கல்ஹின்னை மஸ்ஜித் நிர்வாகசபை தலைவரின் நேர்காணல்.

கல்ஹின்னை மஸ்ஜித் நிர்வாகசபை தலைவரின் நேர்காணல்.


கடந்த சில வாரங்களாக CHANGING கல்ஹின்னை WHATSAPP குழுமத்திலிருக்கும் ஒருசிலர் ,கல்ஹின்னை ஜும்மா மஸ்ஜித் நிர்வாக சபை தலைவர் அல்ஹாஜ் ரியாஸ் லதீப் அவர்கலைப் பற்றி சில தவறான கருத்துக்கள் பதிவிட்டுள்ளததை பார்க்க முடிந்தது.

அதற்குக் காரணம்  வெள்ளிக்கிழமை(13-01-2023,) தொழுகைக்குப் பின் நிர்வாக சபை தலைவர் அவர்கள் (மிம்பருக்கு முன்னின்று )ஊரார்கள் முன்னிலையில் CHANGING கல்ஹின்னையைப் பற்றிய சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தது முற்றும் தறானது என்று (CHANGING கல்ஹின்னை தரப்பில்) தெரிவிக்கப்படுகின்றது.

நேரடியாக எங்களை தொடர்புகொண்டு தெரிவித்திருக்கலாம் என்ற ஒரு குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றார்கள்.

இந்த விடயங்கள் எந்த அளவுக்கு உண்மை ,பொய் என்பதை அறியும் நோக்கில் நிர்வாக சபை தலைவரை தொடர்புகொண்டு ஒரு நேர்காணலுக்கு ஏற்பாடு செய்தேன்.

அவரும் அதற்கு இணங்கினார்.

அதன்படி அவரிடம் சில சந்தேகங்களை கேட்டேன் .

அவரிடமிருந்து கிடைக்கப் பெற்ற  பதிலை இங்கே பதிவிட்டுள்ளேன் 

GTODAY.;கடந்த சில நாட்களாக CHANGING கல்ஹின்னையில் உங்களுக்கு எதிரான கருத்துக்களை ஒரு சிலர் பதிவிடுகின்றார்கள்.இதன் உண்மையான நிலவரத்தை சற்று விளக்கமாகவும் ,விரிவாகவும் கூறுங்களேன்..?

நிர்வாக சபை தலைவர்;
நான் கடந்த 13-01-2023, வெள்ளிக்கிழமை ஊரார்களின் முன்னிலையில் CHANGING GALHINNA whatsApp குழுமத்தின் UK-ADMIN அவர்களைப் பற்றியும்,அவரது குடும்பத்தைப் பற்றியும்  மிகத்தரக்குரைவாக நான்பேசியதாகவும், மற்றும்  குழுமத்தின் அங்கத்தவர்களாக இருப்பவர்கள்  குழப்பவாதிகள் என நான் அறிவித்ததாகவும் பதிவிடுகின்றனர்.

ஆனால் CHANGING கல்ஹின்னை அதனை  முற்றுமுழுதாக மறுப்பதோடு , அதற்கான ஆவணங்களை கூடிய விரைவில்  (CHANGING GALHINNA whatsApp)  வெளிப்படுத்தி தக்க பதிலை ஊருக்கு  அறியத்தருவதாகவும் பதிவிடுகின்றார்கள்..எப்படியான ஆவணங்கள் என்றுதான் புரியவில்லை.

சகோதரர் அல்-ஹாஜ் பவ்சான் அவர்களினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயம் யாவும் வெறுமெனே கற்பனையில் மாத்திரம் பேசியிருப்பதாகத்தான் நினைக்கின்றேன் 

அதாவது ஊரார்களின் முன்  CHANGING GALHINNA UK-ADMIN அவர்களின் குடும்பத்தார்களைப் பற்றி ஒரு வார்த்தையேனும் பேசவில்லை, ஆனால் (CHANGING GALHINNA UK ADMIN) அவர்கள் ஏதேனும் ஒரு விடயத்தை அறிவிக்கும் போது UK CHANGING GALHINNA ADMIN புளைல் காசீம் கதைகின்றேன் என தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வார், அப்படியிருக்கும் போது நான் எப்படி முகவரி இல்லாத முறையில் ஒரு விடயத்தை முன்னெடுத்துச் செல்வது.?அதனால் அட்மின் அவர்களின் பெயரைக் குறிப்பிட வேண்டிய கட்டாயம் இருந்தது.மறைமுகமாக குறிப்பிடுவதை நான் விரும்பவில்லை .ஆனால் குடும்பத்தை பற்றியோ அல்லது தேவையற்ற கருத்துக்களையோ நான் கூறவில்லை.உண்மை நிலவரத்தைத்தான் ஊர் மக்களுக்கு அறிவித்தேன்.

