பள்ளிவாயில்களின் வரலாறு கூறும் பைத்துல்மால் நிறுவனத்தின் அரிய நூல்!

பள்ளிவாயில்களின் வரலாறு கூறும் பைத்துல்மால் நிறுவனத்தின் அரிய நூல்!


1957ல் தொடங்கப்பட்ட சிலோன் பைத்துல்மால் நிறுவனம்,  1976ம் ஆண்டைய ஒன்பதாம் இலக்க சட்டத்தினால் ஒருங்கிணைக்கப்பட்டு, 
இலங்கைப் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிதியமாகும். 

இது “ஸக்காத்” வரியை வசூலித்து, சமூகத்தில் வறிய நிலையில் உள்ளோருக்குப் பகிர்ந்தளித்து வருவதோடு, உதவி தேவைப்படும். இலங்கையின் சகல பகுதி  முஸ்லிம் மக்களையும்  இனங்கண்டு அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு செயற்திட்டங்களையும் இந்நிதியம்  முன்னெடுத்து வருகின்றது.

பிரபல ஊடகவியலாளரான ஆஷிப் ஹுஷைன்  தொகுத்துள்ள இந்நூலின் அட்டைப்படத்தையும், உட்பக்க வடிவமைப்புக்களையும் சைனப் ஹபீஸா  செய்னுதீன் அழகுற அமைத்துள்ளார்.

அல்ஹாஜ் இல்யாஸ் அத்மானி PC அவர்களின் தலைமையில் இயங்கும் சிலோன் பைதுல்மால்  நிதியத்தில்  19 பேர்  கொண்ட  நிர்வாகக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

இந்நிதியம் கடந்த 03.07. 2007ல்  தனது 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியபோது, நினைவு முத்திரை  ஒன்றை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது,  இலங்கை மக்களின் இருப்பு சவாலுக்குட்படுத்தப் பட்டுள்ள இக்காலகட்டத்தில், இலங்கை முழுவதிலுமுள்ள 31 புராதனப் 
பள்ளிவாசல்களின் வரலாற்றுத் தொன்மையை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுடன் தொகுத்தெடுத்து, நூலாக வெளியிட்டுள்ளது!

பள்ளிவாயில்களுக்கு இனாமாக ஒரு பிரதியும், மேலாதிகமாக அவர்கள் கேட்கின்ற தொகைப் பிரதிகளும் அனுப்பி வைக்கப்பட்டபோது, பெருந்தொகைப் பிரதிகள் விற்பனையாயின. 

இந்நூலில்- பேருவலையிலுள்ள அல் அப்ரார் பள்ளிவாயில்,  கெச்சிமலை பள்ளிவாயில், ஜாமிஆ நாளீமிய்யாப் பள்ளிவாயில் அக்குரணையின் பெரிய பள்ளிவாயில், அஸ்னா பள்ளிவாயில், கொழும்பிலுள்ள பெரிய பள்ளிவாயில், தெவட்டகஹ பள்ளிவாயில், 
கொள்ளுப்பிட்டி பள்ளிவாயில், சிவப்பு பள்ளிவாயில், ஜாவத்த, வேகந்த, அக்பார், மலாய் பள்ளிவாயில்கள்,மேமன் ஹனபி பள்ளிவாயில், தாவூதி போராப் பள்ளிவாயில், யாழ்ப்பாணத்தின் பெரிய பள்ளிவாயிலும்,

நைனாதீவு முஹியத்தீன் பள்ளிவாயிலும், கண்டி நகர மீராமகாம் பள்ளிவாயில்,  ஜாமிஉல் ஆலம் ஹனபி பள்ளிவாயில்,  அழுத்கம சீனவத்த பள்ளிவாயில்,  காலிக்கோட்டை மீரான் பள்ளிவாயில்,  கொடபிட்டிய போர்வை முஹியத்தீன் ஜும்ஆப் பள்ளிவாயில்,  மாத்தறை,  திக்வெல்ல ஆகிய இடங்களிலுள்ள முஹியத்தீன் ஜும்ஆப் பள்ளிவாயில்கள், மொனராகலையிலுள்ள பக்கினிகஹவெல பழைய பள்ளிவாயில்,  கல்முனை கடற்கரைப் பள்ளிவாயில்,  எறாவூர் ஆற்றங்கரை முஹியத்தீன் ஜும்ஆப் பள்ளிவாயில்,  திருகோணமலை அல்ஹுலூர் ஜும்ஆப் பள்ளிவாயில், புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆப் 

பள்ளிவாயில், கல்ஹின்னை பெரிய பள்ளிவாயில்,  பேராதனை பல்கலைக்கழக பள்ளிவாயிலுமாக  மொத்தம் 31 பள்ளிவாயில்கள் பற்றிய வரலாற்றுத் தடயங்கள், படங்களுடன் ஆய்வுக்குட் படுத்தி விவரணப்பட்டுள்ளன. 

இதேவேளை,  கல்ஹின்னைப் பள்ளிவாயிலின் வேண்டுகோலுக்கிணங்க 12 பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், ஒரு பிரதி கூட பணம் கொடுத்து வாங்காமல் திருப்பியனுப்பப்பட்டுள்ளமை வருந்துதற்குரிய விடயமாகும்!

GTODAY விசேட நிருபர்


 


Post a Comment

Previous Post Next Post