ஒற்றுமையே உன்னதமான வாழ்க்கை!

ஒற்றுமையே உன்னதமான வாழ்க்கை!


ஒற்றுமையின் கைற்றைப் பற்றிப்பிடித்துக் கொள்வோம் என்கின்ற வார்த்தைக்கே முன் உதாரணம் பட்டகொல்லாதெனிய வாழ் மக்கள்!

எதிர்வரும் உள்ளூர்ஆட்சித் தேர்தலில் போட்டியின்றி தமது பிராந்தியத்தில் எல்லோரும் ஒன்றினைந்து ஊரின் நலனுக்காக தன் சமூகத்தின் மேன்பாட்டுக்காக நான், நீ என்கின்ற போட்டியில்லாமல் ஒரு பிரதிநிதியைத் தெரிவு செய்து எல்லோரும் ஒற்றுமையாக வாழ்வோம் என ஊரார்களால் எடுக்கப்பட்டிருக்கும் தீர்மானம், அல்லாஹ் பொருந்திக்கொள்ளும் ஓர் விடயமாகும் என்பதில் சந்தேகமில்லை, அல்ஹம்துலில்லாஹ்.

இன்று மனிதர்கள் மதத்தால், இனத்தால், மொழியால், நிறத்தால், அரசியலால் பிளவுபட்டுத் தங்களுக்குள் வேறுபட்டு ஒருவரை ஒருவர் அழிப்பதற்கு முயன்று கொண்டிருக்கின்றனர். நாட்டிற்கு நாடு மக்கள் வேருபட்டு மனம் குறுகி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள முனைகின்றனர். நாட்டுக்கு நாடு மட்டுமல்லாது ஒரே நாட்டிற்குள்ளும் இத்தகைய நிலைமையே அதிகரித்துள்ளது.

நாட்டிற்குள்ளும், மாவட்டத்திற்குள், ஊர், கிராமம், தெரு, வீடு, உறவுகள் என இவ்வேற்றுமை என்ற பகையுணர்ச்சி விரிந்து கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கது.

இத்தகு மனிதர்களைத் திருத்தி நல்வழிப்படுத்த நமது முன்னோர்கள் காலங்காலமாக வாழ்வியலறங்களை எடுத்துரைத்துக் கொண்டே இருக்கின்றனர். ஆனாலும் இவர்கள் திருந்தவில்லை. இவர்கள் என்றாவது ஒரு நாள் மனம் திருந்துவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பால் நம்முன்னோர்கள் பழமொழிகள் வாயிலாகவும் ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளனர்.

இப்படியானதொரு தீர்மானங்கள் ஏனைய பிராந்தியங்களிலும் நடைபெறும் என்றால் வரவேற்கத்தக்கது இன்று பொதுவாகவே நாட்டிலும், சமூகங்களுக்கு இடையிலும் காணக்கூடியதாக இருக்கும் பிளவுகளுக்கு காரணமே ஒற்றுமையின்மை என்பதேயாகும், 

என்று மனிதனானவன் உலகிலேயே வாழும்போது பேராசையும், தற்பெருமையும் அவனுள் குடிபுகுந்து இருக்குமானால் அவன் அழிவின் வாசற்படியில் நிற்கின்றான் என்பதேயாகும் பதவிமோகம், என்னால்தான் முடியும், எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று ஆணவம் கொண்ட எவருமே உலகிலேயே நன்றாக வாழ்ந்து மறைந்த சரித்திரமில்லை. 
உதாரணம்: (பிரவ்ன்) 

வீடோ, நாடோ அனைததிலும் ஒற்றுமை  வேண்டும். ஒற்றுமை இல்லையெனில் வீடும் நாடும் சீரழிந்துவிடும். இதனை, உணர்ந்து கொண்ட மக்கள் வாழும் இடங்கள் சொர்கத்தை போன்றாகும் மாஷா-அல்லாஹ் இன்று பட்டகொல்லாதெனிய பிராந்திய மக்கள் மத்தியில் இப்படியான மாற்றங்கள் தேவையென உணர்ந்து அனைவரும் ஒன்றுதிரண்டு கைகோர்த்துக் கொண்டு எதிர்வரும் உள்ளூர் ஆட்சித் தேர்தலில் ஒரே ஊர், ஒரே மக்கள், ஒரேயொரு அரசியல் பிரமுகர் ஊருக்கே போதுமென்று தீர்மானிக்கப்பட்டது என அறியப்படுகிறது 

பட்டகொல்லாதெனிய பகுதியைச் சேர்ந்த ஊரார்களினால் ஒற்றுமைக்கு ஒரு கிராமம் ஒன்றுபட்டது என்றால் உண்மையிலேயெ அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்றுக் கொண்டார்கள் என்றால் மிகையாகாது, அல்ஹம்துலில்லாஹ்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை (கூடி-சேர்ந்து)
ஒத்திருந்தா கெத்தா வாழலாம்
ஒத்து-ஒற்றுமை, கெத்து-மதிப்பு
தனி மரம் தோப்பாகாது
ஒரு கை தட்டினா ஓசை வராது
இரண்டு கை தட்டினால்தான் ஓசை வரும்
ஊரு கூடினாத்தான் தேரு இழுக்க முடியும்
அஞ்சுவிரலும் ஒண்ணாவா இருக்கு?
ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டமாம்
நீரடிச்சு நீர் விலகுமா?
 
M.M.பாரூக் (WC)
கல்ஹின்னை.


 


Post a Comment

Previous Post Next Post