டெஸ்ட் போட்டிகள் பொதுவாக நிதானமான ஆட்டத்திற்கு பெயர்போனது. தற்போது 20 ஓவர் போட்டிகளின் ஆதிக்கத்தால், முன்பை விடவும் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் சற்று அதிரடியாக ஆடத் தொடங்கியுள்ளனர்.
டெஸ்டில் கடைசி விக்கெட்டுகள் களத்தில் இருக்கும்போது, பேட்ஸ்மேன் அதிரடி ஆட்டத்தை விளையாடுவார். கடைசி விக்கெட்டுகள் எளிதில் வீழ்த்தப்படும் என்பதால் முடிந்த அளவுக்கு ரன்களை குவிக்க, பேட்ஸ்மேன்கள் இந்த யுக்தியை கையில் எடுப்பார்கள்.
அந்த வகையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையே கடந்த ஜூன் ஜூலையில் நடைபெற்றது. இதில் 5வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸின்போது இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரை இந்திய அணியின் பும்ரா எதிர்கொண்டார்.
இந்த ஓவரில் ஒரு வைடில் பவுண்டரி, ஒரு நோபாலில் சிக்ஸர் தவிர 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடிக்கப்பட்டது. கடைசி பாலில் பும்ரா சிங்கிள் தட்டினார். பும்ரா பேட் செய்தததன் மூலம் 29 ரன்களை எடுத்தார். ஒட்டுமொத்தமாக இந்த ஒரே ஓவரில் 35 ரன்கள் எடுக்கப்பட்டது.
2003-04 ல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரைன் லாரா,தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர் ராபின் பீட்டர்சன் ஓவரில் 28 ரன்களை எடுத்தார். இதுதான் டெஸ்ட் போட்டியில் ஒரு ஓவரில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாக இருந்தது.
இந்த 18 ஆண்டுகால சாதனையை இந்தாண்டில் பும்ரா முறியடித்துள்ளார். இந்நிலையில், பும்ராவின் அதிரடி ஆட்டம் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
BOOM BOOM BUMRAH IS ON FIRE WITH THE BAT 🔥🔥
— Sony Sports Network (@SonySportsNetwk) July 2, 2022
3️⃣5️⃣ runs came from that Broad over 👉🏼 The most expensive over in the history of Test cricket 🤯
Tune in to Sony Six (ENG), Sony Ten 3 (HIN) & Sony Ten 4 (TAM/TEL) - https://t.co/tsfQJW6cGi#ENGvINDLIVEonSonySportsNetwork #ENGvIND pic.twitter.com/Hm1M2O8wM1
news18
Tags:
விளையாட்டு