கலாநிதி Dr அல்-ஹாஜ் H. சலாஹுத்தீன் மௌலவி

கலாநிதி Dr அல்-ஹாஜ் H. சலாஹுத்தீன் மௌலவி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் வபரக்காத்துஹு 

கலாநிதி Dr அல்-ஹாஜ் H. சலாஹுத்தீன் மௌலவி அவர்களைப்பற்றிய பிறப்புக்கும் – இறப்புக்குமான இடையிலான ஓர் கண்ணோட்டம்!

உலகெல்லாம் புகழ் பரப்பிய பேருலமா மர்ஹும் டாக்டர் அல்-ஹாஜ் H சலாஹுத்தீன் (பாரி) அவர்கள். மர்ஹும் உஸ்மான் லெப்பை அவர்களின் மகனான. மர்ஹும் ஹாமிது லெப்பை அவர்களுக்கு 1939ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ம் திகதி பிறந்தர். 

மர்ஹும் H. சலாஹுத்தீன் மௌலவி (பாரி) அவர்கள். தனது உற்ற நண்பன் அஸீஸ் மௌலவியின் சகோதரியும், ஹமீது லெப்பை அவர்களின் மகளுமான ஹாஜியானி: ராஹிலா உம்மாவை விவாகம் செய்து, முஸ்லிம் ஹாஜியார் உட்பட ஐந்து குழைந்தைகளைப் பெற்று வாழ்ந்தார்.


மண்ணில் தோன்றும்  எல்லா உயிர்யினமும் மரணத்தை சந்திப்பதும் மண்ணினுள் மறைவதும் நிச்சியம். மறைந்த பின்பும் மானிடர்கள் மனதில் வாழ்ந்துவரும் மனிதர்கள் கோடியில் ஒருசிலர் மாத்திரமே இவ்வுலகில். 

அந்த வகையில் எங்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துக் கொண்டிருக்கும் எங்கள் கல்ஹின்னை மண்ணின் மைந்தன் மர்ஹும் கலாநிதி Dr அல்-ஹாஜ் H
சலாஹுத்தீன் மௌலவி அவர்கள் என்பதில் எம் சமூகமே பெருமிதம் அடைகிறது அல்ஹம்துலில்லாஹ்.

25ம் திகதி (பிப்ரவரி) 02ம் மாதம் 1939ம் ஆண்டு கல்ஹின்னையில் பிறந்து 25ம் திகதி (ஜூலை) 07ம் மாதம் 2013ம் ஆண்டு நோன்பு 15ஆம் நாள் அன்றைய தினம் உலகவாழ்க்கையில் இருந்து விடுதலை பெற்று இறையடி எய்தார். இனாய்ல்லாஹி வஹின்கிலாஹி ராஜுஹூன் 

எழுபத்திநான்கு (74) வருடகாலம் இவ்வுலகில் இருந்து வாழ்ந்த கொண்டிருந்த போது எப்படி வாழ்ந்தார்?  என்பதை தேடிப்பார்க்கிறேன் கல்ஹின்னையில் தற்போதைய அல்-மனார் தேசிய பாடசாலையாக விளங்கும் அப்போதைய ஆரம்ப பாடசாலை கமாலியா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைப் பெற்றார்.

 தற்போதுள்ள கல்ஹின்னை ஜாமிஅதுல் பத்தாஹ் என்றழைக்கப்படும் அல்-மத்ரஸதுல் பத்தாஹ்வில் மார்க்கக் கல்வியையும் தொடர்ந்தார்.


அதன் பின்னர் உயர் கல்விக்காக வெலிகம ஜாமிஅதுல் பாரி. குருவித் தெருப்பள்ளி காயல்பட்டினம் ஜாவியா, மஹ்ளரா ஆகிய கலாபீடங்களிலும் சென்று பட்டம் பெற்றவரும் ஆவார்.

அப்போதிருந்த அரச பரீட்சையான எ.எஸ்.எ.பரீட்சையில் 1956ம் ஆண்டு தேர்ச்சிபெற்றார். அதே போன்று 1957ல் மௌலவி ஆலீம் பட்டமும் பெற்றார். அதைத் தொடர்ந்து 1958ல் வெலிகம அல்-மத்ரஸத்துல் பாரியில் உப அதிபராக நியமனம் பெற்றார். 16ம் திகதி 04 ஏப்ரல் மாதம் 1959ஆம் ஆண்டு ஹோராபொல அரச பாடசாலையில் அரபு ஆசிரியராக முதல் நியமனம் பெற்றார். தொடர்ச்சியாக 32,ஆண்டுகள் அரசாங்க கல்லூரிகளுள் போதனாசிரியராக கடமையாற்றியவரும் ஆவார் அல்ஹம்துலில்லாஹ்.

