CHANGING GALHINNA whatsApp குழுமத்தின் நோக்கம்தான் என்ன?

CHANGING GALHINNA whatsApp குழுமத்தின் நோக்கம்தான் என்ன?


கல்ஹின்னை பெரிய ஜும்மாப் பள்ளிவாசல் நிர்வாகசபைத் தலைவர் அல்-ஹாஜ் ரியாஸ் லதிப் அவர்கள் 13-01-2023, வெள்ளிக்கிழமை ஊர் மக்களுக்கு சில விடயங்களைப் பற்றி தெளிவு படுத்தினார் .

முக்கியமாக WHATSAPP குழுமங்கள் தேவையற்ற முறையில் ஊரைப்பற்றிய தகவல்களை பரப்புகின்றார்கள்.தனிப்பட்ட குரோதங்களை குழுமங்களில் பதிவிட்டு ஆலோசனைகள் என்ற பெயரில் அசிங்கப்படுத்துகின்றார்கள்.இப்படிப்பட்ட விடயங்கள் ஊரின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளவேண்டும் .

கலந்துரையாடல்கள் என்ற போர்வையில் என்னவெல்லாமோ கதைக்கின்றார்கள் .வாய்க்கு வந்ததெல்லாம் கருத்துக்களாக பதிவிடுகின்ற அவலத்தைக் காணக் கூடியதாயிருக்கின்றது.

அதிலும் முக்கியமாக CHANGING GALHINNA குழுமத்தில் இப்படியான கருத்துப் பரிமாறல்கள் அடிக்கொருதரம் நடைபெறுகின்றன.வருடக் கணக்கில் இந்த கருத்து மோதல்கள்(கலந்துரையாடல்கள் என்பதை விட மோதல்கள் என்பது பொருத்தம் என்று நினைக்கின்றேன்) நடந்தாலும் அவர்கள் எடுத்துகொல்கின்ற விடயம் எதுவும் நடந்ததாக இல்லை.

CHANGING கல்ஹின்னையின் திட்டங்கள் நன்றாக இருந்தாலும் அவர்கள் செயல்படுத்த நினைக்கின்ற வழிமுறைகளில் பல ஓட்டைகள் இருக்கின்றன.அதனால் அவர்களின் திட்டங்கள் நிறைவேறாமல் புதைந்துவிடுகின்றன.அட்மின்கள் வெளிநாடுகளில் இருப்பதால் ஊரின் உண்மை நிலை அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.ஏனென்றால் ஊரில் இருக்கின்ற CHANGING கல்ஹின்னை அட்மின்கள் எதற்கும் பிரயோசனமில்லாதவர்கள்.

அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றுதான்.FORWARD செய்திகள் வந்தால் அவற்றை அகற்றுவது அல்லது FORWARD பண்ணியவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பது.இதைத் தவிர இந்த குழுமத்தின் கல்ஹின்னை  உறுப்பினர்கள் வேறு எந்த ஒரு நற்காரியங்களுக்கும் முன்னிற்பதில்லை.

ஆகவே கல்ஹின்னை பள்ளி நிரவாகசபை தலைவர் இவர்களைப் பற்றிய ஒரு விரிவான, வெளிப்படையான விளக்கத்தை ஊர் மக்களுக்கு தெரிவித்துள்ளார்.அதன் சுருக்கத்தை இங்கே பதிவிட்டுள்ளேன் ......
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ வபரக்காத்துஹு 

கடந்த சில நாட்களுக்கு முன் ' CHANGING GALHINNA whatsApp குழுமத்தின் ஊடாக ஒரு சிலர் தங்கள் தனிப்பட்ட  குரோதங்களை  ஒளிநாடாகள் மூலம் வெளிப்படுத்திக் கொண்டு இருந்தார்கள் அது ஒரு ஊரின் தன்மானத்தை புண்படுத்தியது என்பதில் சந்தேகமில்லை.

இது மிகவும் மோசமான ஒரு செயல்.இப்படிப்பட்ட பதிவுகளை CHANGING கல்ஹின்னை அட்மின்கள் கவனிப்பதில்லை.

