கல்ஹின்னை பாடசாலைக்குள் வெளியார்களின் ஆதிக்கத்தை நிறுத்துங்கள்

கல்ஹின்னை பாடசாலைக்குள் வெளியார்களின் ஆதிக்கத்தை நிறுத்துங்கள்


கடந்த காலங்களில்  கல்ஹின்னையில் ஆட்சியும், அதிகாரமும் ஒரு சில  கூட்டத்தார்களின் கை வசமே  இருந்தன, அது ஒரு முதலாளித்துவ அடக்குகு முறை போன்றது.

சாதாரண குடும்பத்திலிருப்பவர்களுக்கு உயர்கல்வி கற்கும் வாய்ப்புக்கள் மிகவும் அரிது .வியாபாரங்களில் ஈடுபடுவது மற்றும் ஊரின் முக்கிய நிகழ்வுகளில் பண்குபெருவதுபோன்றவை சாதாரண மக்களால் சற்று கடினமாயிருந்த ஒரு காலம் எமதூரில் இருந்தது. 

அன்றைய காலகட்டத்தில் முதலாளித்துவ வர்க்கம்  சாதாரண மக்களை ஏமாற்றி காணிகளை சுவீகரித்ததகவும் கூறக் கேட்டிருக்கின்றோம்.பணியாரப் பெட்டிகளைக் கொடுத்து காணிகளைப் பெற்றுக்கொண்டதாகவும் கேள்விப்பட்டுள்ளோம்.

அதுமட்டுமல்லாமல் பெரிய இடத்து திருமணங்களுக்கு சென்றால் சாதாரண மக்களுக்கென்று தனியாக ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருக்கும் .அப்படி ஒதுக்குப்புறமாக அமர வைத்து சாப்பாடு போடுவார்கள்.

இப்படி பல அடக்குமுறைகள்  தொடர்ந்துகொண்டிருந்ததை எதித்து போராடியவர்களில்  முக்கியமாக 1.மர்ஹூம் V.C.ஷரீப்,2.மர்ஹூம் ராலஹாமி அப்பா,3,மர்ஹூம் அலாவுதீன் அப்பா.4.மர்ஹூம் அலவத்த ஜுனைதீன் போன்றவர்கள் முக்கியமானவர்கள்.இவர்களின் சுயநலமற்ற சமூக விழிப்புணர்வு போராட்டங்கலாள்தான் இன்று கல்ஹின்னையில் இருந்த அடக்கு முறைகள் இல்லாதொழிக்கப்பட்டன.

ஆனால் இன்றைய வளரும் சமுதாயம் மீண்டும் ஒரு அடக்குமுறைக்குள் சிக்கி விடுமோ என்ற நிலை உருவாகிக்கொண்டிருப்பதாக நினைக்கத் தோன்றுகின்றது.

இன்று எமதூரில் புதிதுபுதிதாக பதவிகளைப் பெற்றுக் கொள்பவர்கள் நாங்கள்தான் இந்த ஊருக்கு அரசர்கள் என்பதைப்போன்று நடந்துகொள்கின்றனர்.தவறுகளை சுட்டிக்காட்டும்போது தலைக்கனம் பிடித்து ஆடுகின்றனர்.எதோ வேற்றுக் கிரகத்திலிருந்து வந்தவர்களைப்போன்று நடந்துகொள்கின்றார்கள்.    

காற்சட்டை அணிந்துவிட்டால் நாங்கள்தான் அறிவாளிகள் என்பதைப்போன்று தவறுகளை சுட்டிக்காட்டுபவர்களை ஏளனமாகப் பார்க்கின்றார்கள்.இப்படிப்பட்டவர்கள் எந்தவிதத்திலும் பொது பொறுப்புக்களுக்கு தகுதியில்லாதவர்கள்.

இன்னும் ஒரு சிலர் புகழுக்காக பல தியாகங்களை செய்துகொண்டிருக்கின்றார்கள் .அவர்களுக்கு காக்கா பிடிக்கின்றவர்கள் எப்படிப் புகழ்வதென்று தெரியாமல் எப்படியெல்லாமோ கதையலக்குகின்றார்கள்.

ஹஜ்ஜுக்குப் போகாதவரை ஹாஜியார் என்றும் ,கேடயத்தை கையில் கொடுத்து சாம்பியன் என்று புகழ்ந்தும் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இப்படிப்பட்ட புகழை எதிர்பார்க்கும் ஒரு சில கொடை வள்ளல்களும் எமதூரில் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

இது ஒரு கேவலமான செயல் மட்டுமல்ல ,கேவலமான புகழும் கூட.
 
