CHANGING GALHINNA whatsapp குழுமத்தின் ஒரு ஆவேசக் குரலுக்கு பதில்

CHANGING GALHINNA whatsapp குழுமத்தின் ஒரு ஆவேசக் குரலுக்கு பதில்

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ வபரக்காத்துஹு 

கடந்த சில நாட்களுக்கு முன் 'கல்ஹின்னை டுடே'யில் நான் எழுதிய கட்டுரைக்கு பல விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன,நான் எழுதிய விடயங்கள் தவறென்று சுட்டிக்காட்டுபவர்கள் எது தவறென்று குறிப்பிடுகின்றார்களில்லை .

அதன் உண்மைத்தன்மையை அறிய அவர்களுக்கு ஆர்வமுமில்லை .கல்ஹின்னையின் இன்றைய நிலைமையைப்ப்றிய கவலையுமில்லை .எதோ வாய்க்கு வந்ததெல்லாம் கொட்டித் தீர்க்கின்றார்கள்.அர்த்தமேயில்லாமல் புலம்புகின்றார்கள்.

அதில் முக்கியமாக  இரண்டு நாட்களுக்கு முன் CHANGING GALHINNA whatsapp குழுமத்தில் நசார் நானாவின் ஆவேசக்  குரலில் வெளியிடப்பட்ட  ஒளிநாடாவை கேட்டேன் .

என் உடம்பெல்லாம் புல்லரிக்க செய்தது, கல்ஹின்னை மக்கள் மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கும் நசார் நானாவை நினைத்து பெருமைப்படுகின்றேன் .

ஆனால் ஹாஜியார்மாரைப்பற்றி குறைகூருகின்ற இவர் ,கல்ஹின்னைக்கு என்ன செய்தார் என்ற கேள்வி என்னுள் எழுகின்றது.

ஹாஜியார்மார்கள் எதுவுமே செய்யாமல் ஊரில் ஆதிக்கம் செலுத்துவதைப் போன்ற சில கருத்துக்களை பதிவிடுகின்றார்.

அதுமட்டுமின்றி எனக்கு சரியான பாடம் புகட்டப்படும் என்றும் அந்த ஆடியோவில் பதிவிட்டுள்ளார்.இது ஒரு கேலிக்கூத்தான ஆவேசம் என்றே எனக்குத் தோன்றுகின்றது.

அவருடைய அகராதியில் 'பாடம் புகட்டப்படும்' என்பதன் அர்த்தம் அடியும் உதையுமாகதானிருக்கும்.ஏனென்றால் அவருடைய ஆவேசமான பேச்சு அதற்கு ஏற்றதாக இருந்தது.

பரவாயில்லை நசார் நானாவிடம் அடியும் உதையும் வாங்குவதில் தப்பில்லை என்று நினைக்கின்றேன்.

இப்படி ஊருக்காக ஆவேசமாக பேசுகின்ற நசார் அவர்கள் ஊருக்காக என்ன செய்துள்ளார் என்ற கேள்வியும் என்னுள் எழுகின்றது.

ஊருக்கு நல்லதைச் செய்கின்றவர்களை குறை சொல்கின்ற இந்த நசார் நானா கல்ஹின்னைக்கு என்ன செய்துள்ளார் என்று பார்த்தால் ஒரே ஒரு நிகழ்வுதான்  நினைவுக்கு வருகின்றது.

கல்ஹின்னை பெரிய ஜும்மாப் பள்ளிவாசல் கண்ணாடியை உடைத்து நாசப்படுத்தி, ஹவ்லில் மனிதனின் மலத்தைப் போட்டு நாசம்பண்ணியவர்களின்(VAT GROUP)பட்டியலில் இடம்பெற்றவர் என்ற பெருமையை தவிர இவர் புகழ்பெற வேறு எந்தவிதமான சேவைகளையும் கல்ஹின்னைக்கு செய்யவில்லை என்று மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

இப்படி ஒரு கேவலமான செயல் உலகில் எங்கும் நடந்திருக்க முடியாது.ஆனால் நசார் நானாவும் ,அவருடைய(VAT) தோழர்களும் கல்ஹின்னையில் இந்த கேவலமான செயலை செய்து புகழ்பெற்றதை கல்ஹின்னை மக்கள் இன்றளவும் மறக்கவில்லை .அது மறக்கவும் முடியாத ஒரு நிகழ்வு.

