கடந்த சில நாட்களுக்கு முன் கல்ஹின்னையில் முன்னாள் அதிபரும், காதிநீதவானுமாகியஅல்-ஹாஜ் ஆரித் மாஸ்டர் அவர்களின் மகனான சகோதரர் பர்சான் அவர்களின் VOICE CLIP பதிவொன்றினை CHANGING கல்ஹின்னை குழுமத்தில் காணக் கிடைத்தது.
அதாவது கல்ஹின்னை பள்ளி நிர்வாகசபை தலைவர் அவர்கள் CHANGING கல்ஹின்னை குழுமத்தின் அட்மின் அவர்களைப் பற்றி தவறான முறையில் பேசியதாகவும்,அதற்கு மறுப்புத் தெரிவித்தும் பதிவிட்டிருந்தார்.
இந்த விடயங்களின் உண்மைத் தன்மைய அறிந்துகொள்ளும் நோக்கில் பள்ளி நிர்வாக சபை தலைவரை நேரில் சந்தித்து விபரங்களை திரட்டி கல்ஹின்னை டுடேயில் எழுதியிருந்தேன்.
WHATSAPP மூலம் வீரம் பேசுவதில் எந்தப் பயனுமில்லை .எதோ ஒரு வகையில் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நன்நோக்கத்தில்தான் உண்மைத் தன்மைகளை திரட்டி எழுதியிருந்தேன்.பள்ளி நிர்வாக சபை தலைவரும் அமைதியாக அணைத்து விடயங்களையும் கூறினார்.
அதைதான் கல்ஹின்னை டுடேயில் பதிவிட்டேன்.
ஆனால் ஒரு சில CHANGING கல்ஹின்னை அறிவு ஜீவிகள் அதை கற்பனையில் எழுதப் பட்டதாக குறிப்பிட்டிருந்தனர்.
அதில் முக்கியமாக ZAKCY தாஜுதீன் என்ற சகோதரர் "இது கற்பனையில் எழுதப் பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இவர்களின் தேவையற்ற வாதங்களை நினைத்து சிரிப்புத்தான் வருகின்றது.
சகோதரரே கற்பனை என்பது உங்கள் சிந்தனையிலிருந்து வருவது.சிந்திக்கத் தெரியாவிட்டால் கற்பனை வராது கத்திக்கொண்டு இருப்பதாகத்தான் வரும்.நேர்காணல் செய்யும்போதும் அந்த கற்பனை வரவேண்டும்.அப்படியில்லை என்றால் உங்களால் எழுத முடியாது.
நான் தினமும் ஊரில்தான் இருக்கின்றேன் .ஊர் மக்களை தினமும் சந்திக்கின்றேன்.பள்ளித் தலைவரையும் சந்திக்கின்றேன்.CHANGING கல்ஹின்னை அங்கத்தவர்களையும் சந்திக்கின்றேன்.
நான் பொய்யாக ,என்னுடைய இஷ்டத்திற்கு எழுதியிருந்தால் ,நேரடியாக கேட்கவும் முடியும் ,போலிஸில் எனக்கு எதிராக வழக்கும் பதிவும் செய்யலாம் .
அதில்லாமல் WHATSAPPல் அடுத்தவன் சொன்னான் என்பதற்காக வீரம் பேசுவதில் அர்த்தமில்லை'
CHANGING கல்ஹின்னை செய்வது மட்டும்தான் உண்மை மற்றவை பொய் என்பதைப்போல் இருக்கின்றது இவர்களின் கூத்து.
இஷாக் G.S அவர்கள் கல்வியைப் பற்றி பேசுவதற்கு முன் தன்னுடைய தவறுகளை திருத்திக்கொள்வது நன்றாயிருக்கும் என நினைக்கின்றேன்.
மாஷா அழ்ழாஹ் என்று குறிப்பிடுகின்றார் .இது தவறு. மாஷா அல்லாஹ் என்று திருத்திக்கொள்ளுங்கள்.
