கல்ஹின்னை ஐ..ஏ.ஸத்தார் அவர்கள் 1962ல் கல்ஹின்னை அல்மனாரில் சேர்ந்து,உயர்தரத்தில்வர்த்தகப் பிரிவில் தேர்ச்சியடைந்த இவர், திட்ட அமுலாக்கல் அமைச்சில் சிலகாலம் பணி செய்துவிட்டு, நான்கு வருடங்கள் பேருவளை –நளீமிய்யா இஸ்லாமிய வெளியீட்டுப் பணியகத்தில் சேவையாற்றிய பின்னர், வார்த்தக நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதால், சிலகாலம் தனது எழுத்துப் பணிக்கு முழுக்குப் போட்டிருந்தார்.
சிறுகதை எழுத்தாளராக எழுத்துலகில் பிரவேசித்த இவரது முதலாவது சிறுகதை 1974ல் “சிந்தாமணி” வார இதழில் வெளியாகியதன் மூலம் இவர்,“கல்ஹின்னையின் முதலாவது சிறுகதை எழுத்தாளராக”வரலாற்றில் இடம் பெறுகின்றார்.
தொடர்ந்து வீரகேசரி, தினகரன், விடிவெள்ளி போன்ற உள்நாட்டிதழ்களிலும்,“நயனம்” போன்ற மலேசிய சஞ்சிகைகளிலும் இவரது ஆக்கங்கள் இடம்பெற்றன.
1982 முதல் 28 வருடங்கள் தனது எழுத்துப் பணிக்கு முழுக்குப்போட்டிருந்த இவர், சிங்கள மொழி பேசுவோர் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளும் நோக்கில், சில காலம் “சிங்தமி” என்ற மாதாந்த சஞ்சிகையைத் தனது அச்சகத்திலிருந்து வெளியிட்டதுடன்,2010 முதல் தொடர்ந்து இரண்டு வருடங்களாக “விஜய்” என்ற வாராந்த சஞ்சிகைக்குக் கல்விக் கட்டுரைகளையும் எழுதிக் கொண்டிருந்தார்.
செம்மைத்துளியான்' என்ற புனைப்பெயரில் சிறுகதைகள், தொடர்கதைகள் மற்றும் கல்விக் கட்டுரைகள் எழுதிவரும் ஐ.ஏ.ஸத்தார் அவர்கள், சிலகாலம் தனது எழுத்துப்பணியை நிறுத்திவைத்திருந்த நிலையில், மீண்டும் "வேட்டை" மினிதழினூடாகத் தனது பணியைத் தொடர்ந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது!
Tags:
ஐ.ஏ.ஸத்தார்