VAT GROUP-ல் இவருக்கு எப்படியான தொடர்புகள் இருந்தது என்பதை கல்ஹின்னை மக்கள் அறியாமலில்லை .எனினும் விரைவில் ஒரு சில ஆதாரங்களுடன் நசார் நானாவின் VAT தொடர்புகள் வெளிவரும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றேன் 

WHATSAPP குழுமத்தில் ஒரு சிலர் ஹாஜியார்மார்களை குற்றம் சுமத்துவதிலேயே கண்ணும் கருத்துமாக ,தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.ஹாஜியார்மார்கள் கல்ஹின்னைக்கு என்ன செய்தார்கள் என்ற கருத்துக்களையும் கேள்வியாகத் தொடுக்கின்றனர்.

கருத்துக்களும் விவாதங்களும் இருப்பது நல்ல ஆரோக்கியமான தீர்வுகளுக்கு வழிவகுக்கும் .

ஆகவே சிலர் குறிப்பிடுவதைப்போன்று ஹாஜியார்மார்கள் என்னதான் செய்துள்ளார்கள் என்பதை சற்று பார்ப்போம்..

படகொள்ளாதெனியாவிலிளிருந்து கல்ஹின்னை வரைக்கும் எனக்குத் தெரிந்த சிலவற்றை இங்கே குறிப்பிடுகின்றேன் .( சிலவற்றை சுருக்கமாக இங்கே குறிப்பிடுகின்றேன் .மேலும் பல விடயங்கள் இருக்கின்றன .அவற்றை பிறிதொரு சந்தர்ப்பத்தில் எழுதுகின்றேன் )

அஹமத் றியாஸ் ஹாஜியார் அவர்கள் சிறார்களுக்கான ஆரம்ப பாடசாலையை (CRESCENT NURSERY SCHOOL)ஆரம்பித்து அதற்கான கட்டிடம் ஒன்றையும் கட்டிக்கொடுத்துள்ளார்.. 

இதில் நசார் நானாவின் பங்குகள் இருக்கின்றதா? 

அஸ்மி ஹாஜியார் மாபோலா (டைல்ஸ் அனீஸ் அவர்களின் சகோதரர்) பீரீஎல பள்ளிவாசலுக்கு  கடை ஒன்றினையும் பட்டகொல்லாதெனிய  ஜமாலியா பாடசாலைக்கு  20, பேர்ச்சஸ்  காணியும் அன்பளிப்புச் செய்து கொடுத்துள்ளார்கள்.  

சாலஹுத்தீன் ஹாஜியார் அவர்கள்  பட்டகொல்லாதெனிய ஜும்மாப் பள்ளிவாசலை முழுமையாக புனர்நிர்மாணம் செய்து கொடுத்துள்ளார்.

இதில் நசார் நானாவின் பங்குகள் இருக்கின்றதா? 

கல்ஹின்னை ஒன்றியத்தின் தலைவர் அல்-ஹாஜ் S.M. ஜிப்ரி அவர்களினால் பல லட்ச ரூபாய் செலவு செய்து கல்ஹின்னை அல்-மனார் தேசியப்பாடசாலைக்கு  நிலையானதொரு சிற்றுண்டிச் சாலை ,  அல்-மனார் தேசியப்பாடசாலை அதிபருக்கான விடுதி  ஒன்றினையும்  அமைத்துக் கொடுத்துள்ளார்.

இதில் நசார் நானாவின் பங்குகள் இருக்கின்றதா? 

கல்ஹின்னை மத்ரஷாவுக்கு புதிய கட்டிடம் ஒன்றை பலகோடி செலவு செய்து கட்டிக்கொடுதுள்ளார் பசீர் ஹாஜியார் அவர்கள் 

இதில் நசார் நானாவின் பங்குகள் இருக்கின்றதா?

GEE-BEES ரஸ்மி ஹாஜியார் அவர்களின் தந்தையின் ஞாபகர்த்தமாக கல்ஹின்னை ஜாமிஅதுல் பத்தாஹ் அரபுக் கலாபீடத்தை காலத்திற்கு ஏற்ப தேவையான அனைத்தையும் விசாலப்படுத்திக் கட்டிடத்தைப் புனர்நிர்மாணம் செய்து கொடுத்திருகின்றார் ரஸ்மி ஹாஜியார்அவர்கள்.

இதில் நசார் நானாவின் பங்குகள் இருக்கின்றதா? 

கல்ஹின்னை பள்ளியகொட்டுவ ஆரம்பப் பாடசாலையின் முதல் அதிபராக இருந்த மர்ஹும் A.H.சாஹுல் ஹமீத் அவர்களின் புதல்வர் அல்-ஹாஜ் ஷர்பான் அஹ்மத் அவர்கள் அல்-மனார் தேசியப்பாடசாலை வளாகத்தில் அமைந்திருக்கும்  அல்-நூர் மஸ்ஜித்  தக்கியப்பள்ளியின் புனர்நிர்மாண வேலையைப் பூர்த்தி செய்து கொடுத்தது, கல்ஹின்னை பாலர் பாடசாலை அதிபருக்கான காரியால கட்டிடத்தை அணைத்து வசதிகளுடனும் அமைத்துக்கொடுத்தது ,மற்றும் கல்ஹின்னையில் முதன் முதலாக சிறுவர் விளையாட்டரங்கு அமைத்துக்கொடுத்தது போன்றவற்றை செய்து கொடுத்துள்ளார்.

