கல்ஹின்னை ஜும்மாப் பள்ளிவாசல் பரிபாலன சபை தேர்வு....ஒரு சிறு குறிப்பு

கல்ஹின்னை ஜும்மாப் பள்ளிவாசல் பரிபாலன சபை தேர்வு....ஒரு சிறு குறிப்பு


கல்ஹின்னையைச் சேர்ந்த முக்கிய தனவந்தர்கள் ஓன்று சேர்ந்து பரிபாலன சபை தேர்வு சம்பந்தமாக  (இன்று 21-12-2022,கொழும்பில்) கலந்துரையாடல் நடைபெறுகிறது 

பள்ளிவாசல் பரிபாலனை சபைக்கான அங்கத்துவர்களை தெரிவு செய்யும் பட்டியலை தீர்மானிக்கும் விடயாமாகவும் கலந்துரையாடலில் ஆலோசனைகள் பரிமாறிக்கொள்ளப் படும்.

இந்தக் கலந்துரையாடல் நல்லமுறையில் முடிவுற நாம் அனைவரும் அல்லாஹ்விடம் துவாச் செய்வோம்.

எனினும் சில முக்கிய விடயங்களை இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.

பள்ளி நிர்வாக சபை பொறுப்பென்பது மிகவும் பொறுப்பு வாய்ந்த ஒரு பதவி என்பதை நாம் ஒவ்வொருவரும் மறந்துவிடக்கூடாது.நான் ஏற்கனவே பல கட்டுரைகளில் அதைப்பற்றிய விளக்கங்களை தெளிவு படுத்தியுள்ளேன்.

பள்ளி நிர்வாக சபை தலைவராக வரவேண்டும் என்றால்பணபலமும் ,செல்வாக்கும் இருந்தால் மட்டும்போதாது. உண்மை நேர்மை ,கல்வி போன்றவை மிகவும் முக்கியம் .

இவை இருந்தால்தான் அந்தப் பதவிக்கு தகுதியானவராக இருப்பார்கள்.நியாயமான தீர்ப்புகளை வழங்கக் கூடியவர்களாய் இருப்பார்கள்.

நாம் உலகத்திற்கு வரும்போது வெறுங்கையுடனே வந்தோம்; எதையும் எடுத்துக்கொண்டு வரவில்லை. நிர்வாணமாக வந்தோம்; எதையும் அணிந்துக்கொண்டு வரவில்லை. அவ்வாறே நாம் உலகிலிருந்து செல்லும்போது வெறுங்கையுடனும், கஃபன் புடவையுடனும்தான் செல்லவிருக்கிறோம். பிறப்பிற்கும் இறப்பிற்குமிடையில் நாம் உலகில் மிகக் குறுகிய காலங்களே வாழக்கூடியவர்களாக  இருக்கிறோம்.  எனவே அல்லாஹ்வின் வீட்டை பாரிபாலனை செய்ய முன்வருபவர்கள் முதலில் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள்.   இமாம் கஸ்ஸாலி (ரஹ்மத்துலாஹி அலைஹி) அவர்கள் கூறுகிறார்கள்:

 “யார் அல்லாஹ்வைப் பயந்து நடக்கிறார்களோ அவகளைக் கண்டு எல்லா (படைப்பினங்களு)ம் பயப்படுகின்றன. யார் அல்லாஹ்வைத் தவிர்த்து வேறு யாரையேனும் ஒருவருக்கு பயப்படுகிறாரோ அவருக்கு அனைத்திலிருந்தும் பயந்து கொண்டே இருப்பார்.” (நூல்: இஹ்யாஉ உலூமித்தீன்)

1. தலைவருக்கு இருக்க வேண்டிய மிக முக்கிய பண்பாக இஸ்லாம் தக்வாவை தான் கருதுகிறது. 'மக்களை கண்காணிக்கும் தலைவரிடம் அவருடைய பொறுப்பில் உள்ள குடிமக்கள் குறித்து கேள்வி கேட்கப்படும்' (புகாரி முஸ்லிம்)

2. மஷீரா - தன்னிச்சையாக முடிவெடுக்காமல் இறையச்சமும்   ஞானமும் நிரம்பிய தன்மைகளுடன் இருக்க வேண்டும் 

3. எதிர்கொள்ளும் நவீன பிரச்சினைகளுக்கு இஸ்லாத்தின் அடிப்படையில் தீர்வு சொல்ல வேண்டியவராய் இருத்தல் அவசியம்.

4. நீதி செலுத்துதல் - தலைவராக இருக்க கூடியவர்கள் எந்த சொந்தங்கள் இரத்த பந்தங்கள் செல்வாக்கு அதிகாரத்துக்கும் பணியாமல் சரியான முறையில் நீதி வழங்க 
கூடியவர்களாக இருக்க வேண்டும். இதுவே இஸ்லாமியரின் பண்பாடு.

6. தனக்கு கீழ் உள்ள தொண்டர்களை புரிந்து கொண்டு வேலையை பகிர்ந்து கொடுக்க வேண்டும்.  அல்ஹம்துலில்லாஹ்

புதிதாக கல்ஹின்னை ஜும்மாப் பள்ளிவாசல் பரிபாலன சபைக்கு வருபவர்கள் உண்மையிலேயெ அல்லாஹ்வுக்கு மாத்திரம் பயமுடையவர்களாக  இருப்பின் பதவி ஏற்கும் நாள் அன்று கல்ஹின்னை ஜும்மாப் பள்ளிவாசல் பிம்போர் முன் நின்றுகொண்டு ஊர் ஜமாத்தார்கள் முன் பையத் செய்யவும் 

நான் பதவியில் இருக்கும் காலம் வரையிலும் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக நடந்து கொள்ள மாட்டேன்  என்று முன்மொழிந்தால் வரவேற்கத்தக்கது,

யார் அந்த ஆண் மகன் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம், இன்ஷா-அல்லாஹ் 

M.M.பாரூக் (WC)
கல்ஹின்னை.


 


Post a Comment

Previous Post Next Post