WhatsApps குழுமங்களை அமைத்துக்கொண்டு, "வாங்கோ... வாங்கோ..." என்று கூவிக்கொண்டு, வேட்பாளர்களுக்கு WhatsApps குழுமத்திற்குள் வந்து, தமது இலக்குகளைக் கூறச் சொல்லி அழைப்புகள் விடப்படுவது, சந்தையில் காய்கறி விற்பது... போன்று காணப்படுகின்றது!
அந்தக் கூவலுக்கு எந்த வேட்பாளரும் காது கொடுக்காமல், நழுவிச்செல்வதும்,WhatsApps வீரர்கள் சிலர் மாறி மாறி நகைப்பிற்கிடமான முறையில் பதிவுகளை இடுவதையும் பார்க்கின்றபோது, எவரோ ஒரு புத்திசாலி தனது பதிவொன்றில் குறிப்பிட்டதுபோல், 'பாடசாலையின் தரத்தை அறிவதற்கு, கிராமத்து இளைஞர்களின் போக்கைப் பார்த்துப் புரிந்து கொள்ள முடியும்' என்பதிலும் உண்மை இல்லாமலில்லை என்று தெரிகின்றது.
மக்கள் முன்னிலையில் வாக்குக் கேட்க வரும் ஒவ்வொருவரும், வேட்பு மணுவுக்கு முன்னரே, தனது வெற்றிக்குப் பின்னரான இலக்கைத் திட்டமிட்டு வைத்திருக்க வேண்டும்.
குழுமம் கூவிக்கூவி அழைக்கின்றபோதிலும் வேட்பாளர்கள் எவருமே முன்வந்து தமது இலக்குகளைக் குறிப்பிடத் தயங்குகிறார்கள் என்றால், அதன் பொருள் வாக்காளர்களை ஏமாற்றி வாக்குகள் பெறுவது மட்டுமே அவர்களின் இலக்கு என்பதை பொதுசனம் புரிந்து கொள்ள வேண்டும்.
காலாகாலமாக பொது சனத்துக்குப் புரிந்து கொள்ளும் தன்மை இல்லாமற்போனமையே நாட்டின் இன்றைய வீழ்ச்சி நிலைமைக்குக் காரணமாகும்!
கல்ஹின்னைக் கிராமத்துப் பொதுசனம், இம்முறை தேர்தல் நடக்கும் பட்சத்தில் சிந்தித்துச் செயல்படும் என்று "கல்ஹின்னை டுடே" நம்புகின்றது!
Tags:
கல்ஹின்னைபோஸ்ட்