இப்பணிக்கு மத்தியில் 1964ம் ஆண்டு கண்டி ஜாமிஉல் அஹ்லம் ஹனபி ஜும்மாப் பள்ளியில் தலைமை இமாமாகவும் நியமனம் பெற்றார். 1985ம் ஆண்டு அப்பள்ளி புதுமெருகு பெற்றது. அன்று முதல் பள்ளியின் பிரதம நிர்வாகப் பொறுப்பும் வழங்கப்பட்டது. 

இலங்கை வானொலி என்ற பெயரில் இயங்கிய ஒளிப்பரப்புத் துறையில் 1957ல் மௌலவி கலாநிதி Dr அல்-ஹாஜ் மர்ஹும் H. சலாஹுத்தீன் அவர்கனின் முதல் நிகழ்ச்சி இடம் பெற்றது. அது அன்று தொடர்க்கம் பல ஆயிரக்கணக்கான ஒலிப்பதிவுகளுக்கும் மேல் தாண்டிக் கொண்டு இருக்கிறது. 

சமகாலத்தில் வானொலி, தொலைக்காட்சிகள் மூலம் ஆயிரக்கணக்கான மார்க்க உபதேசங்களையும் நடாத்தயுள்ளார். அத்துடன் அகில இந்திய வானொலி, சிங்கப்பூர் ரேடியோ, கனேடிய ரேடியோ லண்டன் பீ.பீ.ஸி உட்பட பல ஒலிஒலிபரப்பு நிலையங்களில் போட்டிகள் அடிக்கடி இடம்பெற்றன அவைகளில் பிரதம அதிதியாக அடிக்கடி கலந்து சிறப்பித்தனர்.
கண்டி இஸ்லாமிய நிலையத்தின் பணிப்பாளராகவும், அகில இலங்கைக்குமான சமாதான நீதிவானாகவும், வகுப்சபையின் பிரதித் தலைவராகவும், மத்திய மாகாண ஜமிய்யத்துல் உலமாவின் தலைவராகவும் பதவிகளை வகித்து, நாட்டுக்கும் சமூகத்துக்கும் அரும்பணி ஆற்றினார். இவற்றின் விளைவாகவே இலங்கை அரசாங்கமே அவருக்கு தேசமான்ய” தேசகீர்த்தி’’  கால பூசண; விருதுகளை வழங்கி கௌரவித்தது. 

அதே 1957ம் ஆண்டு காலப்பகுதியில் தீனும் இஸ்லாம் எனும் ஏட்டில் முதலாவது கட்டுரை பிரசுரம் பெற்றது. அன்று முதல் உள்நாட்டில் அயல்நாடுகளின் நாளேடுகள் வாராந்த, மாதாந்த பருவ சஞ்சிகைகள் போன்றவற்றில் அரபு, தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய நான்கு மொழிகளில் வெளிவந்து கொண்டிருந்தது அல்ஹம்துலில்லாஹ்

தனது வாழ்நாளில் 50க்கு மேற்பட்ட தடவைகள் ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றியதோடு பல்லாயிரக்கணக்கான ஹாஜிகளுக்கு ஹஜ்ஜி வழிகாட்டியாகவும் செயல்பட்டுள்ளார்.

ஆங்கிலம், தமிழ், சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும், பாண்டித்தியம் பெற்றிருந்த அவர் அபார பேச்சாற்றல் உள்ளவராக விளங்கினார். இலங்கையில் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் இவர் ஆற்றிய மார்க்கச் சொற்பொழிவுகளும், குத்பாப் பிரசங்கங்களும் அனைவராலும் பாராட்டப்பட்டன.

இலங்கையிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளில் இவர் முஸ்லிம்களின் பிரதிநிதியாகப் பங்கேற்ற்றுள்ளார். இலங்கையில் 1991ம் ஆண்டு நடைபெற்ற ஆறாவது சார்க் மகாநாட்டில் மட்டுமின்றி, ஐக்கிய நாடுகள் சபையிலும் கூட இவர் முஸ்லிம்களின் சார்பாக உரை நிகழ்த்தியுள்ளார் என்பதை அறியும்போது நாம் பெருமைப்பட வேண்டும். 

இலங்கையில் பிரித்தானிய அரசின் உதவியுடன் நிர்மானிக்கப்பட்ட விக்டோரியாத் திட்டம், பிரித்தானியப் பிரதம மந்திரி மாகரட்தாட்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வின் போதும் முஸ்லீம் உலமாவாக இவரே பங்கேற்றார்.

