சமீபகாலாமாக கல்ஹின்னை அல்-மனார் தேசியப்பாடசாலையின் அதிபர் அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்க்கும்போது அடிமைத்தனமா? ஆசையா? அல்லது அறியாமையா? என சந்தேகம் எழுகின்றன.
யாரேனும் ஒருவர் அன்பளிப்பு பொருட்களை கொடுத்தால் அவற்றை பாடசாலை முகநூல் பக்கம் புகைப்படங்களுடன் பிரசுரிப்பதும் அதற்கான வர்ணனைகள் எழுதுவதையும் காணக் கூடியதாய் இருக்கின்றது.(எழுதும் வார்த்தைகளில் பிழைகள் இருப்பதைக் கண்டு கொள்வதில்லை.அது வேறு விஷயம்)
இப்படி விளம்பரத்திற்காக உதவுகின்றவர்கள் எதோ ஒரு பயனை எதிர் பார்த்துத்தான் செய்வார்கள்.அந்த வகையில் இந்த புகைப்படங்களும் வீடியோவும் தெளிவாக புரிய வைக்கின்றது.
நல்ல எண்ணத்தோடு உதவுகின்றவர்கள் எப்பொழுதும் விளம்பரத்தை எதிர்பார்க்க மாட்டார்கள் .
அப்படியே உதகின்றவர்களை கவுரப் படுத்த நினைத்தால் உங்கள் காரியலத்தில் வைத்தே முடித்திருக்க வேண்டும் .மாணவர்களின் படிப்பு நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியமில்லை .
கல்ஹின்னை பாடசாலைக்கு பலர் உதவுகின்றார்கள்.அவர்கள் இப்படி விளம்பரத்தை எதிர்பார்த்து செய்வதில்லை.எந்த பலனையும் எதிர் பார்க்காமல் பாடசாலையின் வளர்ச்சிக்காக உதவுகின்றார்கள் .
அந்த வகையில் ஒன்றியத்தின் தலைவர்,அவர்கள் கோடிக் கணக்கான உதவிகளை செய்கின்றவர்.மேலும் பலர் பலவிதமான உதவிகளை செய்கின்றார்கள் .அவர்களை தோலில் சுமந்து சென்றாலும் அதற்கு தகுதியானவர்கள் .ஆனாலும் அவர்கள் விளம்பரத்தை எதிர்பார்த்து செய்வதில்லை .முகநூலில் முகத்தை காட்ட விரும்பாதவர்கள் .
இது ஒரு தனியார் பாடசாலை அல்ல அரசாங்கத்தின் ஓர் அங்கம்.அதற்குத் தேவையான வசதிகளை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொள்ளக் கூடிய வழிமுறைகளை அதிபர்தான் தேடவேண்டும்.
அதைவிட்டு விட்டு கல்ஹின்னையில் மீண்டும் ஒரு கருப்பு நாளை உருவாக்க நினைக்க வேண்டாம் .
ஏனென்றால் ....
பாத்திமா ஒழிக, என கோஷமிட்டு கல்ஹின்னைக்கு ஒரு கருப்பு நாளை பதிவு செய்ததில் நீங்களும் ஒருவர் என்பதை மறந்துவிட வேண்டாம்.
அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கின்றது.அது பழைய கதையென்றாலும் கல்ஹின்னைக்கு ஒரு கருப்பு நாளாக பதியப்பட்டுவிட்டது.
அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கின்றது.அது பழைய கதையென்றாலும் கல்ஹின்னைக்கு ஒரு கருப்பு நாளாக பதியப்பட்டுவிட்டது.
பாடசாலையின் வளர்ச்சியில் உங்களுக்கு ஆர்வமிருந்தால் ,உதவிகள் செய்ய வருகின்றவர்களிடம் பாடசாலைக்கு அவசியமானவற்றை தேர்ந்தெடுத்து அவர்களிடம் கோரிக்கை வைக்கலாம் .அதன்மூலம் பாடசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யலாம் .
பாடசாலையின் சுற்றுச்சூழல் சீரழிந்த நிலையில் இருக்கின்றது.நீங்கள் பதவியேற்ற பிறகு மாணவன் ஒருவன் மலசலகூடத்தில் விழுந்து இன்று கல்லீரலை இழந்து பரிதாபமான நிலையில் இருக்கின்றான் .இன்னும் எத்தனை மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகப் போகின்றார்களோ தெரியாது.
வருமுன் காக்கும் சூழ்நிலையை உருவாக்குங்கள்.உதவ வருகின்றவர்களிடம் குறைகளைப் பற்றி சொல்லுங்கள் .உதவுவார்கள்.
கேள்விகள் வந்தால் இன்னும் தொடரும், திருந்தினால் அடங்கும். கல்ஹின்னை மக்கள் முகமூடிகள் அணிந்தவர்கள் அல்ல. காலையிலே காற்சட்டை அணிந்து கடைத்தெருவில் காண்பவர்கள் எல்லாம் படித்தவர்களும் அல்ல, சாரம் அணிந்து கண்னுக்கு தெரிபவர்கள் எல்லாம் முட்டாளும் அல்ல;
அதிபர் எதோ ஒரு வகையில் சுற்றி வலைக்கப்படுகின்றார் என்று மட்டும் நன்றாகப் புரிகின்றது .
இப்படி கல்ஹின்னை மக்கள் உதவுகின்றார்கள் என்று ஊரெல்லாம் விளம்பரப்படுத்தும்போது அரசாங்கத்தால் கிடைக்கக் கூடிய இலவச உதவிகள் நிறுத்தப்படும் அந்த இலவச உதவிகளை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் அதிபரும் ஆர்வம் காட்டப் போவதில்லை. எப்படியிருந்தாலும் கல்ஹின்னை மக்கள் உதவுவார்கள் என்ற எண்ணம் அதிபருக்கு ஏற்படும் .இதனால் பாதிக்கப்படுவது மாணவர்கள்தான்.நீங்கள் சொகுசாக வாழ்ந்துவிட்டுப் போய்விடுவீர்கள்.
உலகில் எத்தனை தொழில்கள் இருந்தாலும் மற்றவர்களுக்கு அறிவு எனும் வெளிச்சத்தை கொடுக்கும் ஆசிரியர் பணிக்கு தனியிடம் உண்டு.
ஆகவே ஆசிரியர்கள் இந்த சமூகத்தின் முன்னுதாரணமானவர்கள். ஒரு சமுதாயத்தின் வருங்காலமான மாணவர்களை உருவாக்கும் பணியை செய்யும் ஆசிரியர்களின் பணி அளப்பரியதாகும்.
ஒரு சமுதாயம் அறிவார்ந்த சமுதாயமாக இருக்கின்றதென்றால் அதற்கு அர்ப்பணிப்பும் நல்லெண்ணமும் கொண்ட ஆசிரியர்கள் தான் காரணமாக இருக்க முடியும்.
ஆகவே ஆசிர்யர்கள் அணைத்து விடயங்களிலும் மாணவர்களுக்கு முன்னுதாரணமாய் செயல்படுவது மிகவும் முக்கியம்.
புகழுக்காக எதையும் செய்யவேண்டாம் .அது புதைந்து விடும் .
M.M. பாரூக் (WC)
கல்ஹின்னை.
Tags:
கல்ஹின்னைபோஸ்ட்