மிகவும் கவலையாயிருந்தது.
.
தாருல் ஹுதா என்ற பெயருடன் இயங்கும் இந்த பாலர் பாடசாலை நிர்வாகம் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளவேண்டும் .
அங்கு கடமை புரிகின்ற ஆசிரியைகள் ஹிஜாப் அணிந்துகொண்டு பாடம் சொல்லிக்கொடுப்பது அர்த்தமில்லாத ஒருசெயல்.
சின்னக்குழந்தைகளுக்கு ஆட்டத்தையும் பாட்டையும் சொல்லிக்கொடுத்து படிக்க வைப்பது அவர்களின் எதிர்காலத்தையே நாசம் பண்ணிவிடும்.
அது எந்த மதத்தை சேர்ந்த பிள்ளைகளாயிருந்தாலும் அவர்களுடைய வீழ்ச்சிக்கு ஆசியர்கள்தான் பொருப்புதாரிகள்.
சிறு வயது முதலே பொழுதுபோக்கு அம்சங்களை பிள்ளைகளுக்கு ஊட்டிவிடும்போது அது மிகப்பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஆசிரியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
பிள்ளைகளின் திறமையை காட்ட எத்தனையோ விடயங்கள் இருக்கின்றது .கல்வி சம்பந்தமாகவும் ,விளையாட்டு ,மார்க்கம் போன்ற விடயங்களில் குழந்தைகளுக்கு பயிற்சியளிக்க முடியும்.
இவை பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு பயனுள்ளதாயிருக்கும்.
இன்று வீடுகளில்( tv) சீரியல் ,சினிமா பார்க்கின்ற குழந்தைகளும் ,பெற்றோர்களும் ,அதுவே வாழ்க்கை என்று கற்பனைபன்னிக்கொண்டிருக்கின்றார்கள்.
நடிகர்களையும் நடிகைகளையும் கடவுளாகப் பார்கின்றார்கள்.ஒருத்தன் நூறு பேரை அடித்தால் அவனைக் கொண்டாடுகின்றார்கள்.எதோ ஒரு பாட்டை முமுணுத்து கொஞ்சம் ஆடிவிட்டால் அவன் பெரிய ஆட்ட நாயகன் என்றெல்லாம் பெருமையடித்துக்கொள்ளும் அவலத்தை கண் கூடாகப் பார்க்கின்றோம் .
சினிமாவாலும்,சீரியலாலும் சீரழிகின்ற குடும்பங்கள் பல.
பாலியல் கொடுமைகள்.போதை வஸ்துப் பாவனை ,கொலை கொள்ளை என அத்தனை சமூக சீர்கேடுகளுக்கும் முக்கிய காரணம் சினிமாவும் ,சீரியளும்தான்.
ஆகவே தாருல் ஹுதா பாடசாலை மட்டுமல்ல ,அணைத்து பாடசாலைகளுக்கும் எனது அன்பான ஒரு வேண்டுகோள்...
சினிமாவும் ,சீரியலும் கொரோனாவைவிட மோசமான ஒரு தொற்று.அந்தத் தொற்றை பாடசாலைக்குள் புகுத்த வேண்டாம்.
நல்ல விடயங்களை பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள் .ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாது என்பார்கள்.
அதற்கு உதாரணம்தான் ஒரு சில முஸ்லிம் அமைச்சர்களின் பிள்ளைகளின் திருமணங்கள்.
பிள்ளைகளை இப்படிதான் வளர்க்கவேண்டும் என்ற அழகிய வழிமுறைகளை குர்ஆணும் ஹதீசும் மிகத் தெளிவாக அறிவுறுத்துகின்றன.
அது எந்த இனப் பிள்ளைகளாயிருந்தாலும் நல்லவற்றை சொல்லிக்கொடுப்பது ஆசிர்யர்களின் கடமை.
ஒரு சிறு பிள்ளையை பலபேர் முன்னிலையில் ஆடவிட்டு அழகுபார்ப்பது எந்த விதத்தில் நியாயமாயிருக்கவேண்டும்?
தவறு நடப்பது இயல்பு அதை திருத்திக்கொள்ளவும்.
Tags:
கல்ஹின்னைபோஸ்ட்