இவர் சிறந்த பேச்சாளராக மட்டுமின்றித் தலை சிறந்த எழுத்தாளராகவும் விளங்கினார்.சிங்கள மொழியில் 5 நூல்களும், ஆங்கில மொழியில் 7 நூல்களும் தமிழ் மொழியில் இருநூறுக்கும் மேற்பட்ட நூல்களும் இவரால் எழுதி வெளியிடப்பட்டன.

மக்களை நல்வழிப்படுத்திச் சீரிய பாதையில் இட்டுச் செல்லும் சிறந்த வழிகாட்டியாகவும் இவரின் படைப்புக்கள் அமைந்திருந்தன. இவரால் எழுதப்பட்ட நூல்கள் உலகளாவியரீதியில் ஒரு கோடிக்கு மேற்பட்ட பிரதிகள் விற்பனை செய்யப்பட்டன.

குழந்தைகளின் உரிமைகள் பற்றி இவரால் எழுதப்பட்ட நூல் UNESCO நிறுவனத்தினால் பாராட்டப்பட்டதோடு அந்த வரிசையில் 57வது எழுத்தாளராக அல்-ஹாஜ் கலாநிதி டாக்டர் மர்ஹும் H சலாஹுத்தீன் தெரிவு செய்யப்பட்தார். அமெரிக்க நிறுவனக்கள் பலவும் இவரது பணிகளை புகழ்ந்து பாராட்டி Expertise முதலிய பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளன.American Biological Institute USA நிறுவனம் 2௦௦6ம் ஆண்டில் அல்-ஹாஜ் கலாநிதி டாக்டர் மர்ஹும் H சலாஹுத்தீன் அவர்களுக்கு விரிவுரையாளர் (Professor) டாக்டர் ஆகிய பட்டங்களை வழங்கி கௌரவித்தது

தமது இளமைப் பிரயாத்திலிருந்தே எழுத்துத் துறையிலும் நூல் வெளியீட்டிலும் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருப்பவராவார் எண்ணற்ற மேடைப் பேச்சுகளையும் ,வானொலி, தொலைக்காட்சி உரைகளையும் நிகழ்த்தி வந்தவர் இலங்கையின் எல்லா ஊர்களிலும் இவருடைய குத்பா உரைகள் இடம்பெற்றுள்ளன. அல்ஹம்துலில்லாஹ்

இலங்கைக்கு வெளியையும் மௌலவி கலாநிதி Dr அல்-ஹாஜ் மர்ஹும் H. சலாஹுத்தீன் இவருடைய பேருரைகளை பிரசித்தம் பெற்றிருந்தன  இந்தியா, இங்கலாந்து, அமெரிக்க, பிரான்ஸ், கனடா, பெல்ஜியம், ஹொங்கொங், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், புருணை, ஐக்கிய இராச்சியங்கள் போன்ற பல நாடுகளிலும் குத்பா பேருரையை நடத்தி தான் பிறந்த கல்ஹின்னை மண்ணுக்கும் தன் நாட்டுகும் அழியாப்புகழ் பெருமையை தேடித்தந்து விட்டு 25-07-2013 அன்றையதினம் நோன்பு 15ம் நாள் எம் அனைவர்களிடமிருந்தும் விடைபெற்றுக் கொண்டு இறையடி எய்தார். இனாய்ல்லாஹி வஹின்கிலாஹி ராஜுஹூன்

மௌலவி கலாநிதி Dr அல்-ஹாஜ் மர்ஹும் H. சலாஹுத்தீன் அவர்களுக்கு ஜென்னத்துல் பிர்தவ்ஸ் சொர்க்கத்தை நசீபக்க அருள்புரிவானாக, ஆமீன் ஆமீன் ஆமீன்
அவர் எழுதிய சிறுநூல்கள்-பலநூறு-இவரது படைப்புக்கள் 
அதன் தலைப்புக்கள்-அற்புத நீர் ஊற்றுகள்.....
கனிந்த இவரது நெஞ்சம் 
தெளிந்த நீர் ஊற்று-இவரது 
ஆன்மீக அற்புதப் படைப்புகள்
அகிலத்து மாந்தர்க்கு அற்புத தேன் ஊற்று
அருந்தி மகிழ்வோம் நாமும்
அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்
அல்ஹம்துலில்லாஹ். 

குறிப்பு:  முஷான் இன்டர்நேஷனல் ஸ்தாபகர் பிரபல தொழிலதிபர் அல்-ஹாஜ் M முஸ்லிம் அவர்களின் தந்தையும் ஆவர் 


M.M.பாரூக் (WC)
கல்ஹின்னை. 


Post a Comment

Previous Post Next Post