எல்லாப்புகழும் அல்லாஹ்வுகே
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
ஹிஜ்ரி 1444 ( கி.பி 2022) ஆம் கல்வியாண்டில் கல்ஹின்னை ஜாமிஅதுல் பத்தாஹ் அரபுக் கலாபீடத்தின் அல்-ஆலீம் கற்கையை நிறைவு செய்து, பரீட்சையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் வைபவம் 15,ம் திகதி ஜனவரி, 2023, அன்று கல்ஹின்னை ஜாமிஅதுல் பத்தாஹ் அரபுக் கலாபீடத்தின் கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக நடாத்தப்பட்டன,
அல்ஹம்துலில்லாஹ்...
இந்நிகழ்வில் கல்ஹின்னை ஜாமிஅதுல் பத்தாஹ் அரபுக் கலாபீடத்தின் நிர்வாகத் தலைவர் அல்-ஹாஜ் ரஸ்மி, கல்ஹின்னை ஒன்றியத்தின் தலைவர் அல்-ஹாஜ் ஜிப்ரி, கல்ஹின்னை பெரிய ஜும்மாப் பள்ளிவாசல் நிர்வாகத்தின் தலைவர் அல்-ஹாஜ் ரியாஸ் லதிப், முன்னையநாள் கல்ஹின்னை பெரிய ஜும்மாப் பள்ளிவாசல் நிர்வாகத்தின் தலைவர் அல்-ஹாஜ் சட்டத்தரணி பாரூக், மற்றும் கல்ஹின்னை அல்-மனார் தேசியப்பாடசாலையின் அதிபரும், கல்ஹின்னை பாலர் பாடசாலையின் அதிபர், Dr,சுஹைப், கல்ஹின்னை ஜாமிஅதுல் பத்தாஹ் அரபுக் கலாபீடத்தின் அல்-ஆலீம் கற்கையை நிறைவு செய்து, பரீட்சையில் தேர்ச்சி பெற்ற வெளியாகின்ற மாணவர்களின் குடும்பத்தார், கல்ஹின்னை ஜாமிஅதுல் பத்தாஹ் அரபுக் கலாபீடத்தில் மார்க்கநெறியை கற்றுக் கொண்டிருக்கின்ற மாணவர்கள், ஊரார்கள் கலந்து சிறப்பித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்...
அதனைத் தொடர்ந்து வெளியாகும் மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டன அல்ஹம்துலில்லாஹ்
1)M.A. SALMAN–AKURANA
2)M.H. ABDHULLAH–IKKIRIGOLLAWA
3)M.A.M. YOOSUF–GALHINNA
4)M.I.YOONUS AHMADH–AKURANA
5)M.S.FAYAZ AHMADH–GALHINNA
6)M.H.M.ILHAM–PANAGAMUWA
7)N.M. NASIK–GALHINNA
ஜாமிஅத்துல் பத்தாஹ் கலாபீடத்தின் தற்போதைய நம்பிக்கைப் பொறுப்பாளர் சபைத் தலைவர் அல் ஹாஜ் : A .R .M . ரஸ்மி அவர்களும் கல்ஹின்னை ஒன்றியத்தின் தலைவர் அல்-ஹாஜ் S.M. ஜிப்ரி அவர்களும் அன்றும் இன்றும் கல்ஹின்னை ஜாமிஅதுல் பத்தாஹ் அரபுக் கலாபீடத்தின் வளர்சிக்கு உறுதுணையாக இருப்பவர்கள் .மேலும் பல தனவந்தர்கள் ஜாமிஅத்துல் பத்தாஹ் அரபுக் கல்லூரியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றார்கள் .அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக .
(கல்ஹின்னை ஜாமிஅதுல் பத்தாஹ் அரபுக் கலாபீடத்தின் அதிபர் அல்-ஹாஜ் அஷ்ஷைக் அல்-உஸ்தாத் அல்-ஹாபில் M.S.Mரஸ்ஸான் (ஹஸனி) அவர்களின் உரையினை கேட்போம்.)👇👇👇
முக்கியமாக குறிப்பிடவேண்டியவர்கள் ,இந்தப் புனிதமான சேவையை செய்கின்ற ஆசிரியர்கள்.
ஆசிரியர்களின் அயராத உழைப்பின் பயனை இன்று எமது பிள்ளைகள் அனுபவிக்கின்ற இந்த மகிழ்வான சந்தர்ப்பத்தில் அந்த ஆசான்களையும் எமது துஆக்களில் சேர்த்துக்கொள்வோம்.அல்லாஹ் அவர்களுக்கு மென்மேலும் ரஹ்மத் செய்வானாக
M.M.பாரூக் (WC)
கல்ஹின்னை.
Tags:
கல்ஹின்னைபோஸ்ட்