வீட்டின் சமையல் அறையில் இருக்கும் பொருட்களை கொண்டே நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கச்செய்துவிடலாம். இதற்கு கருப்பு மிளகு சிறந்த தீர்வாக அமையும். ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கருப்பு மிளகு தூளை கலந்து ஒரு மாதம் தொடர்ந்து பருகி வந்தால் எண்ணற்ற உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.
கருப்பு மிளகு தரும் ஆரோக்கிய நன்மைகள்:
முதலாவதாக குடலின் ஆரோக்கியத்தை பேணி அதன் நச்சுக்களை அகற்ற நாம் தினமும் மிளகு நீர் அருந்த வேண்டும். செரிமானமும் மேம்படும். வயிற்று பிரச்சினைகளும் தடுக்கப்படும். இந்த நீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு செல்களின் வளர்ச்சியையும் ஊக்குவிக்க உதவும். மேலும் செல்களின் சேதத்தையும் தடுக்கும்.
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் பருகும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். இது வர வேற்கத்தக்கதென்றாலும் இந்த நீருடன் கருப்பு மிளகு தூள் சேர்த்து பருகி வரலாம். நீர், மிளகு இவை இரண்டும் செரிமானத்தை சீராக்கும். அதிக கலோரிகளை எரித்து வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கச்செய்யும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வாக அமையும்.
ஒரு மாதத்திலேயே உடல் எடையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உணரலாம். இதனை நீங்கள் சூடான நீருடன் மிளகு சேர்த்து பருகுவது குடல் ஆரோக்கியத்தை பேணுவதோடு சரும செல்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும். நீரிழப்பை தடுக்கவும் உதவும்.
நாள்பட்ட மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் கண்டிப்பாக இந்த தண்ணீரை தினமும் பருக வேண்டும். ஏனெனில் இது குடல் இயக்கத்தை மேம்படுத்தி, வயிற்றின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
lanka4
Tags:
ஆரோக்கியம்