read...கல்ஹின்னை பொக்கிஷங்கள்
நோயாளிக்குஅவசரமாக தேவைப்படும் பட்சத்தில் ஒரு வைத்தியரிடம் ஆலோசனை பெற்று அதற்கான சான்றிதழ் ஒன்றினையும் கல்ஹின்னை பெரிய ஜும்மாப் பள்ளிவாசல் நிர்வகத்தார்களிடம் ஒப்படைத்து மேற்குறிப்பிடப்பட்டுள்ள முதலுதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
சக்கர நாற்காலி ஒன்றினை கல்ஹின்னை (Y.M.M.A) கிளையின் உறுப்பினர்களுடன் ஒன்றுசேர்ந்து கல்ஹின்னை ஒன்றியத்தின் தலைவருமாக கல்ஹின்னை பெரிய ஜும்மாப் பள்ளிவாசல் நிர்வாகத் தலைவர் அல்-ஹாஜ் ரியாஸ் லதிப் அவர்களிடம் கடந்த வாரம் ஜும்மாப் பள்ளியில் வைத்து வழங்கப்பட்டது.
அத்தோடு சுவாசத்தடை ஏற்படும் நோயாளிகளின் அவசர மூச்சித் திணறல் ஏற்படுமாயின் அதற்கான முதலுதவி சுவாச சிலின்டர் ஒன்றினை பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவரினால் அன்பளிப்பு செய்யப்பட்டதாகும்.
கல்ஹின்னை Y.M.M.A கிளை 1951,ம் ஆண்டுகாலத்தில் ஆரம்பிக்கப்பட்டதாயிருந்தாலும் ,பல வருடங்கள் கவனிப்ப்பாரற்றுக்கிடந்த நிலையில் ,Y.M.M.A கிளையை இன்று முன்னெடுத்துச் செல்லுகின்ற சகோதரர்களை பாராட்டுகின்றேன்.
கல்ஹின்னை.