கல்ஹின்னை மக்களை பிளவு படுத்தும் சூழ்சிகள் வேண்டாம்

கல்ஹின்னை மக்களை பிளவு படுத்தும் சூழ்சிகள் வேண்டாம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் வபரக்காத்துஹு 

கல்ஹின்னை பெரிய ஜும்மாப் பள்ளிவாசல் புதிய பரிபாலன சபை தெரிவு சம்பந்தமாக CHANGING GALHINNA( whatsapp)யில் பலரும் பலவிதமான விமர்சனங்களை வெளிப்படுதிக்கொண்டிருந்தார்கள்.

விமர்சனங்களும் ,கருத்துப்பரிமாறல்களும் நல்லதொரு தீர்மானத்திற்கு வழிவகுக்கும் ,

ஆனால் changing கல்ஹின்னையில் நடந்ததோ வேறு விதமாக இருந்தது.

குறிப்பிட்ட ஒரு சிலரை அசிங்கப்படுத்தும் வேலையை செய்துகொண்டிருந்தார்கள்.தேவையற்ற கருத்துக்களை பறிமாறிக்கொண்டிருந்தார்கள்.உண்மைக்கு புரம்பான செய்திகளை பரப்பிக்கொண்டிருந்தார்கள். இது ஒரு மோசமான செயல் என்பதை நாம் கல்ஹின்னை டுடேயில் சுட்டிக் காட்டியிருந்தோம் .ஆனாலும் ஒரு சிலர் தகாத வார்த்தைகளால் எம்மை தாக்கினார்கள் .

changing galhinna ஆரம்பித்தவுடன் கல்ஹின்னைக்கு ஒரு பொற்காலம் உதயமாகிவிட்டதாகத்தான் கல்ஹின்னை மக்கள் நினைத்திருந்தார்கள் .ஏனென்றால் அவர்களின் திட்டங்கள் சம்பந்தமான அறிவித்தல்கள் எமதூர் மக்களிடையே ஒரு நம்பிக்கையை வளர்த்தது.
CHANGING கல்ஹின்னையால் வழங்கப்பட்ட நலத்திட்டங்கள்

ஆனால் இன்று அந்த நம்பிக்கை தவிடுபொடியாகக் கூடிய செயல்களை செய்துகொண்டிருக்கின்றார்கள்.

அவர்கள் செய்த மாபெரும் தவறு ,ஊரில் ஒரு திட்டத்தை அமுல்படுத்த முன்பு whatsapp குழுமத்தில் கருத்துக் கேட்பது.
கருத்துக்கேட்பது அல்லது விவாதிப்பது தவறென்று நான் கூறவில்லை .ஆனாலும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பதைப்போன்று அளவுகடந்து சென்றதுதான் தவறு.

பாடசாலை அபிவிருத்தி,ஆம்புலன்ஸ் ,மற்றும் வைத்தியசாலை புனர் நிர்மாணம் போன்ற நல்ல திட்டங்கள் இருந்தாலும் நிறைவேறால் கிடப்பில் போடப் பட்டதன் முக்கிய காரணம் "அவசியமற்ற ஆலோசனைகள் "தான் .அவசியமற்ற கருத்துப் பரிமாறல்கள்தான்.இப்படிப்பட்ட கருத்துப் பர்மாறல்களால் முடிவில் அனைத்துத் திட்டங்களும் பூஜ்ய நிலைக்கு வந்தது.எதுவும் நடக்கவில்லை மண்ணோடு மண்ணாய் புதையுண்டு விட்டது.

இன்று changing galhinnai  கல்ஹின்னை மக்களிடையே ஒற்றுமையை சீர் குலைக்கும் ஓர் சக்தியாக மாறிவிட்டது.அதைத்தான் இன்று செய்து கொண்டிருக்கின்றனர்.
இன்று கல்ஹின்னையில் மிகவும் மோசமான ஒரு சூழ்நிலை உருவாகிக்கொண்டிருக்கின்றது.நண்பர்கள் எதிரிகளாக மாறிக்கொண்டிருக்கின்றனர்.சமூக சேவைகள் செய்கின்றவர்களை அசிங்கப்படுத்தி அவர்களை விரட்டியடிக்கும் முயற்சியில் ஒரு சிலர் முயற்சிக்கின்றனர்.இவை அனைத்திற்கும் ஊர் மக்கள் changing கல்ஹின்னையை பயன்படுத்துகின்றனர்.

