நிர்வாகக் குழுத்தெரிவை ZOOM MEETING மூலம் முன்னெடுக்கலாமே!

நிர்வாகக் குழுத்தெரிவை ZOOM MEETING மூலம் முன்னெடுக்கலாமே!

முந்தைய பதிவுகளில் ஊர் நான்கு பட்டுவிட்டதாகத்தான்  குறிப்பிட்டிருந்தோம். இப்போது அதற்கும் மேலாகவும் பிரிவினைகள் ஊரில் தோன்றியிருப்பதாக அறிய முடிகின்றது!

காலாகாலமாக ஊரை ஆண்டுவந்த கூட்டத்தாரின் வழிவந்த சிறகொடிந்து வலுவிழந்த ஒரு கழுகுக் கூட்டம், ஊரைத் தம் வசப்படுத்தி ஆளத்துடிக்கும் ஒரு நரிக்கூட்டம்,  ஊர்ப்பற்று மிக்கவர்கள் என்று மார்தட்டிக் கொண்டு, ஊருக்கு வெளியில் வாழ்ந்துவரும் பிரபுக்கூட்டம், எது எப்படிப்போனாலும் நமக்கென்ன என்று பிரபுத்துவக் கூட்டத்துக்கும் போதைப்பொருளாளர்களுக்கும் கூசா தூக்கும் நாதாரிக்கூட்டம்.

இப்படியாக ஊருக்குள் சமீபகாலமாக உருவாகிவந்த பல்வேறு  குழுக்கள்  கூட்டமாகத் தங்களுக்குள்ளேயே பிரிவினைகளை உண்டாக்கி, ஊரைக் குழப்பி நாரிநக்கலிய வைத்துக் கொண்டிருக்கின்ற நிலையில், அண்மைக் காலத்தில்   "வட்சாப் குழுமங்கள்"   என்ற கேனத்தனமான ஒரு கூட்டமும் தோன்றிவிட்டது!

கொவிட் 19 காலத்தில் தோன்றிய   இக்குழுமங்களில் ஒன்றிரண்டு மட்டுமே    'பண்டமிக்'கின்போது ஊருக்கு ஒத்தாசை புரிந்தபோதிலும், அதனைத் தொடர்ந்து வந்த காலங்களில் குழுமத்தை சுவாரஷியப் படுத்துவதற்காக,  ஊர் சம்பந்தமாக இல்லாததையும், பொல்லாததையும் பதிவிட்டு, இன்றுவரை மக்களைக் குழப்பிக் கொண்டிருப்பதைப் பொழுது போக்காக்கிக் கொண்டுள்ளதை  ஊர்மக்கள் அறியாதவர்களள்ளார்!

அருவருப்பான பேச்சுக்களாலும் மற்றும் தனிநபர் வரலாறுகளைக் கிளரி, சேறுபூசும் வகையிலும் வெளியான வீடியோக்களைப் பார்த்துவிட்டு, கிரங்கிப்போய் கதிகலங்கி உறங்கப் போயிருந்த நல்லுள்ளம் கொண்ட மக்கள் சிலர், "சட்டயாப்பு" பற்றிய பதிவைக் கண்டதும் விழித்துக் கொண்டனர்!

ஊர் நிர்வாகத்தை வழிநடத்தவும், நிர்வாகக் குழுவைத்  தெரிவுசெய்து கொள்ளவும் சிறந்த வழி  இதுதான் என்ற நம்பிக்கையில், ஊரை ஐக்கியப்படுத்தும் விடயத்தில்  "வேட்டை" வெளிப்படுத்தியிருக்கும் ஆலோசனையில் அவர்கள் நாட்டம் கொண்ட போதிலும், இந்த விடயத்தை "வேட்டை" முன்வைத்த ஒரே காரணத்தால், சிலர் மௌனிக்கவும், இன்னும் சிலர் சிந்திக்கவும் ஆரம்பித்துவிட்டனர்!

நமது பிராந்திய நிருபர்கள் தரும் தகவல்களின் படி, கல்ஹின்னை மக்களின் பெரும்பாலானோர் இக்கருத்தை வரவேற்பதாக அறியமுடிகின்றது. இருந்தபோதிலும், காற்புணர்ச்சி காரணமாக இதனை உதாசீனம் செய்யும் சிலர், 'யாரிந்த வேட்டை, நமக்கெல்லாம் ஆலோசனை சொல்ல இவர்கள் யார்?' என்றவாறாக வீரத்தனமான கேள்விகளைக் கெட்டுக்கொண்டு ஒரு சாரார் ஊருக்குள் திரிவதாகவும் தகவல் கிடைக்கின்றது!

எமது பதிவைப் பார்த்ததும், ஊருக்குள் வாழும் பலரும், ஊருக்கு வெளியில் வாழும் சிலரும் எம்மோடு நேரடித் தொடர்பை ஏற்படுத்தி, நமது கருத்தை வரவேற்றதோடு, எதிர்கால கல்ஹின்னையின் ஐக்கியத்திற்கு இவ்வாறானதொரு "சட்டயாப்பு முறையிலான நிர்வாகமே" சரிப்பட்டுவரும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்!

இப்போதுள்ள முக்கிய கேள்வி, யார் இதனை முன்னெடுப்பது என்பதே!

யாராவது ஒருவர் முன்வந்து, zoom meeting ஒன்றை முன்னெடுத்தால் என்ன?

இதன்போது பலரின் கருத்துக்களை அறிய முடிவதோடு, எமது முன்னைய பதிவில் குறிப்பிட்டது போன்று,  கல்வித் தகைமையுள்ள,  சமூகப் பணியில் ஆர்வமுள்ள, இஸ்லாமிய அடிப்படைகளை எடுத்து நடக்கக்கூடிய, சமூகத்தில் ஓரளவு நல்ல பெயரோடு வாழ்ந்துவரும், எந்தவொரு அரசியல் கட்சியிலும் அங்கத்துவப் பொறுப்பில்லாத, அல்லாஹ்வுக்காக தூய்மையாகச் செயற்படும் பக்குவம் கொண்ட, சமூக விவகாரங்கள் பற்றிய தெளிவுள்ள, சமூகத்திலிருந்து வரும் எந்த விமர்சனங்களையும் அறிவார்ந்த ரீதியிலும், நிதானமாகவும் கையாளும் பக்குவம் கொண்டவர்களைக் கொண்ட ஒரு குழுவை இந்த Meeting வழியாகவே தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.

அதன் பின்னர், குழுவினர் ஒன்று சேர்ந்து பள்ளிவாசலில் நேரடி ஒன்றுகூடல் மூலம் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகரலாம்!

இந்தப் பிரச்சினைக்கு முடிவொன்று காண முடியாதா என்று ஊரவர், பூனைக்கு மணி கட்டுவது எப்படி? என்று  தவித்துக் கொண்டிருந்த வேளையில்,  பூனைக்கு மணி கட்டுவதில் இருந்த  சங்கோஜத்தை "வேட்டை" தீர்த்து வைத்துவிட்டது! இனி 'மணி கட்டிய பூனை'யை வெள்ளோட்டம் விட வேண்டியதுதான் பாக்கி!

ஆலோசனையை முன்னெடுப்பதோ, விட்டு விடுவதோ ஊர் மக்கள் கைகளில்தான் தங்கியுள்ளது!

கல்ஹின்னையின் எதிர்கால வெற்றிக்கும், ஐக்கியத்திற்கும் நல்வாழ்த்துக்கள்!



 


 


Post a Comment

Previous Post Next Post