
கல்ஹின்னை அல்-மனார் தேசிய பாடசாலை 2022,ம் ஆண்டு காலகட்டத்தில் இருந்த நிலைதான் இந்த புகைப் படங்கள்.
இந்த அவலங்களை பலமுறை நாங்கள் சுட்டிக் காட்டியும் அதை புனரமைக்க எவரும் முன் வராத நிலையில் இன்று பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து புனரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
இவர்களுக்கு அல்லாஹ் பறக்கத் செய்வானாக .
இந்நிலையில் இவர்களை வேலை செய்யவிடாமல் தடுப்பதற்கென்றே ஒரு சிலர் முயற்சிக்கின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படிப்பட்ட விடயங்கள் ஊரின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.

அடுத்தவர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் ஒரு சில நயவஞ்சகர்கள் புகழ் தேட இப்படிப்பட்ட துரோகங்களை செய்கின்றார்கள்.
புகழ்தேட முனைகின்ற சில விஷமிகளின் இந்த ஈனச்செயலை கல்ஹின்னை மக்கள் புரிந்துகொண்டால் சரி.
கல்ஹின்னை அல்மனார் தேசிய பாடசாலைக்கு உதவிகள் செய்கின்ற நல்லுள்ளம் கொண்ட மனிதர்களின் மனதை புண்படுத்தி புகழ்தேட நினைக்கவேண்டாம்
M.M.பாரூக் (WC)
கல்ஹின்னை.
Tags:
கல்ஹின்னைபோஸ்ட்