கல்ஹின்னையும் whatsapp குழுமங்களும்

கல்ஹின்னையும் whatsapp குழுமங்களும்


கல்ஹின்னையைப் பொறுத்தளவில் whatsapp குழுமம் என்பது சர்வசாதாரணமாகிவிட்டது.

வீட்டுக்கொரு குழுமம் .ஒவ்வொரு மஹல்லாக்களுக்கும் ஒரு குழுமம் .நண்பர்களுக்கு என்று பல குழுமங்கள் .பிரசினைகளுக்கென்று ஒரு குழுமம் .பாடசாளைகளுக்கென்று ஒரு குழுமம் ,கல்விகென்று ஒரு குழுமம் .பாடசாலை மைதானங்களுக்கென்று ,மற்றும் கல்ஹின்னையின் மாற்றங்களுக்கென்று பல குழுமங்கள் .

கல்ஹின்னையை விட இலங்கையில் வேறு எந்த ஒரு ஊரிலும் இப்படிப்பட்ட குழுமங்கள் இருப்பதாக நான் நினைக்கவில்லை .தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை .

வெவ்வேறு  நோக்கங்களுக்காக  வேறு பெயர்களில் குழுமங்கள் இருந்தாலும் ஒரு விடயத்தில் மட்டும் ஒன்றுபட்டு செயல்படுகின்றார்கள்.

அதாவது கருத்துக்கள் தெரிவிப்பது .அரட்டை அடிப்பது போன்றவற்றில் அனைத்து குழுமங்களும் ஒன்றாக செயல்படுகின்றார்கள் 

ஒரு சிறிய விடயமாக இருந்தாலும் மாதக் கணக்கில் ஆலோசனைகள் என்ற பெயரில் அரட்டையடித்துக் கொண்டிருப்பது கல்ஹின்னை குழுமங்களில் நாம் காணக் கூடியதாயுள்ளது.

குழுமத்தில் இருக்கின்ற ஒருவர் எதோ ஒரு விடயத்தை குறிப்பிட்டவுடன் அதற்கு நூற்றுக்கனக்கானவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிடுவது ,எதிராக பதிவிடுவது,ஆதரவாக பதிவிடுவது,அல்லது அதை தடுக்கும் கடுத்துக்களை பதிவிடுவது போன்ற நிகழ்வுகளை நாம் பார்க்கின்றோம் .

ஆனால் குறிப்பிட்ட விடயம் நிறைவேறுவதில்லை .அது மண்ணோடு மண்ணாய் புதைந்துவிடுகின்றது.

இது இன்று கல்ஹின்னையில் இருக்கின்ற whatsapp குழுமங்களின் பரிதாப நிலை .

அதேநேரம் GWA போன்ற குழுமங்கள் ஒரு குறிப்பிட்ட விடயத்தை எடுத்து அதற்கான வேலைத்திட்டங்களை அழகியமுறையில் எடுத்துச் செல்வதையும் அவதானிக்க முடிகின்றது.

அவர்களுடைய குழுமத்தில் இருப்பவர்களின் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் கலந்தாலோசித்து நியாயமான முடிவை எடுக்கின்றார்கள் .அவை அனைத்தும் மிகவும் ரகசியமான முறையில் பாதுகாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.அது குறிப்பிட்ட இலக்கை அடையும்வரை பகிரங்கப் படுத்தப்படுவதில்லை.பொதுவாக சொல்வதென்றால் அவர்கள் செய்கின்ற பொதுச் சேவைகளை அவர்களாகப் பகிரங்கப் படுத்துவதில்லை.அது தானாகவே ஊர் மக்களின் கவனத்திற்கு வந்துவிடுகின்றது.

இது மிகவும் பாராட்டப்படவேண்டிய ஒரு விடயம்.

GWAயைப் பொறுத்தளவில் கடந்த காலங்களில் பலவித விமர்சனங்களுக்கு உள்ளாகியது,தவறான தகவல்கள் பரப்பப்பட்டன.எனினும் அவர்களின் சேவைகள் தொடர்ந்துகொண்டுதானிருந்தது.

GWAகுழுமத்தில் ஆலோசனைகள் என்ற பெயரில் அரட்டை அடிப்பதில்லை .ஒருவரை ஒருவர் வீழ்த்தவேண்டும் என்று நினைப்பதில்லை.குழுமத்தை தவிர வேறு எவரிடமும் ஆலோசனை பெறுவதில்லை.அவர்கள் செய்ய நினைக்கின்ற ஒரு நல்ல விடயத்தை அவர்களாகவே ஆலோசித்து நல்ல முறையில் நிறைவேற்றுகின்றார்கள்.

ஊரில் எவரோடும் பகையில்லை .தேவையறிந்து அவர்களால் முடிந்ததை செய்கின்றார்கள்.இது ஒரு ஆரோக்கியமான செயல்.

