2023,ம் ஆண்டுக்கான விளையாட்டுப்போட்டி(SPORTS MEET) நடாத்தபடுவதற்கான பயிற்ச்சிகள் தற்பொழுது கல்ஹின்னை அல்-மனார் தேசியப்பாடசாலை உப-அதிபர் இம்தியாஸ் அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
கடந்தவாரம் உப-அதிபர் இம்தியாஸ் அவர்களின் ஒரு நேர்காணல் வீடியோவை பார்த்தேன்.
நெதர்லாந்திலிருந்து வந்த ரியாஸ் ஹலீம்தீன் அவர்களுடனான அந்த நேர்காணல் வீடியோவில் "பேண்ட், வாத்திய குழுவினர்களுக்கு உரிய சீருடை 5, மாணவர்களுக்கு மாத்திரம் கையிருப்பில் இருப்பதாகவும் அதுவும்கூட 15, ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட சீருடை" எனவும் மிகக் கவலையுடன் அந்த வீடியோவில் கூறியிருந்தார்.
அத்தோடு 2023,ம் ஆண்டுக்கான (SPORTS MEET) விளையாட்டுப்போட்டியை சிறப்பாக நடாத்த கல்ஹின்னை மக்கள் உதவ வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
முக்கியமாக ரியாஸ் ஹலீம்தீன் அவர்களைப் போன்று கல்ஹின்னை தனவந்தர்களின் ஆதரவு தேவை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அவருடைய பேச்சை கேட்கும்போது ஒரு சந்தேகம் எழுகின்றது.
ரியாஸ் அவர்களைத் தவிர கல்ஹின்னை மக்கள் பாடசாலைக்கு உதவுவதில்லை என்பதைப் போன்றிருந்தது அவருடைய பேச்சு.
கல்ஹின்னை அல்மனார் தேசிய பாடசாலை அரசாங்கத்தோடு எந்தவித தொடர்பும் இல்லையா?
பாடசாலைகளுக்கு கிடைக்கின்ற சலுகைகளை பெற்றுக்கொள்ள ஏன் தயங்குகின்றார்கள்.?.
பாடசாலைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஊர் மக்கள்தான் செய்யவேண்டும் என்று நினைக்கின்றார்களா?
கல்ஹின்னை பாடசாலைக்கு வருகின்ற ஆசிரியர்கள் எதற்கெடுத்தாலும் கல்ஹின்னை தனவந்தர்களின் உதவியைதான் எதிர்பார்கின்றார்கள்.இதன் உள்நோக்கம்தான் என்ன?
பேண்ட் வாத்தியக் குழு சீருடைகள் வருடத்திற்கு ஒருமுறை அல்லது ஏதாவது விஷேட நாட்களில் மட்டுமே பாவிக்கப்படுகின்றன.
அப்படியிருக்கும் போது அந்த சீருடைகளை பாதுகாத்து வைக்க முடியாதா?
பேண்ட் வாத்தியக் குழு சீருடைகளை மாணவர்கள் நிகழ்ச்சிநிரல் முடிந்த உடனே பாடசாலைக்கு திருப்பி தராமல் அவர்களின் வீடுகளுக்கு எடுத்துச் சென்றார்களா?
அப்படியும் இல்லாவிட்டால் ஊரில் நடைபெறும் திருமண வீடுகளுக்கு வாடகைக்கு கொடுத்தார்களா?
இல்லாவிட்டால் சீருடை என்ன வெறும் நியூஸ் பேப்பரில் தைக்கப்பட்ட ஒன்றா?
கல்ஹின்னை மக்கள் அன்றும் இன்றும் தேவையான அனைத்து உதவிகளையும் பாடசாலைக்கு செய்துகொண்டிருக்கின்றார்கள்.
முஸ்லிம் ஹாஜியார் ,ஒன்றியத்தின் தலைவர் அல்ஹாஜ் ஜிப்ரி ஹாஜியார் ,சட்டத்தரணி அல்ஹாஜ் பாரூக் .மற்றும் பாடசாலையின் பழைய மாணவர்கள் என்று பலரும் பலவிதமான உதவிகளை செய்தார்கள் ,செய்துகொண்டிருக்கின்றார்கள்.
இப்படி உதவிகள் கிடைக்கின்றபோது பாடசாலைக்கு அத்யாவசியமான தேவைகளை அவர்களிடம் கூறியிருந்தால் உதவாமல் இருப்பார்களா?
இப்படி பகிரங்கமாக வீடியோவில் பேசி பாடசாலைக்கும் ,ஊருக்கும் அவமானத்தைப் பெற்றுக்கொடுப்பதில் இவருக்கும் ரியாஸ் ஹலீம்தீனுக்கும் என்னதான் சந்தோஷம்?
உதவுங்கள்...ஆனால் அதை வீடியோ எடுத்து ஊரெல்லாம் பகிரங்கப்படுத்தி அவமானப்படுத்த வேண்டாம் .
புனிதமான ஆசிரியர் தொழிலுக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம்.
M.M.பாரூக் (WC)
கல்ஹின்னை.
Tags:
கல்ஹின்னைபோஸ்ட்