அட்மின்(admin)கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இது ஒரு ஆரோக்கியமான நகர்வல்ல .கல்ஹின்னை ஒரு கலவர பூமியாக மாறும் அபாயங்கள் தென்படுகின்றன.அதற்கு முழுப் பொறுப்பும் changing கல்ஹின்னை அட்மின்கள்தான் பொறுப்புக் கூறவேண்டும்.  இளைஞர்களை தவறான வழியில் நடாத்திச் செல்லும் கருத்துக்களை பதிவு செய்து கல்ஹின்னையின் எதிகாலத்தை நாசம் பண்ண வேண்டாம் .

கல்ஹின்னையில் ஆரம்பிக்கப் பட்டுள்ள ஒன்றியம் இன்று ஊரில் பல நல்ல திட்டங்களை செய்துள்ளார்கள்.தொடர்ந்தும் செய்துகொண்டிருக்கின்றார்கள்.பாடசாலை .பள்ளி ,மற்றும் ஊர் மக்களின் தனிப்பட்ட பிரச்சினைகளை மிகவும் ஆர்வத்துடன் விளம்பரமில்லாமல் செய்துகொண்டிருக்கின்றார்கள்.மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயம்.

ஊரில் ஒவ்வொரு விடயங்களிலும் "ஒன்றியம்" தலையிட்டு தீர்த்து வைக்கின்றனர்.இதைவிட வேறு என்னதான் வேண்டும்?

கல்ஹின்னையின் வளர்ச்சிக்காக changing கல்ஹின்னையிடம் பல திட்டங்கள் இருப்பதாக பல முறை அறிவித்துள்ளார்கள்.நல்ல அறிவித்தல்கள்தான்.எனினும் அது நிறைவேறாமல் முடக்கப்பட்டுவிட்டன.அதற்குக் காரணம் ஒற்றுமையின்மையே.

changing கல்ஹின்னையில் இருக்கின்ற அட்மின்களில் அநேகமானவர்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.இவர்களுக்கு ஊரில் நடக்கின்ற உண்மையான நிலவரங்கள் தெரிய வாய்ப்பில்லை.ஊரில் இருக்கின்ற changing கல்ஹின்னையின் ஒரு சில ஆதரவாளர்கள் கொடுக்கின்ற தகவல்களின்படிதான் அட்மின்களின் செயல் திட்டங்களும் இருக்கும்.உண்மையான தகவல்களாயிருந்தாலும்,பொய்யான தகவல்களாயிருந்தாலும் நம்பி விடுகின்றனர்.

இது எதிர்காலத்தில் மிகப்பெரும் ஒரு ஆபத்தாக முடியும் .அது இன்றே ஆரம்பித்துள்ளது.

ஆகவே changing கல்ஹின்னை adimin-கள் சற்று சிந்தித்து செயல்பட்டால் நல்லதொரு பயனைப் பெறலாம்.

ஒன்றியத்துடன் இணைந்து செயல்பட்டால் ஒற்றுமை வளரும் .கல்ஹின்னையும் வளர்ச்சியும் பெருகும்.உங்கள் கனவுகளும் நிறைவேறும் என்று நினைக்கின்றேன் .

வெளி நாடுகளில் தொழில் புரிகின்றவர்கள் ஊருக்கு ஏதாவது நல்லது செய்ய நினைத்தால் ஒற்றுமையாக இணைந்து செயல்படுங்கள்.

அப்படியில்லாமல் whatsappதான் தீர்வு என்றால் கல்ஹின்னை மக்களிடையே இன்று இருக்கின்ற ஒற்றுமையை( changing galhinna) மாற்றுவீர்கள். 

அல்லாஹ் பாதுகாக்கட்டும்.   

M.M.பாரூக் (WC)
கல்ஹின்னை. 


 


Post a Comment

Previous Post Next Post