ஆனால் அப்பாதிப்புக்கு உள்ளான நபர் இதற்கான பதில் அடியை கொடுப்பதற்கு கொஞ்சம் காலதாமதம் ஆனது,  என்றாலும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது.

CHANGING GALHINNA whatsApp குழுமத்தில் இணைந்துள்ள சிலர் எது உண்மைத் தன்மை என்பதை அறியாது வாய்க்கு வருவதையெல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள், ADMIN புளைல் காசீம் அவர்கள் வருவதை எல்லாம் வாத்து இடும் தங்க முட்டை என்கின்ற எண்ணத்தில் பதியப்பட்டிருக்கும் அனைத்து விடயங்களையும் வெளிப்படுத்துகின்றார்.

ஒரு விடயத்தை அறிய அவர்களுக்கு ஆர்வமுமில்லையா, அல்லது அறிவே இல்லையா? 

கல்ஹின்னையின் இன்றைய நிலைமையைப்பற்றிய கவலையுமில்லை, எதோ வாய்க்கு வந்ததெல்லாம் கொட்டித் தீர்க்கின்றார்கள். அர்த்தமேயில்லாமல் புலம்புகின்றார்கள் சிலர். இதற்கான பொறுப்பு CHANGING GALHINNA குழுமத்தின்  ADMIN புளைல் காசீம் அவர்களேதான்

CHANGING GALHINNA whatsApp குழுமத்தின் ADMIN அவர்களின் ஆர்வத்தைப் பார்க்கும் போது ஊர் பற்றுள்ள உண்மையான தியாகி என நினைக்கத் தோன்றுகிறது.

CHANGINGகல்ஹின்னை அட்மின்களின் செயலைப் பார்க்கும்போது ஊரில் அணைத்து விடயங்களையும்,அவர்களாகவே செய்துவிடுவார்கள் போன்றுதான் இருக்கின்றது.ஊரில் இருக்கின்ற அத்தனை பிரச்சினைகளையும் CHANGING கல்ஹின்னையிடம் கையளித்துவிட்டு தனவந்தர்கள் ஒதுங்கிவிட்டால் நன்றாயிருக்கும்போல் தோன்றுகின்றது. 

CHANGING கல்ஹின்னையின் அட்மினும் ,, அவரின் சகாக்களையும் ஊருக்கு வரவழைத்து பொறுப்புக்களை கையளிக்குமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். 

ஊரின் முன்னேற்றமே எங்களின் எதிர்கால கனவு.

சில நாட்களுக்கு முன்  பூதல்கஹாவில் வசிக்கின்ற CHANGING GALHINNA whatsApp குழுமத்தின் கல்ஹின்னை கிளையின் பொறுப்புதாரி அவர்களுடனும் இது சம்பந்தமாக  2,மணித்தியாலங்கள் பேச்சிவார்த்தை நடத்தப்பட்டதாகவும் கல்ஹின்னை ஜும்மாப் பள்ளிவாசல் நிர்வாகசபைத் தலைவர் அவர்கள் ஜமாத்தர்களிடம் அறிவித்தார்.
---
பள்ளி நிர்வாகசபை தலைவருக்கு என்னுடைய ஒரு வேண்டுகோள் ....

கல்ஹின்னையில் இருக்கின்ற CHANGING கல்ஹின்னை அட்மின்களிடம் பேசிப் பயனில்லை என்றாள் .உலகம் முழுவதும் பரவிக்கிடக்கின்ற CHANGING கல்ஹின்னை கிளைகளை தொடர்புகொண்டு பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வை பெறலாம் என்று நினைக்கின்றேன்.

CHANGING GALHINNA whatsApp குழுமத்தின் கிளைகள் Australia, Canada, Japan, European Union, South Africa, Botswana, Singapore, Middle East, Saudi Arabiya, Qatar, and Fiji Island.
  
M.M.பாரூக் (WC) 
கல்ஹின்னை

 


Post a Comment

Previous Post Next Post