ஆனால் அரட்டையடிப்பதற்காகவே பல குழுமங்கள் உருவாகியுள்ளன.
ஆலோசனைகள் என்ற பெயரில் அடுக்கிக்கொண்டு போகின்ற அவலத்தை பார்க்க முடிகின்றது.அது நல்ல விடயமோ தேவையற்றதோ என்று பார்ப்பதில்லை ஆலோசனை சொல்கின்றவர் பணக்காரரா அல்லது உயர் அந்தஸ்த்தில் இருப்பவரா என்பதையெல்லாம் பார்த்து "ஆமாம் சாமி " போடுவதற்கென்றே ஒரு சிலர் இருக்கின்றார்கள்.அவர்களுக்கு அதுதான் வேலை. 

கடந்த சில நாட்களுக்கு முன் பாடசாலை மைதானத்தை புனரமைப்பதற்காக  தனியாக ஒரு குழுமம் ஆரம்பிக்கப்பட்டது.பாடசாலை மைதானத்தை புனரமைக்கும் நன்நோக்கோடு சர்பான் ஹாஜியார்,உவைஸ் ரசான்(GTV),மற்றும் ரியாஸ் (RTV) போன்றவர்களால்  ஆரம்பிக்கப்படது.. 

கல்ஹின்னை பாடசாலைக்கு மைதானம் மிகவும் அவசியமானதொன்று.ஆகவே  அதனை அடிப்படையாகக் கொண்டு அந்தக் குழுமம் ஆரம்பிக்கப்பட்டு ,பல கருத்துக்களை பதிவிட்டு ,அதில் ஆதரவும் ,எதிர்ப்பும் பதிவிட்டு எப்படியோ அந்த விடயமும் புதைக்கப்பட்டுவிட்டது.

அவர்களுடைய நோக்கம் நன்றாகத்தான் இருந்தது.ஆனால் கருத்துக்களை கேட்கும் முறைதான் தவறாகச் சென்றது.

ஆனால் இதே சர்பான் ஹாஜியார் அவர்கள்  எந்த குழுமத்திலும் ஆலோசனை கேட்காமல் தனியொருவராக கல்ஹின்னையில் ஒரு சிறுவர் விளையாட்டு திடளை ஆரம்பிக்க நினைத்து அழகிய முறையில்  முடித்துக் காட்டினார்.கல்ஹின்னையில் பல குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை தொடர்ந்தும் செய்து வருகின்றார்.இவை எதுவுமே WHATSAPP-ல் பகிரங்கமாக கருத்துக் கேட்காமல் நிறைவேற்றப்பட்டவை.

மிகவும் பாராட்டப்படவேண்டிய ஒரு விடயம்.

இவர் தனியாளாக சிந்தித்து தனக்குத் தேவையான ஒருசிலரிடம் மட்டும் ஆலோசனைகளைப் பெற்று செய்த அத்தனை விடயமும் அழகிய முறையில் நிறைவேறியுள்ளது,நிறைவேறுகின்றது.

இலங்கையின் தேசிய சமாதானப் பேரவை இயக்குனரும், சமூர்த்தி அமைச்சின் முன்னாள் இணைப்பாளரும்,ஹம்பாந்தோட்டை உப்பளத்தின் (salt) இயங்குனரும்.  அகில இலங்கை சமாதான நீதவானும் .மீடியா லிங்க் குழுமத்தின் தலைவரும் ,வேட்டை(தமிழ்.ஆங்கிலம்,சிங்களம்) ,கல்ஹின்னை டுடே(தமிழ்,ஆங்கிலம் ) ,சிதிஜயா(சிங்களம் ,ஆங்கிலம்) ஆன்லைன் பத்திரிகைகளின் ஆலோசகருமானஜனாப் எம்.எச்.எம். நியாஸ் அவர்களின் ஆடியோவைக் கேளுங்கள் 

ஜனாப் நியாஸ் அவர்கள் குறிப்பிடுவதைப்போன்று,  ஏற்கனவே வைத்திய சாலை சம்பந்தமாகவும் ,ஆம்புலன்ஸ் சம்பந்தமாகவும் பல நாட்கள் பலவிதமான ஆலோசனைகளை CHANGING GALHINNAI குழுமத்தில் மூலம் கூறிக்கொண்டிருந்ததை நாம் அறிவோம் .

ஆனால் அது மண்ணோடு மண்ணாய் புதைக்கப்பட்டுவிட்டது.

அதைப்போன்றுதான் CHANGING GALHINNAIயில் நல்ல பல விடயங்களை முன்வைத்தது. அளவுக்கு அதிகமான ஆலோசனைகளால் அதுவும்  புதைக்கப்பட்டது .

