அன்பு நபி (ஸல்)மீது அருமை தோழர்களின் ஆத்மீக காதல்

அன்பு நபி (ஸல்)மீது அருமை தோழர்களின் ஆத்மீக காதல்

அமர்‌ பின்‌ அல்‌ஆஸ்‌ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்‌ இஸ்லாமை ஏற்ற பிறகு கூறினார்கள்‌: இஸ்லாமை ஏற்பதற்கு முன்புவரை நபி ﷺ அவர்களை விட வெறுப்புக்குரியவர்‌ என்னிடத்தில்‌ வேறு யாரும்‌ இல்லை...

ஆனால்‌, இஸ்லாம் என் உள்ளத்தில் ‌நுழைந்த பின்னர் என்னிடத்தில்‌ நபி  (ஸல்)அவர்களைவிட விருப்பத்திற்குரியவர்‌ வேறு யாரும்‌ இல்லை. 


அதைப்‌ போன்றே என்‌ பார்வையில்‌ நபி (ஸல்)அவர்களை விட கண்ணியத்திற்குரியவர்‌ வேறு யாரும்‌ இல்லை.

என்னிடத்தில்‌ இந்த நபியின்‌ சிறப்பைக்‌ கூறக்‌ கேட்டால்‌ அதனை விவரிக்க நான்‌ சக்தி பெற மாட்டேன்‌. ஏனெனில்‌, இந்த நபியின்‌ சிறப்பை எனது பார்வையைக்கொண்டு முழுமையாக என்னால்‌ கணக்கிட முடியவில்லை...
உர்வா பின்‌ மஸ்வூத்‌ அஸ்ஸகஃபீ குறைஷிகளிடம்‌ கூறினார்கள்‌:
 "எனது சமுதாயமே!கிஸ்ரா, கைஸர்‌ அரசர்களிடத்திலே நான்‌ சென்றிருக்கிறேன்‌. 



முஹம்மத்‌ நபி (ஸல்) அவர்களின்‌ தோழர்கள்‌ நபி (ஸல்) அவர்களுக்கு அளிக்கும்‌ கண்ணியத்தைப்‌ போன்று கைஸர்‌ கிஸ்ரா நாட்டின்‌ குடிமக்கள்‌ கூட தங்களது அரசனுக்கு அளிக்கவில்லை. 

அல்லாஹ்வின்‌ மீது ஆணையாக முஹம்மத்‌ ﷺ அவர்களின்‌ தோழர்கள்‌ தங்களின்‌ பார்வையைக்கொண்டு அவர்களை நோக்கினாலும்‌, கண்ணியத்துடனே நோக்குகின்றனர்‌. 
முஹம்மத்‌ நபி (ஸல்) அவர்கள்‌ எச்சிலைத்‌ துப்பினாலும்‌, அவர்களுடைய தோழர்களில்‌ யாரேனும்‌ ஒருவரின்‌ கையிலேயே அது விழும்‌. அதனை அந்த தோழர்‌ தன்‌ முகத்திலும்‌, மேனியிலும்‌ பூசிக்‌ கொள்வார்‌. முஹம்மத்‌ நபி (ஸல்)அவர்கள் ஒளு செய்தால்‌ அந்தத்‌ தண்ணீரை பெறுவதற்கு அவர்களின்‌ தோழர்கள்‌ ஒருவரை ஒருவர்‌ முந்திக்‌ கொள்கின்றனர்‌....


Post a Comment

Previous Post Next Post