கல்ஹின்னை மண்ணுக்கு பெருமை சேர்த்த சட்டத்தரணி அல்-ஹாஜ் H.M.பாரூக் அவர்கள்

கல்ஹின்னை மண்ணுக்கு பெருமை சேர்த்த சட்டத்தரணி அல்-ஹாஜ் H.M.பாரூக் அவர்கள்

சட்டத்தரணி அல்-ஹாஜ் H.M.பாரூக் அவர்களைப்பற்றிய ஓர்
கண்ணோட்டம்!

சட்டத்தரணி அல்-ஹாஜ் H.M.பாரூக்  அவர்கள் கல்ஹின்னையில் E.H.  குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். ஆழமான நீர் அமைதியாய் இருக்கும் என்பார்கள், அதுபோன்றே அவரின்  சொந்த வாழ்க்கையும் அமைந்துள்ளதை பார்க்க முடிகின்றது.

அத்தோடு அடுத்தவர்களை நேசிப்பதில்,சர்வாதிகாரமற்ற, சுயநலமற்ற ஒரு மனிதராக  இருப்பது மிகவும் பெருமைப்படக் கூடிய ஒரு விடயம் .இன்றும் என்றும் கல்ஹின்னை மண்ணில் பேசப்படும் ஒரு முக்கிய மனிதர் என்றால் மிகையாகாது. அல்ஹம்துலில்லாஹ்.

பொதுவாக ஒரு ஊரின் மகத்துவம் மகிமையை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் அவ்வூரின் முதல் அடையாளமாக தேடப்படுவது அங்கே படித்தவர்கள், உயர்பதவியில் இருப்பவர்கள் யார் என்பதே முதல் கண்ணோட்டமாகும்.

அந்த வகையில்  சட்டத்தரணிஅல்-ஹாஜ் H.M.பாரூக்  அவர்கள் முதன்மையானவர் என்பதில் பெருமைப்படுகிறேன், 

1991,ம் ஆண்டு மத்திய மாகாணத்தில் மகாணசபை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) உறுபினராக இருந்த காலத்திலேயே கல்ஹின்னை அல்-மனார் தேசியப்பாடசாலைக்கு ஒரு கட்டிடத்தையும் அமைத்துக் கொடுத்து  அதிபரின் காரியாலயத்திற்கு முன்பாக தனது சொந்தப் பணத்தை சிலவு செய்து அழகியதோர் பூந்தோட்டத்தையும் அமைத்துக் கொடுத்தார் அல்-ஹாஜ் H.M.பாரூக் சட்டத்தரணி அவர்கள்.

அல்-ஹாஜ் H.M.பாரூக்  அவர்கள்2002,ம் ஆண்டு முதல்  2005,ம் ஆண்டு காலம் வரையிலும் கென்யா நாட்டில் இலங்கைக்கான தூதுவராக  பொறுப்பேற்று சென்றார், இப்படியானதொரு நிலையில்தான் ஒரு கிராமம், அல்லது ஒரு ஊரின் பெருமையை பிறமக்களொடு பகிர்ந்து கொள்ளும் ஓர் சந்தர்ப்பமாகும்.

அந்தவகையில் எமதூர் கல்ஹின்னையின் பெருமையை பிறநாட்டு மக்கள் அறியச் செய்த முதல் கதாநாயகன் அல்-ஹாஜ் H.M.பாரூக்  அவர்கள் என்பதில் ஐயமில்லை காரணம் நானும் ஐக்கிய அரபு டுபாய் நாட்டில் இலங்கைக்கான தூதரகத்தில் (P.R.O) மக்கள் தொடர்பாளர்யாக பணிபுரியும் காலத்தில் அறிந்தவையே மேல் சுற்றிக்காட்டியுள்ளேன்.

அதன் பிறகு தன்னுடைய ஓய்வுகாலத்தில் தான் பிறந்த மண்ணின் மகத்துவம் மிக்க ஓர் இடமான அல்லாஹ்வின் மாளிகையை புனர் நிர்மாணம்  செய்யப்பட வேண்டுமென்ற ஆவலில்  ஊரின் உலமாக்கள், முக்கியஸ்தர்கள், தனவந்தர்கள், மற்றும் ஊரார்களின் வேண்டுகோளுக்கிணங்க கல்ஹின்னை பெரிய ஜும்மாப் பள்ளிவாசல் பரிபாலன சபைத் தலைவராக தெரிவு செய்யபட்ட நாள் முதல் நீண்டகாலம் தன்னுடை சேவை காலத்தை அல்லாஹ்வுக்கு மாத்திரம் பயந்தவராக செயல்பட்டார்.

குறிப்பாக: ஊரில் வசதியற்றவர்களை  தேடிச் சென்று உதவிகல் வழங்குவதில் மிகவும் ஆர்வமாய் செயல்பட்டார்.திருமணங்கள்,தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்ல வசதியற்றவர்கள், வீடு வசயற்றவர்களுக்கு தேவையான உதவிகள் மேலும் ஊர் மக்களின் அவசியத் தேவைகளை இனம் கண்டு  பூர்த்தி செய்தவர் அல்-ஹாஜ் H.M.பாரூக் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

கல்ஹின்னை ஜும்மாப் பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவாராக இருந்த காலத்தில் ஒரு சில சம்பவங்களால் மதக் கலவரங்கள் ஏற்படுகின்ற சூழ்நிலை உருவாகியபோது ,"ஒற்றுமைக்கான ஒரு பயணம்" என்னும் தலைப்பில் (27-10-2016.ஸ்ரீ தர்மகீர்த்தி தஹம் பாசல அன்கும்புரையில்)பெரும்பான்மை இனத்தவர்களின் மதபோதகர்கள், அப்பிரதேச முக்கியஸ்தர்களை ஒன்றுசேர்த்து ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்து இரு சமூகத்தினரையும் ஒற்றுமைப் படுத்திய பெருமையும் அல்ஹாஜ் பாரூக் அவர்களையே சாரும் 

அல்ஹாஜ் பாரூக் அவர்கள் எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டு அழகிய முறையில் செயல்படுத்துபவர் என்பது குறிப்பிடத் தக்கது.
 
அவருடைய தொடர் வெற்றிப் பயணங்களுக்கு ,அவருடைய அழகிய அணுகு முறைகளும் ,முறையான திட்டமிடலுமே முக்கிய காரணமாகின்றது.  

அந்த வகையில் அவருக்குக் கிடைத்த பதவிகளும் ,பட்டங்கலுமே எமதூருக்கு கிடைத்த மிகப் பெரும் பெருமையாக நாம் கருத வேண்டும் 
Ex: Ambassador of Sri Lanka to Kenya.
Ex: Permanent Rep. UNO (Nairobi)
Ex: Member of Provincial Council (Kandy)
Ex: Member of Public Service Commission and of Education, Service Commission.
Ex: Chief Trustee of Galhinna Grand Masjid

M.M.பாரூக் (WC)
கல்ஹின்னை.


 


Post a Comment

Previous Post Next Post