மதிப்பெண்கள் குறைவாக இருந்தாலும் குழந்தைகளை திட்டாதீர்கள்... இத மட்டும் செய்யுங்கள்..!

மதிப்பெண்கள் குறைவாக இருந்தாலும் குழந்தைகளை திட்டாதீர்கள்... இத மட்டும் செய்யுங்கள்..!

மதிப்பெண்கள் மட்டுமே குழந்தையின் வாழ்க்கைத் தீர்மானிப்பதில்லை. எனவே குறைவாக மதிப்பெண்கள் எடுத்தாலும் திட்டுவதற்குப்பதில் என்ன பிரச்சனை? எதில் உங்களுக்கு ஆர்வம்? என்று கேட்டறிந்து அதற்கு உதவ முயலுங்கள். நிச்சயம் குழந்தைகள் வெற்றி இலக்கை அடைவார்கள்.

குழந்தைகள் சில பள்ளியில் படித்தால் நிச்சயம் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பதற்காக குழந்தை பிறந்தவுடனே அட்மிசன் போட ஆரம்பித்து விடுகிறார்கள். சில பெற்றோர்களோ குழந்தைகள் வயிற்றில் இருக்கும் போதே பள்ளியைத் தேர்வு செய்ய தொடங்குகிறார்கள். ஏன் படிக்கும் குழந்தைகள் எங்கிருந்தாலும் படிக்காதா? விலை உயர்ந்த பள்ளிகள் தான் சிறப்பான கல்வியைத் தருகிறதா? மதிப்பெண்கள் தான் குழந்தைகளின் வாழ்க்கைத் தீர்மானிக்கிறதா? என்பது போன்ற பல கேள்விகள் முன்வைக்கப்பட்டாலும் இன்னமும் மக்கள் மாறியப் பாடில்லை.

ஒரு குழந்தையின் சிறப்பைத் தீர்மானிப்பது அவர்கள் தேர்வுகளில் எடுத்துவரும் மதிப்பெண்கள் தான் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர் பெற்றோர்கள்.இவ்வாறு மதிப்பெண்களை மட்டும் கவனத்தில் கொண்டால் நிச்சயம் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடும். எனவே நல்ல மதிப்பெண்கள் என்று கூறுவதற்குப் பதிலாக இந்த மாதிரி சொல்லிப்பாருங்கள். நிச்சயம் வெற்றி இலக்கை அடைவதற்கு நீங்கள் உறுதுணையாக இருப்பீர்கள். இதோ என்ன என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.


குழந்தைகளின் மதிப்பெண்களை மதிப்பிடுதல் :

நம்முடைய குழந்தைகள் நல்ல மதிப்பெண்கள் எடுக்கவில்லை என்றால் நிச்சயம் பல பெற்றோர்கள் கோபமடையத் தான் செய்வார்கள். ஏன் ஒழுங்கா படிக்க முடியலயா? இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமே? என்று கேட்காதீர்கள். அதற்குப் பதிலாக குழந்தைகளிடமே உங்களின் மதிப்பெண்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ன உதவியை பெற்றோர்களாகிய நாங்கள் செய்ய வேண்டும் என்று அவர்களிடம் கேளுங்கள். நிச்சயம் அடுத்த முறை அவர்களே மாறுவார்கள்.
SOURCE;news18

 


 


Post a Comment

Previous Post Next Post