கல்ஹின்னை மஸ்ஜித் நிர்வாகசபைக்கு பொருத்தமான தெரிவு !

கல்ஹின்னை மஸ்ஜித் நிர்வாகசபைக்கு பொருத்தமான தெரிவு !


சுமார் 40, ஆண்டுகளுக்கு முன்பு கல்ஹின்னையில் ஆட்சி.அதிகாரம் ஒருசில குறிப்பிடட்ட குடும்பங்களுக்கு மட்டுமே சொந்தமாயிருந்ததை அறிவோம்.

அவர்கள் நினைத்ததுதான் சட்டம் .அவர்கள் நினைத்தவர்களுக்குதான்
பதவியும் பட்டங்களும் கொடுக்கப்படும்,என்ற சர்வாதிகார ஆட்சி முறை தொடர்ந்துகொண்டுதானிருந்து.

பொதுவாக பள்ளி நிர்வாகத்தை எடுதுக்க்கொண்டோமேயானால் அங்கு சாதாரண மக்களுக்கு பதவிகள் கொடுக்கப்படமாட்டாது.

இந்த சர்வாதிகாரப்போக்கு சற்று மறைந்துகொண்டிருக்கும் இத்தருணத்தில் ,இன்றைய இளம் சமூகம் மீண்டும் ஒரு சர்வாதிகார ஆட்சியை கல்ஹின்னைக்குள் விதைக்க முனைகின்றார்களோ என்று நினைக்கத் தோன்றுகின்றது.

இன்று கல்ஹின்னையில் பள்ளி நிர்வாக சபை தெரிவு ஒரு கேலிக்கூத்தாகிவிட்டது.நினைத்தவர்கள் நிர்வாக சபைக்குள் வரலாம் என்கிற ஒரு மிகவும் இலகுவான எண்ணத்தில் இவர்களின் செயற்பாடுகள் இருக்கின்றன.

பலரும் பலவிதமான கனவுகளோடு அலைகின்றதைக் கானக்கூடியதாயுள்ளது.

எனினும் தவறான ஒரு தெரிவு நடந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் தெளிவாக செயல்படுகின்றார் M.முஸ்லீம் சலாஹுதீன் அவர்கள்.  

1989,ம் ஆண்டு காலகட்டத்தில் தான் பிறந்த மண்ணில் ஜனநாயக முறைப்படி பள்ளி நிர்வாக தெரிவுகள் நடைபெறவேண்டும் என்ற உயர்நோக்கில்  M. முஸ்லிம் சாலஹுத்தீன் அவர்கள். ஊர் விடயங்களில் தலையிட்டு பல மாற்றங்களை செய்தார்.

அதற்கான அதிகாரத்தை நீதி மன்றத்தின் மூலம் சட்டரீதியாக பெற்றிருந்த போதும் கூட  ஜனநாயக கோட்பாடுகலுக்குள் தன்னை முழுமையாக அர்பணித்துக் கொண்டு இன்று வரையும் செயல்படும் ஒரு மாமனிதர்தான் ஹாஜியார் அவர்கள் அல்ஹம்துலில்லாஹ்.

 M. முஸ்லிம் சாலஹுத்தீன் அவர்ளுடன் ஜிப்ரி ஹாஜியார்

சட்டரீதியான அதிகாரங்களை பெற்றிருந்தாலும் ,இனிவரும் காலங்களில் அல்-ஹாஜ் S.M.ஜிப்ரி அவர்களே அணைத்து விடயங்களையும் முன்னின்று செய்வார் என்றும் தெரிவித்தார்.அதன்படி ஜிப்ரி ஹாஜியார் அவர்களும் கல்ஹின்னையின் வளர்ச்சிக்கு அன்றிலிருந்து இன்று வரையிலும் அயராது உழைக்கின்றதை காண்கின்றோம்.

இந்நிலையில் கல்ஹின்னை ஜும்மாப் பள்ளிவாசலுக்கு புதிய பரிபாலன சபை தலைவரை நியமிக்கும் பொறுப்பும்  M. முஸ்லிம் சாலஹுத்தீன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கல்ஹின்னை பள்ளியின் புதிய நிர்வாக சபை தலைவராக ரஸ்மி ஹாஜியார் (GEE BEES)அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.

கல்ஹின்னை பள்ளியின் புதிய நிர்வாக சபை தலைவராக ரஸ்மி ஹாஜியார் (GEE BEES)அவர்கள் 

முஸ்லிம் சலாஹுதீன் அவர்களின் தேர்வு மிகவும் பொருத்தமான ஒன்று.

ரஸ்மி ஹாஜியார் அவர்கள் கல்ஹின்னையில் பல குடும்பங்களுக்கு உதவிகள் புரிந்துள்ளதை நாம் அறிவோம் .திருமணங்களுக்கு,கல்விக்கு என்று பல உதவிகள் செய்துள்ளார் இன்றுவரையில் அதை தொடர்ந்துகொண்டிருப்பவர்.

ரஸ்மி ஹாஜியார் தலைவர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர்.

இப்படிப்பட்டதொரு தெரிவு கல்ஹின்னையின் வளர்ச்சிக்கு உத்வேகத்தை கொடுக்கும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

பரிபாலன சபைக்கான அங்கத்தவர்கள் இன்னும் தெரிவு செய்யப்படவில்லை என்றாலும் அதில் ஒரு சிலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முஸ்லிம் சலாஹுதீன் அவர்கள் பொருத்தமான ஒரு பள்ளி நிர்வாக சபை தலைவரை நியமித்ததைப்போன்று ,பொருத்தமான அங்கத்தவர்களையும் நியமிப்பார் என்று நம்புகின்றோம்.  

ஆகவே ஊரில் பிரிவுகள் ஏற்படாதவண்ணம் இந்த தெரிவுகள் நடைபெறும் என்று நினைக்கின்றோம்.

பொதுவாக அங்கத்துவர்களை தெரிவு செய்யும்போது  இஸ்லாமிய கோட்பாடுகளுக்கமைய தெரிவு செய்வது மிகவும் முக்கியம் .படிப்பு முக்கியமாகக் கவனிக்கப்படுதல் அவசியம்.

ஊர் ஜமாத்தார்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அல்லது மாற்றங்கள் ஏதேனும் செய்யப்படவேண்டுமென்றால் கல்ஹின்னை ஒன்றியத்தின் தலைவர் அல்-ஹாஜ் ஜிப்ரி அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

GEEBEES, ரஸ்மி ஹாஜியார் அவர்கள் கல்ஹின்னை ஜும்மாப் பள்ளிவாசல் பரிபாலன சபைக்கு தலைவராக வருவதையிட்டு ஊர் மக்கள் பெருமைப்படுகின்றார்கள்.பொருத்தமான ஒரு தலைவரை தந்ததற்காக அல்லாஹ்வுக்கு நன்றியை தெரிவிக்கின்றார்கள்.அல்ஹம்துலில்லாஹ் எல்லாப்புகழும் இறைவனுக்கே.

M.M.பாரூக் (WC)
கல்ஹின்னை. 

 


Post a Comment

Previous Post Next Post