நெதர்லாந்தில் வசிக்கும் ரியாஸ் ஹலீம்தீன் அவர்கள் பல சந்தர்ப்பங்களில் கல்ஹின்னை மக்களுக்கு உதவியிருக்கின்றார்.கல்வி விடயத்தில் பாடசாலைக்கு பல சந்தர்ப்பங்களில் உதவியிருக்கின்றார்.இன்றும் அதனை தொடர்ந்துகொண்டிருக்கின்றார்.
அதன் ஒரு பகுதியாக கடந்த சில தினங்களுக்கு முன் கல்ஹின்னை அல்-மனார் தேசிய பாடசாலைக்கு லேப்டாப்(LAPTOP) அன்பளிப்புச் செய்துள்ளார்.பாராட்டப்படவேண்டிய ஒரு விடயம் .அவருடைய சேவைகள் தொடர வாழ்த்துகின்றோம் .

ஆனாலும் ரியாஸ் அவர்கள் சில விடயங்களில் கவனம் செல்த்தவேண்டியது மிகவும் முக்கியம்.

அதாவது இன்று நீங்கள் செய்கின்ற பொதுக்சேவைகள் உங்களை மிகவும் உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை.அது உங்களின் உண்மையான நோக்கத்தைப் பொருத்தது.

ஆனால் புகழ் பெறவேண்டும் என்பதற்காக சிலரை பணம் கொடுது புகழச் சொல்வது உங்கள் மகத்தான நோக்கங்களை சிதைத்துவிடும் .அன்பாக நீங்கள் கொடுக்கின்றவைகள் உங்களை அசிங்கப்படுத்திவிடும்.ஆகவே இப்படிப்பட்ட புகழ்தேடும் பயணத்தை நிறுத்துங்கள்.

அதிபர் அவர்களுக்கு !ரியாஸ் அவர்கள் பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்த லேப்டாப்பை (LAPTOP)மாணவர்கள் பயன்பெறும் வகையில் பயன்படுத்துங்கள்.நீங்கள் ஒரு அதிபர் . அதை எப்படி பயனுள்ளதாக மாற்ற முடியும் என்று  உங்களுக்குத் தெரியும்.கண்ட..கண்டவர்களுடன் ஆலோசனைகள் கேட்காமல் உங்கள் பொறுப்பையுணர்ந்து நிறைவேற்றுங்கள் 

ஏனென்றால் கல்ஹின்னை பாடசாலையின் அதிகாரம் அதிபர் ஆசிரியர்களைவிட வெளியார்களின் ஆதிக்கத்தில்தான் இருக்கின்றது.கடந்த காலங்களில் வெளி ஆதிக்கத்தின் காரணமாக இந்தப் பாடசாலை ஒரு பேய்கள் குடியிருக்கும் பாடசாலையாகவே இருந்துள்ளது .அதை மாற்றும் பொறுப்பு உங்களுக்கு இருக்கின்றது 

உங்களுக்கு இருக்கின்ற அதிகாரத்தின் மூலமாக அடக்கி ஆள நினைக்கின்றவர்களை அடக்கிவிடுங்கள். 

மீண்டும் ஒரு "பாத்திமா ஒழிக" https://galhinnatoday.blogspot.com/2021/11/7-10-2011-video-1.htmlஎன்ற  போராட்டங்களுக்கு இடம் கொடுக்கவேண்டாம்.அந்த நிகழ்வுதான் இன்றைய கல்ஹின்னை பாடசாலையின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாயிருக்கின்றது என்று என்னைப்போன்று பலரும் நினைக்கின்றார்கள் .நீங்களும் அறிந்தவர்தான் 

அப்படிப்பட்ட நிகழ்வுகள் நடக்காமல் பாதுகாப்பீர்கள் என்று நினைக்கின்றோம் 

அதிபரின் விடயங்களில் ,ஆசிரியர்களின் விடயங்களில் தேவையற்ற ஊடுருவல்களை தடுக்கவும்.உங்களுக்கு பின்னால் ஒரு அரசாங்கமே இருக்கின்றது என்பதை நீங்கள் மறந்துவிடவேண்டாம் ..

ஏனென்றால் இந்தப் பாடசாலைக்கு வெளியார்களின் தலையீடு அதிகம் .ஏனென்றால் சிறு சம்பவத்தை சொல்கின்றேன் .2003ஆம் ஆண்டு ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு "கல்வியின் தோற்றம் கணணி வரை "என்று ஒரு கவிதை எழுதி அதை அழகிய முறையில் வடிவமைத்து அதிபர் அலுவலகத்தில் வைத்தேன் .ஆனால் அது இன்று காணாமல் போய்விட்டது.கற்பூர வாசனை அறியாத கழுதைகளின் வேலை என்று அதை மறந்துவிட்டேன்.

ஆகவே இன்று உங்கள் கையில் கிடைக்கின்ற நன்கொடைகளை மாணவர்கள் பயன்பெறும் வகையில் பயன்படுத்துங்கள் .இல்லையென்றால் கவிதைக்கு நடந்த கதைதான் ஏற்படும் 
M.M.பாரூக் (WC)
கல்ஹின்னை.

 


Post a Comment

Previous Post Next Post