அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் வபரக்காத்துஹு
கல்ஹின்னை பெரிய ஜும்மாப் பள்ளிவாசல் புதிய நிர்வாகம் சம்பந்தமாக நான் கடந்த வாரம் கல்ஹின்னை டுடே (மின்னிதழ்) பத்திரிகையில் எழுதிய கட்டுரை சம்பந்தமாக மதிப்புக்குரிய சகோதரர் ரிஷாட் ஹுசைன் அவர்கள் CHANGING GALHINNA) WHATSAPP குழுமத்தில் வாய்ஸ் கிளிப் (VOICE CLIP) ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
அந்தக் கட்டுரையில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கல்ஹின்னையில் சர்வாதிகார ஆட்சி முறை இருந்ததாக நான் குறிப்பிட்டிருந்தேன்.
ஆனால் அன்று அப்படியொரு நிலை இருக்கவில்லை என்றும் ,இன்றுதான் அப்படியானதொரு ( சர்வாதிகார) நிலைமை கல்ஹின்னையில் இருப்பதாகவும் சகோதரர் ரிஷாட் அவர்கள் அந்த வாய்ஸ் கிளிப்பில் குறிப்பிடுகின்றார்.
மதிப்புக்குரிய ரிஷாட் ஹுசைன் அவர்களைப் போன்று நான் பட்டப்படிப்பு படித்தவனில்லை , தற்போதைய கல்ஹின்னை அல்-மனார் தேசியப்பாடசாலையில் வெறுமெனே 4,ம் ஆண்டு வரையிலும் கல்வி கற்றவன்., வறுமையின் காரணமாகத் என்னால் தொடர முடியாமல் போனது காலத்தின் கோலம் என நினைக்கிறேன்
எனினும் உங்கள் கருத்துக்கு என்னால் பதில் தரலாம் ,அதற்குரிய பல ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றது.அவற்றை பகிரங்கப்படுத்தி மறைந்தவர்களின் மானத்தோடு விளையாடும் கீழ்த்தரமானவன் நானில்லை.நான்காம் வகுப்புப் படித்தாலும் கண்ணியமாக நடந்துகொள்ளும் பண்பு என்னிடம் இருக்கின்றது.
நீங்கள் குரிப்பிட்டதைப்போன்று எவரையும் தூக்கிப் பிடிக்கவுமில்லை ,தூற்றவும் இல்லை.
கல்ஹின்னையின் உண்மையான நிலவரத்தைப் பற்றித்தான் நான் எழுதியிருந்தேன்.அடுத்தவர்களைப்போன்று புனைப்பெயர்களில் மறைந்துகொண்டு தவறை சுட்டிக்காட்டும் பழக்கம் இந்த நான்காம் வகுப்புப் படித்த என்னிடமில்லை.உண்மையான பெயரில் எழுதுகின்றேன்.
நான் குறிப்பிடுகின்ற அல்லது நான் எழுதுகின்ற கட்டுரைகள் முழு ஆதாரத்துடன்தான் எழுதுகின்றேன்.அடுத்தவர்களைப்போன்று அடிமைப்பட்டு ,அல்லது ஊர்ப்பெரியவர்களைசந்தோஷப் படுத்துவதற்காகவோ நான் எழுதுவதில்லை.
உண்மையை உரக்கச் சொல்ல நான் ஒருநாளும் தயங்க மாட்டேன்.
சகோதரர் ரிஷாட் ஹுசைன் அவர்களே! சந்தேகங்கள் நிலை கொன்டால் சந்தோசங்கள் சீர்குலைந்து விடும், என்பார்கள்.
எனவே உங்களுக்கு அல்லது உங்கள் சகாக்களுக்கு நான் எழுதுகின்ற விடயங்களில் ஏதேனும் சந்தேகமிருந்தால் நேரடியாக விவாதிக்கலாம். கல்ஹின்னை பெரிய ஜும்மா மஸ்ஜிதில் ஊர் ஜமாத்தார்கள் முன் விவாதிப்போம் .
நான் தோற்று விட்டால் தொழுகை முடிந்ததும் ஊர் ஜமாத்தார்கள் முன் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
அப்படி நீங்கள் தோற்றுவிட்டால் அதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
தெரிவிப்பது நான் தீர்மானிப்பது நீங்கள்
M.M.பாரூக் (WC)
கல்ஹின்னை.
Tags:
கல்ஹின்னைபோஸ்ட்