இதில் நசார் நானாவின் பங்குகள் இருக்கின்றதா? 
  
அல்-ஹாஜ் M முஸ்லிம் சாலஹுத்தீன் அவர்கள் 1989,ம் ஆண்டு முதல் கல்ஹின்னை மக்களின் தேவைகள் அறிந்து பல உதவிகளை செய்துள்ளார் செய்துகொண்டும் இருக்கின்றார்.

அல்-மனார் தேசியப்பாடசாலை வளாகத்தில் ஒரு வாசிகசாலை,, பெரிய ஜும்மாப் பள்ளிவாசல் புனர்நிர்மாணம், பட்டகொல்லா தெனிய ஜமாலிய பாடசாலைக்கென விளையாட்டு மைதானம்,இன்னும் அடையாளப்படுத்த முடியாத இரகசியமாக தர்மங்கள் செய்துள்ளார்.

இதில் நசார் நானாவின் பங்குகள் இருக்கின்றதா? 

மாத்தளை சென்ட்ரல் ஸ்டோர்ஸ் அல்-ஹாஜ் அப்துல் கரீம் அவர்கள் 40,பேர்ச்சஸ் காணி ஒன்றினை ஜமாலியா முஸ்லிம் மகாவித்தியாலயத்திற்கு   அன்பளிப்புச் செய்துள்ளார்.

இதில் நசார் நானாவின் பங்குகள் இருக்கின்றதா? 

மர்ஹும் ராபி ஹாஜியார் அவர்கள்  பட்டகொல்லாதெனிய ஜும்மாப் பள்ளிவாசலில் நோன்புக் கஞ்சி(10, நாட்கள்)  வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் .அது இன்றுவரையிலும் தொடர்கின்றது.

இதில் நசார் நானாவின் பங்குகள் இருக்கின்றதா? 

தற்பொழுது ஊரில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தரணி எச்.எம்.பாரூக் ,,பரீத் மந்திரி.S.M. கலீல், A.L.M ரசான், உவைஸ் ரசான், ரிசான் சாலி, ஹஷாஹிம். போன்றவர்கள் ஊருக்காக பல சேவைகள் செய்திருக்கின்றார்கள்.

(மர்ஹூம்களைப் பற்றி பிறிதொரு கட்டுரையில் குறிப்பிடுகின்றேன்)

இதில் நசார் நானாவின் பங்குகள் இருக்கின்றதா? 

மேலும் சில சகோதரர்கள் பெயர் குறிப்பிட விரும்பாதவர்கள் கல்ஹின்னைக்கு பல விடயங்களில் இன்றும் உதவி வருகின்றனர்.

இன்னும் பல சகோதரர்கள் ஊர் விடயங்களில் தலையிட்டு உதவி வருகின்றனர்.

இப்படியாக என்னிடம் மிக நீண்ட பட்டியலே இருக்கின்றது.விரைவில் அதை வெளியிடுகின்றேன் 

இப்படி கல்ஹின்னைக்கு பல உதவிகள் செய்கின்றவர்களை எல்லாம் விரட்டி விட்டால் ,கல்ஹின்னை மக்களுக்கு உதவ வேறு யார் முன்வருவார்கள் ?

லட்சங்களையும்,கோடிகளையும் கொட்டி தொடர்ந்தும் சேவை செய்ய வேறு எவராவது முன் வருவார்களா?.

அதற்கு தயாரானவர்களை தேர்ந்தெடுங்கள்.அப்படியில்லாமல் WHATSAPP மூலம் வீர வசனங்கள் பேசி உதவுகின்றவர்களின் மனதை நோகடித்து ,அவர்களைப்பற்றி தவறான விமர்சனங்கள் வைப்பது தவறு.

நசார் நானா அவர்களே!
உங்களிடம் பணமும் செல்வாக்கும் இருப்பதாக குறிப்பிட்டிருந்தீர்கள்.அல்ஹம்துலில்லாஹ் 
அதை வைத்து உங்கள் நேரம் காலத்தை வீணடித்து என்னைத் தேட வேண்டாம் .நேரடியாக வாருங்கள். அல்லது 
என்னைத் தொடர்புகொள்ளவும். .இதோ என்னுடைய தொலைபேசி இலக்கம் +94,077,4495559,
  
M.M.பாரூக் (WC) 
கல்ஹின்னை.


 


Post a Comment

Previous Post Next Post