கடந்த சில நாட்களாக ஊரின் வளர்ச்சிக்கு ஒருவர் ஒரு கருத்தை தெரிவிக்கும்போது.,பலவிதமான பதில் பதிவுகள் பதிவிடப்படுகின்றன. கடைசியில் விவாதங்களாக மாறி. தனிப்பட்டவர்களைப் பற்றிய விமர்சனகள்தான் அதிகரிக்கின்றன.இது ஒரு ஆரோக்கியமான செயல் அல்ல என்பதை கருத்திற்கொண்டுதான் அன்று மிம்பர் முன்னின்று சில விடயங்களை ஊர் மக்களுக்கு தெரிவித்தேன்.  

மிம்பருக்கு முன்னின்று நான் பேசும்போது எதையும் மறைத்து பொய்கூற முடியாது என்பதை சகோதரர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.காலம் காலமாக எமதூரில் நல்லது,கெட்டது எதுவாயிருந்தாலும் ஊர் மக்களின் நலன் கருதி மிம்பருக்கு முன்னிருந்துதான் பள்ளித் தலைவர்கள் ஊர் மக்களுக்கு அறிவிப்பார்கள் என்பதையும் சகோதரர்கள் புரிந்துகொள்ளவேண்டும் .அந்த அடிச்சுவட்டை பின்பற்றியே அன்றையதினம் அந்த அறிவிப்பை ஊர் மக்களுக்கு அறிவித்தேன்.

GTODAY:
நீங்கள்  இதுவரை காலமும் CHANGING GALHINNA whatsApp குழுமத்தில் இருக்கும் எவருடனும் ஒரு முறையாவது தொடர்புகொண்டு  கதைக்காமல் தீடீரென பள்ளி மிம்பர் முன் நின்றுகொண்டு இவ்விடயத்தைப் பற்றி பேசியது அநாகரீகம் எனவும் சகோதரர் பவ்சான் அவர்கள் தெரிவித்துள்ளார்களே..அதைப்பற்றி என்ன நினக்கின்றீர்கள்?.

நிர்வாக சபை தலைவர்;
அவரின் ஒலிநாடாவில், ரியாஸ் தம்பியை பொறுத்தவரையில் படித்த மனிதன் ஊர் தலைவர் என ஒப்புக்கொள்கிறார், பேசியவிதமும் இடமும்தான்  பிழை என்கிறார். சகோதரர் அல்-ஹாஜ் பவ்சான் அவர்கள் ஒன்றைமற்றும் புரிந்த கொள்ள வேண்டும், பொதுவாகவே எமதூரில் மற்றுமல்ல ஊர் ஜமாத்தார்களுக்கு என அறியப்படுத்தப்பட வேண்டிய விடயங்கள் இருக்குமானால் ஊர் தலைவர் என்றவகையில் பள்ளிவாசல் நிர்வாகத் தலைவர் அவர்கள் ஊரார்கள் ஒன்றுசேரும் குறிப்பாக வெள்ளிக்கிழமை ஜும்மாநாளில் அதுவும் மிம்பர் முன் நின்றுகொண்டுதான் அறியப்படுத்துவது முறையென சமூகம் ஒப்புக்கொண்ட ஓர் விடயமாகும்.

எனவே கல்ஹின்னையிலும் காலம் காலமாக  நல்லது,கெட்டது எதுவாயிருந்தாலும் ஊர் மக்களின் நலன் கருதி மிம்பருக்கு முன்னிருந்துதான் பள்ளித் தலைவர்கள் ஊர் மக்களுக்கு அறிவிப்பார்கள் என்பதையும் சகோதரர்கள் புரிந்துகொள்ளவேண்டும் .அந்த அடிச்சுவட்டை பின்பற்றியே அன்றையதினம் அந்த அறிவிப்பை ஊர் மக்களுக்கு அறிவித்தேன்.

