கல்ஹின்னை - பட்டகொள்ளாதெனிய அரசியல் களம்!

கல்ஹின்னை - பட்டகொள்ளாதெனிய அரசியல் களம்!


கடந்த சில நாட்களாக கல்ஹின்னை பட்டகொல்லாதெனிய பகுதியில் இருக்கும் அரசியல் ஆதரவாளர்கள் சிலர் ஒன்றுசேர்ந்து 'அரசியல் களம்' எனும் whatsApp குழுமத்தை ஆரம்பித்து,சாக்கடை கருத்துக்களை பதிவிடுகின்றதை காணக் கூடியதாயுள்ளது. 

அரசியல் ஒரு சாக்கடை என்பதற்கு இந்த whatsapp குழுமம் மிகவும் பொருந்தக்கூடியது என்று நினைக்கின்றேன்.

ஒரு காலத்தில் ஒன்றாக செயல்பட்டு ஒற்றுமையாக வாழ்ந்த கல்ஹின்னையும் படகொள்ளாதெனியவும் இன்று ஒருவருக்கு ஒருவர் வேற்றுமைகளை காட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.இந்த மாறுதலுக்கு அன்று காரணமாயிருந்தவர்கள் இன்று கைகட்டிப் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள்.சாதாரண மக்கள் அதை முன்னெடுத்துச் செல்கின்றார்கள்.

இந்த மாறுதல் எதிர்காலத்தில் மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உறுதியாக கூற முடியும்.

அதன் முதற்கட்டமாகத்தான் இன்றைய அரசியல் செயற்பாடுகள் அமைந்துள்ளது.

படித்தும் அறிவில்லாத அரசியல்வாதிகளும் ,படிக்காத  அரசியல்வாதிகளும் தங்கள் சார்ந்துள்ள கட்சிகளுக்கு வெற்றிபெற்று புகழ் சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ஒருசிலர் மாபெரும் திட்டங்களை இன்றே அறிவிக்கின்றார்கள்.வேறுசிலர் நான் வெற்றிபெற்றால் அதைச் செய்வேன் ,இதைச் செய்வேன் என்று கத்துகின்றனர்.

இந்த அரசியல்வாதிகளின் கதறல்கள் வேடிக்கையாயிருக்கின்றது.

ஏனென்றால் ஏற்கனவே பார்த்தும்.கேட்டும் பழகிப் போன அரசியல் டயலாக்  என்பதால் அலுப்பாயிருக்கின்றது.

இந்த அரசியல்வாதிகளில் எவரும் பொது நலம் கருதி தேர்தலில் குதிப்பதில்லை .அவரவர்க்கு தேவையானதை சாதித்துக்கொள்ளும் அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் ஒரு சந்தர்ப்பம்தான் இந்தத் தேர்தல்கள்.

இவர்களில் எவரும், அத்தனையையும் துறந்து நாட்டு விடுதலைக்காக போராடிய மகாத்மா காந்தியல்ல என்பதை பொதுமக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

கல்ஹின்னையிலும் படகொள்ளாதெனியாவிலும் போட்டியிடுகின்ற வேற்பாளர்களில் எத்தனைபேர் படித்தவர்கள்,எத்தனைபேர் அரசியல் தெரிந்தவர்கள் என்று கவனித்தோமேயானால் சற்று சிந்தித்து செயல்படத் தோன்றும். 

இவர்களில் அனேகம்பேர் whatsapp குழுமங்களில் ஹீரோக்கள்.அவர்களின் ஆதரவாளர்கள் அதைவிட பெரிய ஹீரோக்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.

குழுமங்களில் பாவிக்கின்ற வார்த்தைப்பிரயோகங்கள் மிகவும் அசிங்கமாயிருக்கின்றன.கவலையளிக்கின்றன.
ஆனாலும் தேர்தலில் போட்டியிடுகின்றவர்கள் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கின்றார்கள்.


இவர்களுடைய ஆசையும் அதுதான்.ஒருத்தருக்கு ஒருவர் ,முட்டி மோதிக்கொள்ளவேண்டும்.மக்களுக்கிடையே பிரிவினையை உண்டுபண்ணவேண்டும்.

இப்படி பல திட்டங்கள் அரசியல்வாதிகளின் சிந்தனையில் ஓடிக்கொண்டிருக்கும்.இதில் பொது மக்கள் பலிகடாவாகப் பயன்படுத்தப்படுகின்றார்கள்.

ஆகவே கல்ஹின்னையிலும் படகொள்ளாதெனியாவிலும் போட்டியிடுகின்றவர்கள் முதலில் ஒற்றுமையைப் பற்றிப் பேசுங்கள்.ஒரு சில யஹூதிகளின் வலையில் சிக்கி ஒற்றுமையை சீர்குலைத்து விடாதீர்கள். 

இந்தத் தேர்தல் என்பது அரசாங்கத்தைத் திருப்திப்படுத்த மட்டுமே.எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் நடக்கப்போவது ஒன்றுமேயில்லை.

இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் நிம்மதியாகத் தூங்கிவிடும் அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலில்தான் கண்ணைத் திறந்து  பார்ப்பார்கள்.இந்த சுழற்சியை காலம் காலமாக நாம் பார்க்கின்றோம்.

ஆகவே கல்ஹின்னை மக்கள் நன்றாக சிந்தித்து இந்தத் தேர்தலில் வாக்களிப்பது கல்ஹின்னையின் எதிர்கால நலனுக்கு உகந்ததாய் அமையும் .

தயவு செய்து whatsapp குழுமங்கள் என்ற பெயரில்அசிங்கங்களை பதிவிடவேண்டாம் .பொய்யான தகவல்களை பகிர வேண்டாம்.

whatapp குழுமங்கள் ஊரின் சாபக்கேடு...   

M.M.பாரூக் (WC)
கல்ஹின்னை.
  

 


Post a Comment

Previous Post Next Post