கல்ஹின்னை உள்ள தெரு விளக்குகள் மாற்றப்பட்டு L E D மின்விலக்குகள் பொருத்தப்பட்டன.

கல்ஹின்னை உள்ள தெரு விளக்குகள் மாற்றப்பட்டு L E D மின்விலக்குகள் பொருத்தப்பட்டன.

 மர்ஹும் அடப்பலாகெதர யூசுப் லெப்பை மொஹம்மத் காசீம், (1940-1960) அவர்களின் மகனானஆஸ்திரேலியாவில் வசிக்கும் அல்-ஹாஜ் முஹம்மத் மஸூத்  அவர்கள்.பூஜாப்பிட்டிய பிரேதேச சபை உறுப்பினர் (கல்ஹின்னையின் பிரதிநிதியான) ஜனாப் உவைஸ் ரசான் அவர்களின் வேண்டுகோளுக்கு இனங்க பூஜாப்பிட்டிய பிரேதேச சபைத் தலைவர் கௌரவ அனுர பெர்னான்டோ அவர்களிடம் ஒரு தொகுதிக்கான மின்விளக்குகள் கையளிக்கப்பட்டது, 


அதில் ஒருபகுதி கடந்த 04-01-2023 புதன்கிழமை ஜனாப் உவைஸ் ரசான் அவர்களினால் கல்ஹின்னை சந்தி  தொடக்கம், கல்ஹின்னை பெரிய ஜும்மாப் பள்ளிவாசல் வரையிலும்  உள்ள தெரு விளக்குகள் மாற்றப்பட்டு L E D மின்விலக்குகள் பொருத்தப்பட்டன.


நீண்டகாலமாக பிரதான சாலையிலுள்ள தெரு விளக்குகள் பழுதடைந்த நிலையில் இருந்து வந்ததை அறிந்த உவைஸ் ரசான் அவர்கள் அவுஸ்திரேலியாவில் இருக்கும் அல்-ஹாஜ் முஹம்மத் மஸூத் அவர்களிடம் வேண்டியாதையிட்டு  தன் தந்தை மர்ஹும் அடப்பலகேதர யூசுப் லெப்பை மொஹம்மத் காசீம், பெயரில் பெற்றுக் கொடுக்கப்பட்டன.

மேலும்  ஊரின் ஏனைய பகுதிகளுக்குத் தேவைப்படும் என ஜனாப் உவைஸ் ரசான் அவர்கள் அறியத்தரும் பட்சத்தில்  மின்விளக்குகலைத்  தன் தந்தையின் பெயரில் பெற்றுத்தருவதாக அல்-ஹாஜ் முஹம்மத் மஸூத் அவர்கள் உறுதியளித்துள்ளதாக ஜனாப் உவை ராசான் அவர்கள் தெரிவித்தார்.

இன்ஷா-அல்லாஹ்  எஞ்சியுள்ள பகுதிகளுக்கும் விரைவில்  L.E.D மின் விளக்குகள் பொருத்தப்படவுள்ளதாக ரசான் அவர்கள் (கல்ஹின்னை டுடே) தெரிவித்தார்.

வேட்டை நிருபர் 
கல்ஹின்னை.


 


Post a Comment

Previous Post Next Post