ஒவ்வொரு திட்டங்களும் வருடக் கணக்காக வாய்ப்பேச்சில் மட்டுமே இருக்கின்றது .ஆலோசனைகள் என்ற பெயரில் என்னவெல்லாமோ நடக்கின்றது."மாஷா அல்லாஹ்" என்ற ஒரு வசனம் மட்டும் அடிக்கொருதரம் மின்னிக்கொண்டிருக்கின்றது.

கல்ஹின்னை whatsapp குழுமங்களை பார்க்கும்போது வேடிக்கையாயிருக்கின்றது .

கல்ஹின்னைக்கு பல சந்தர்ப்பங்களில் மாபெரும் உதவிகளை செய்துள்ள அல்ஹாஜ் முஸ்லிம் ஹாஜியார் ,அல்ஹாஜ் ஜிப்ரி ஹாஜியார்(ஒன்றியம்).அல்ஹாஜ் பாரூக்(ATTORNEY -AT.LAW) போன்ற தனவந்தர்கள் whatsapp மூலம் பறையடித்துக்கொண்டு ஊருக்கு உதவவில்லை .ஆலோசனைகள் என்ற பெயரில் கூட்டம் கூட்டி பெருமையடிக்கவில்லை .

இன்னும் சிலர் அமைதியாக ஆர்ப்பாட்டமில்லாமல் ஊருக்கு பல சேவைகளை ரகசியமாக செய்துகொண்டிருக்கின்றார்கள்,

அவர்களுக்கென்று ஒரு தனியான கொள்கை இருக்கின்றது.அதன்படி அழகிய முறையில் ஊருக்குத் தேவையானவற்றைசெய்தார்கள், செய்துகொண்டிருக்கின்றார்கள்.

உரில் இருக்கின்ற குழுமங்களும் தனவந்தர்களும் ஒன்றுபட்டால் இலங்கையில் மிகவும் பிரபல்யமான ஒரு ஊராக கல்ஹின்னையை மாற்ற முடியும்.

பாடசாலையின் பரிதாப நிலையை மாற்ற முடியும் .

இன்று கல்ஹின்னை அல்-மனார் தேசிய பாடசாலை சினிமாக்களில் வருகின்ற பேய் வீடுகளைப் போன்று காட்சியளிக்கின்றது.தேசிய பாடசாலை என்று சொல்வதே தவறு.

கல்ஹின்னை பாடசாலையை ஒரு சிறந்த பாடசாலையாக மாற்றுவதற்கு உண்மையான  கடமையுணர்வோடு பாடுபடுகின்ற ஆசியர்கள்தான்  தேவை. அதற்கு ஊர் மக்களின் பூரண அதரவு தேவை .நீ பெரியவன் நான் பெரியவன் என்ற போட்டிகள இல்லாத ஒரு சமூகம் உருவாக வேண்டும்.

பாடசாலை விவகாரம் என்று வரும்போது கொள்கைகளை ஒதுக்கிவிட்டு ஒற்றுமையுடன் செயல்படவேண்டும் .

அதற்கு உதாரணமாக தம்பதெனியவை எடுத்துக்கொள்ளலாம் 

இன்று கல்ஹின்னையைச் சேர்ந்த ஆசிரியை ஷிபானா அவர்கள் தம்பதெனிய என்ற ஊர் பாடசாலையில் அதிபராக கடமையாற்றுகின்றார் .
இந்த முறை பரீட்சை பெறுபேறுகள் மிகவும் சிறந்த முறையில் கிடைத்துள்ளது.கல்ஹின்னையைப்போன்று வசதிகள் இல்லாத ஒரு பாடசாலை  வசதிபடைத்தவர்கள் குறைவான ஊர்,பாடசாலையில் ஒருசில வகுப்பறைகள் கூட இல்லாத பாடசாலை.

ஆனாலும் ...

ஊர் மக்களின் ஒத்துழைப்பும் ,ஆசிரியர்களின் கடமையுணர்வும் அந்த பாடசாலையில் படிக்கின்ற மாணவர்களை ஒரு உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்கின்றது.

கொள்கைகள் வெவ்வேறாக இருந்தாலும் பாடசாலை விடயத்தில் ஒன்றுபடும்  ஊர் மக்களின் அந்த உயர்ந்த குணம்  இன்று அவர்களின் பிள்ளைகளை உயர்ந்த இடத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது.

அதிபர் ஷிபானா அவர்களின் ஆடியோவைக் கேளுங்கள் 


அதிபர் ஷிபானா அவர்கள் குரிப்பிடுவதைபோன்று கல்ஹின்னை மக்களும் ஒற்றுமையாக செயல்பட்டால் அனைத்தும் வெற்றியின் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்பதுதான் உண்மை.

கல்ஹின்னை மாஸ்டர் 



 


Post a Comment

Previous Post Next Post