அதுமட்டுமன்றி நான் அவர்களுடன் இந்த விடயங்களைப் பற்றி கதைக்கவில்லை என்று குற்றம் சுமத்துகின்றார்கள்.ஆனால் அது பொய்யான ஒரு குற்றச்சாட்டு .கடந்த சில நாட்களுக்கு முன் CHANGING GALHINNA UK-ADMIN அவர்களுடன் சுமார் ஒரு மணித்தியாளங்களுக்கும் மேல் தொலைபேசி ஊடாக இவ்விடயம் சம்பந்தமாக பேசியுள்ளேன் 

அத்தோடுகூட அவரிடம் CHANGING GALHINNA குழுமத்தார்கள் ஊருக்கு செய்கின்ற சேவைகள் மேன்மேலும் வளரவேண்டும் என வாழ்த்துக்களும் கூரியுள்ளேன், 

புதல்கஹா பள்ளிவாசலில் வைத்து ஆசிரியர் ரியால்டீன் அவர்களுடன் சுமார் 2, மணித்தியாலங்கள் கல்ஹின்னை ஜும்மாப் பள்ளிவாசல் பரிபாலனசபையின் அங்கத்தவராக இருக்கும் அல்-ஹாஜ் பரிசிடீன் அவர்களும், நானும் பேசியும் தக்கபதில் கிடைக்காததினால்தான் ஊரார்களின் முன்னிலையில் கொண்டு செல்லப்பட்டன, இதுவொரு தனிப்பட்ட மனிதனின் பிரச்சினையல்ல  என்பதனால் இப்படியொரு முடிவை எடுக்கவேண்டிய பொறுப்பு எனக்கிருந்தது.

அப்படியிருக்கும்போது என்னால் அந்த கலாச்சாரத்தை மாற்ற முடியாது.

மேலும் 11எட்மின்களும்,  35- 40  பேர்கொண்ட ஆலோசகர்கள், மற்றும் 500 அங்கத்தவர்களும், அதில் கல்ஹின்னையில் மாத்திரம் 35, 40 பேர்கள் இருக்கும் CHANGING GALHINNA குழுமத்தில் இருப்பதை நான் அறியவில்லையோ? ஏன் எவருடனும் கலந்து ஆலோசிக்கவில்லை?  எனவும் சகோதரர் அல்-ஹாஜ் பவ்சான் அவர்கள்  கேட்கின்றார்.நான் பேசியதை சகோதரர் பவ்சான் அவர்களுக்கு அறிவித்திருக்கமாட்டார்கள் .அதனால்தான் அப்படிக் கூறுகின்றார் என நினைக்கின்றேன் 

GTODAY:
கடைசியாக ஒரு கேள்வி ;இந்தப்பிரச்சினைக்கு என்னதான் தீர்வு?

நிர்வாக சபை தலைவர்;
இது ஒரு பிரச்சினையே இல்லை .என்னுடைய கடமையை செய்தேன்.பேச வேண்டியவர்களுடன் பேசினேன்.ஆனால் CHANGING கல்ஹின்னையிலிருப்பவர்கள்தான் இதற்கொரு முடிவை தீர்மானிக்கவேண்டும்.நான் கூறிய கருத்துக்களுக்கு எந்தவித பதிலையும் கூறாமல்,என்னை நேரடியாக தொடர்புகொள்ளாமல் WHATSAPPல் தேவையற்ற கருத்துக்களை தெரிவிக்கின்றார்கள்.நான் நேரடியாக இரண்டுமுறை தொடர்கொண்டேன் ,ஆனால் அவர்கள் WHATSAPPல் மட்டும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

என்னுடைய கடமையை முறைப்படி செய்துள்ளேன்.ஆனால் அவர்களிடமிருந்து எந்தவிதவிதமான முறையான பதிலும் இல்லை .இனி இந்தப் பிரச்சினைய ஊர் மக்கள் தீர்மானிக்கட்டும். ஊர் மக்களின் தீர்மானமும் ,நிர்வாகசபை அங்கத்தவர்களின் தீர்மானமும்தான் எனக்கு முக்கியம்.அதை என்னால் மீற முடியாது என்பதையும் தெரிவிக்கின்றேன்.

WHATSAPPல் பேசுகின்றவர்கள் நேரடியாக வரவும்.பிரச்சினைகளை தீர்க்க ஆரோக்கியமான சூழல் உருவாகும் .

ஒற்றுமையில்லாமல் ,WHATSAPPல் விவாதங்கள் செய்து ஊரின் நலனை கெடுப்பது ஒரு ஆரோக்கியமான செயலில்லை என்பதை கல்ஹின்னையில் இருக்கின்ற அணைத்து குழுமங்களுக்கும் தெரிவிக்கின்றேன்.

