கல்ஹின்னைத் தலைமைத்துவமும், ஊர் குழப்பிகளும்!

கல்ஹின்னைத் தலைமைத்துவமும், ஊர் குழப்பிகளும்!


கொவிட் 19 காலத்தில் நாட்டின் பல பாகங்களிலுமுள்ள ஊர்களிலும், நகரங்களிலும் WhatsApp குழுமங்கள் தோன்றி, அவசரகாலச் செய்திகளை பகிர்ந்து கொண்டதுடன், உள்நாட்டுத் தனவதர்களிடமிருந்தும், புலம்பெயர்ந்து வாழ்வோரிடமிருந்தும் நிதி திரட்டி மக்களுக்கு உதவி செய்து வந்தன. 

இப்போது மக்கள் இடர்நிலையிலிருந்து இயல்பு வாழ்க்கைக்கு வந்து விட்டனர். 

பல ஊர்களிலும், நகரங்களிலும் இவ்வாறான குழுமங்கள் செயலிழந்துபோன நிலையில், கல்ஹின்னை போன்ற ஊர்களில் இவை வேறு திசையில் திரும்பி, ஊராள நினைக்கின்றமை நகைப்புக்கிடமான விடயமாகும்! 

உதவி செய்வதென்பது வேறு; ஊராள்வதென்பது வேறு. நிர்க்கதியாக இருந்த மக்களுக்கு உதவி செய்தோம் என்பதற்காக, ஊரை ஆளநினைப்பது அல்லது ஆள்பவர்களைக் கட்டுப்படுத்த முனைவது என்பதெல்லாம் ஹாஸ்யத்துக்குரிய விடயமாகும்! 

WhatsApp குழுமம் என்பது எந்த விதமான உத்தியோகபூர்வத் தன்மையும் இல்லாத ஒன்றாகும். இதற்குத் தலைவரும் இல்லை; செயலாளரும் இல்லை; பொருளாளரும் இல்லை. இவை சட்டவிதி முறைகளுக்கமைய பதிவுசெய்யப்பட்டதும் இல்லை! 

குழுமத்தில் 500 பேர் அங்கம் வகிக்கின்றார்கள் என்பதற்காக, அந்தக் குழுமம் சொல்வதைத்தான் ஊர்மக்களும், ஊர்த்தலைவர்களும் கேட்டு நடக்க வேண்டும் என்று கூவிக்கொண்டிருப்பது அதைவிடவும் நகைப்புக்கிடமான விடயமக்கும். 

சட்ட விதிகளுக்கமைய தெரிவு செய்யப்பட்ட ஊர்த்தலைமைத்துவத்திற்கு, சவால் விடுவதென்பது ஊர் குழப்பும் ஒரு செயல் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்! 

WhatsApp குழுமம் என்பதெல்லாம் ஒருவகை 'நொறுக்குத் தீனி' என்பதை மக்கள் எப்போதோ புரிந்துகொண்டார்கள்!


 


Post a Comment

Previous Post Next Post