இஷாக் G.S இஷ்டத்திற்கு ஏதேதோ கதைக்கின்றார்.பள்ளி நிர்வாக சபை தலைவர் WHATSAPPல் பேசலாமே என்ற வகையில் பதிவுகள் வருகின்றன.
இஷாக் G.S அவர்கள் 2021ஆம் ஆண்டு பேசிய இந்த வீடியோவை பாருங்கள்.
8 வருடங்களாக தலைவர்களிடம் ஊர்ப்பிரச்சினைகள் பற்றி முறையிட்டாராம் ஆனால் எந்தவித பிரயோசனமும் இல்லையாம் .இந்த செய்தியை எந்த இடத்திலிருந்து சொல்லிகின்றார் என்று பாருங்கள்?
நடு வீதியிலிருந்து கொண்டு ஊர் மக்களுக்கு தெரிவிக்கின்றார்.ஆனால் இன்று பள்ளி நிர்வாகசபை தலைவர் பள்ளி பிம்பருக்கு முன்னின்று முறைப்படி சொன்னது இவர்களுக்கு தவறாகப் படுகின்றது?
CHANGING கல்ஹின்னையில் பலர் வெளி நாடுகளில் இருக்கின்றார்கள்.அவர்களால்தான் ஊருக்கு வர முடியாதென்றால் ,ஊரில் இருப்பவர்களாவது பள்ளித் தலைவரை சந்தித்து பிரச்சினைக்கு தீர்வைப் பெறலாமே?
CHANGING கல்ஹின்னையைச் சேர்ந்தவர்களில் அனேகம்பேர் பூதல்கஹவில்தான் வசிக்கின்றார்கள்.கல்ஹின்னைக்கு வருவது இவர்களுக்கு சிரமமான காரியமில்லையே .....?
WHATSAPP-ல் பேசுகின்றவர்கள் ஏன் நேரடியாக பேச தயங்குகின்றார்கள்?
ஊரை குழப்ப வேண்டும் என்பதற்காக WHATSAPP-ய் பயன் படுத்துகின்றார்களா அல்லது பொது சேவைகள் செய்யப் பயன் படுத்துகின்றார்களா என்பது புரியாத புதிராக இருக்கின்றது.
பூதல்கஹவில் இருக்கின்ற அங்கத்தவர்கள் நினைத்தால் இந்தப் பிரச்சினையை மிகவும் இலகுவாக முடித்து விடலாம் .
இவர்கள் தயங்குவது ஏன்? இவர்களை எதுக்கு அட்மின் என்று மகுடம் சூட்டி அழகு பார்க்கின்றீர்கள்?
பூதல்கஹவில் இருக்கின்ற அட்மின்கலில் ஒரு சிலர் மக்களோடு ஒத்துப்போக மறுப்பவர்கள் என்று அனைவரும் அறிந்த ஒரு விடயம்.அப்படிப்பட்டவர்கள் பிரச்சினைகளை தீர்க்க முன் வரமாட்டார்கள்.வெளிநாடுகளில் இருக்கின்ற அட்மின்களுக்கு தவறான தகவல்களை கொடுப்பது,ஊரில் குழப்பங்களை விளைவிப்பது போன்ற நல்ல காரியங்களை செய்வதுதான் இவர்களின் வேலை.
இல்லையென்றால் பள்ளி நிர்வாக தலைவர் பேசியதை ஏன் திரித்துக் கூறவேண்டும் ?.புலைல் காசீம் அவர்களின் குடும்பத்தைப் பற்றி பேசியதாக ஒரு கதையைக் கட்டி விடுகின்றனர்.ஏன்?
அப்படியே பேசியிருந்தாலும் ஏன் இவர்கள் அதை தடுக்காமல் வாயை பிளந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்?
கல்ஹின்னையில் முடிசூடிக்கொண்டிருக்கும் CHANGING கல்ஹின்னை அங்கத்தவர்கள் குழப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள்போன்று நடந்துகொள்கின்றனர்.
அதுதான் உண்மை
M.M.பாரூக் (WC)
கல்ஹின்னை.
Tags:
கல்ஹின்னைபோஸ்ட்