முக்கியமான ஒரு விடயத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
இன்று நாட்டில் நம் சமூகம் மிகவும் மோசமானதொரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.

நாம் செய்கின்ற .சமூக சேவைகள் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன.அரசாங்கத்தில் அதிகாரப்பூர்வமாக பதியப் படாமல் வெளிநாடுகளிலிருந்து வரும் அணைத்து நன்கொடைகளும் கவனிக்கப்பட்டு அதற்கான ஆதாரங்கள் சமர்பிக்கப்படாவிட்டால் நாங்கள்தான் பொறுப்புக்கூறவேண்டும் .

அதனால் ஊரில் இருக்கின்ற CHANGING கல்ஹின்னை அங்கத்தவர்கள் குறிப்பிடப் படுகின்ற விடயங்களில் ஆர்வம் காட்டவேண்டும். நான் இரண்டு மணித்தியாலங்கள் கலந்துரையாடியும் எந்தவித பொறுப்புமில்லாமல் நடந்துகொண்டதைப்போன்று நடந்துகொள்ளவேண்டாம் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

கல்ஹின்னை பெரிய ஜும்மாப் பள்ளிவாசல் நிர்வாகமோ,கல்ஹின்னை ஒன்றியமோ CHANGING GALHINNA ஊருக்கு செய்கின்ற ஒரு சேவையிலாவது  இணைந்து கொள்வதில்லை, என்றும் CHANGINGகல்ஹின்னையின் செயல்பாடுகளில்  நாம்  பொறமை கொண்டவர்கள் எனவும் சகோதரர் அல்-ஹாஜ் பவ்சான் அவர்கள் பேசியுள்ளார் இதோ அதற்கான ஆதாரம்... 
CHANGING GALHINNA ADMIN ரியால்டீன் ஆசிரியர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் ஓன்று சேந்து ஊர் நலன்கருதி  ஆலோசிக்கப்பட்ட VEDIO, வைப் பார்த்தால் புரியும் 

உலகில் பல நாடுகளில் கிளைகளைக்கொண்ட CHANGING கல்ஹின்னை தொடர்ந்தும் பல சேவைகலை செய்ய என்னுடைய துவா என்றும் உண்டு."என்று தனது நேர்காணலை முடித்தார்.

M.M.பாரூக் (WC)
கல்ஹின்னை.


 


1 Comments

  1. இந்தப் போட்டி என்பதன் போட்டி வடிவம் எழுத்தாளரின் கற்பனை வடிவம் என்பது தெளிவாக விளங்குகின்றது இதில் ஆசிரியர் றியால்தீன் அவர்களுடன் கதைத்ததாக பதிவிட்டுள்ள விடயம் கிட்டத்தட்ட இரு வருடங்களுக்கு முன்னர் பேசியவிடயமாகும் என்பதன் நான் உறுதிபடக் கூறுவேன். அதிலும் சகோதரர் பரிசிதீன் நானா அவர்கள் பேசவேயில்லை. தலைவருடன் மூன்றாவதாக சென்ற நபரினை இருட்டடிப்புச் செய்துள்ளார். தலைவர் றியாஸ் அவர்களுடன் சகோதரர் அக்ரம் அவர்களும் சென்று கதைத்துள்ளார். தலைவர் என்பவர் எந்த சந்தர்ப்பத்திலும் தன்மையாக மென்மையாகவே எல்லோருடனும் பேச வேண்டும். ஆனால் ரியால்தீன் ஆசிரியருடன் மிகவும் கடுமையான நெறியில் தான் இருவரும் கதைத்துள்ளனர். அன்று பள்ளியில் உரையாற்றும்போது கூட கடுமையாகவே உரையாற்றியுள்ளார். மேலும் ஒருவரினைப்பற்றி இருப்பதனை கதைப்பது முன்பாகவும் இல்லாததை கதைப்பது அவதூராகும். அந்த குழுமத்தில் நடக்கும் விடயத்தை அதே குழுமத்தில் பதிவிட்டு அதற்கான தீர்வினை பதிவினை பெற முடியும். இப்படி மூன்றாவது தளத்தில் பதிவிட்டு ஊரை உலகறிய நாரடிக்க வேண்டாம் என்பது எனது அன்புக்கட்டளை. ஒரு தரமான மின்சஞ்சிகை இப்படியான விடயங்கள் பக்க சார்பு டன் பதிவிடுவது மிகவும் மனவருத்தமானது கவலைக்கிடமானது.

    ReplyDelete
Previous Post Next Post