ஆசிரிய தொழிலின் மகத்துவமும் , இன்றைய சமூகமும் ஆசிரியர்களும்!

ஆசிரிய தொழிலின் மகத்துவமும் , இன்றைய சமூகமும் ஆசிரியர்களும்!


“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என்று கூறுவார்கள். இந்த உலகில் பிறக்கின்ற மனிதன் கல்வியறிவினை பெறாவிடின் அவன் வாழ்வில் பல நலன்களை அறியாது போகிறான். 

இக்கல்வியறிவனை போதிக்கின்ற ஆசிரியர்கள் போற்றுதலுக்குரியவர்கள் ஆவர். “மாதா பிதா குரு தெய்வம்” என்பவர்கள் எமது வாழ்வில் என்றைக்கும் முக்கியமானவர்கள் என நாம் அறிவோம், ஆனால் இன்று கல்ஹின்னை மண்ணில் அதன் மகிமை மறைகின்றது ஏன் ?

ஒரு மனிதனுக்கு நல்ல தாய், நல்ல தந்தை அமைவதை போல நல்ல குரு அமைய வேண்டியது மிகவும் அவசியமானதாகும். ஏனென்றால் கல்வி ஞானமே வாழ்க்கையில் அறியாமையை எம்மிடம் இருந்து விரட்டும். ஆனால் இன்று கல்ஹின்னையில் அது ஓர் கேள்விக்குறி காற்சட்டை அணிந்தவர்கள் எல்லாம் கல்விமான்கள் என கதைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

ஆகவே ஆசிரியர்கள் இந்த சமூகத்தின் முன்னுதாரணமானவர்கள் ஒரு சமுதாயத்தின் வருங்காலமான மாணவர்களை உருவாக்கும் பணியை செய்யும் ஆசிரியர்களின் பணி அளப்பரியதாகும். நாம் அறிவோம் அதனைப் பகிர்வோம்.

ஆசிரிய தொழிலின் முக்கியத்துவம்
உலகத்தில் எத்தனையோ தொழில்கள் இருந்தாலும் கல்வி போதிக்கின்ற ஆசிரியர்களுக்கு மரியாதையும் முக்கியத்துவமும் வழங்கப்படுகிறது. ஏனென்றால் மனிதனை மனிதனாக்குவது கல்வியாகும். இக்கல்வியினை வழங்கும் ஆசிரியர்கள் முக்கியமானவர்களாக பார்க்கப்படுகின்றனர்.

கல்வியறிவு இல்லாத ஒரு சமூகம் ஆக்கபூர்வமான சமூகமாக இருக்காது. பண்புகள், பழக்க வழக்கங்கள், நல்லறிவு, ஞானம் மற்றும் விழுமியங்கள் போன்றனவற்றை இச்சமூகத்துக்கு போதிப்பவர்கள் நல்லாசிரியர்களாகவே இருப்பார்கள். என நாம் அறிவோம்.

“எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்” என்கிறார் ஒளவையார். இன்றைக்கு கல்வியின் மதிப்பு நன்றாகவே உணரப்படுகிறது. இதனை வள்ளுவர் “கேடில் விழுச்செல்வம் கல்வி மாந்தர்க்கு மாடல்ல மற்ற பிற” என்று கல்வியின் பெருமையை கூறுகிறார்.

ஒரு சமுதாயம் அறிவார்ந்த சமுதாயமாக இருக்கின்றதென்றால் அதற்கு அர்ப்பணிப்பும் நல்லெண்ணமும் கொண்ட ஆசிரியர்கள் தான் காரணமாக இருக்க முடியும் அப்படிப்பட்ட ஆசிரியர்களாக இருக்க வேண்டியவர்கள் சிலர் ஏன் ஒருபக்கம் மாத்திரம் தன்பார்வையைச் செலுத்துகின்றார்கள் ?

ஆசிரியர்களின் கருணையை பெற்ற மாணவனின் வாழ்க்கை சிறக்கும் என்பது திண்ணம். இருண்டு கிடக்கும் மாணவர்கள் மனதில் ஒளி விளக்காய் அவர்கள் வாழ்க்கையின் ஏணிப்படிகளாய் தம் மாணவர்களின் உயர்வுக்கு காரணமாக இருப்பவர்கள் ஆசிரியர்களே எனவே தான் எமது சமூகத்தில் ஆசிரியர்கள் முக்கியமானவர்களாக கருதப்படுகின்றனர்.

சமூகத்தின் முன்னோடிகள் ஆசிரியர்கள்
ஒரு நல்ல ஆசிரியர் பலன் தரும் விருட்சத்தை போல பல மாணவர்களின் அறிவு கண்களை திறந்து அச்சந்ததியை வாழ்வித்த புண்ணியத்தை செய்கின்றார்கள்.

வராலாறுகளில் சிறந்த ஆசிரியர்கள் தமது கல்விபுலமையை நூல்களாக தந்து இன்றைக்கும் எம்மோடு வாழ்கின்றார்கள் எனலாம்.

ஒரு மனிதன் இறக்கலாம் அவன் சொல்லி சென்ற கருத்துக்களும் கொள்கைகளும் என்றைக்கும் அச் சமூகத்துக்கு வழிகாட்டியாக இருக்கும் என நான் நம்புகிறேன்.

எந்த காலத்துக்கும் பொருந்தக்கூடிய அவர்களது அறிவுரைகளும் வழிகாட்டல்களும் நம் அனைவரையும் வழிநடத்தும். ஆனால் எழுதிக் கொடுப்பதை மாத்திரம் ஆராயாமல் வாசித்து காட்டினால் அது விளம்பரம் எனவே இச்சமூகத்தின் ஆக சிறந்த வழிகாட்டிகள் ஆசிரியர்கள் என்றால் அது மிகையல்ல.

இன்றைய சமூகமும் ஆசிரியர்கள்
இன்றைக்கு சமூகமும் கல்வி முறைகளும் நாகரகீமடைந்து விட்டது. ஆசிரியர் மாணவ உறவு முறை மாறிவிட்டது. முன்பு ஆசிரியர்கள் மாணவர்களை குழந்தைகளாக பாவித்தனர். மாணவர்களும் ஆசிரியர்களுக்கு பெருமதிப்பளித்து பயபக்தியுடன் கல்வி பயின்றனர். இதனால் அக்காலத்து கல்ஹின்னையில்  கல்வியும் மாணவர்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்தது. அனால் இன்றோ வாழைமரத்தில் அடித்தது போல் ஆகிக்கொண்டு போகின்றது.

ஒரு சிலர் ஆசிரிய தொழிலின் மகிமை அறியாது அதனை தவறாக பயன்படுத்துகின்றனர். இந்த முறை மாறவேண்டும் நல்ல ஆசிரியர்கள் உருவாகி இந்த சமூகத்துக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பது எனது அவா

M.M.பாரூக் (WC)
கல்ஹின்னை.


 


Post a Comment

Previous Post Next Post