முஸ்லிம் சமூகத் தலைமைகளின் நிலைப்பாட்டினை புகழ்ந்து பேசிய ஒரு யூதன்!

முஸ்லிம் சமூகத் தலைமைகளின் நிலைப்பாட்டினை புகழ்ந்து பேசிய ஒரு யூதன்!

வீட்டுத்தலைவர்,குடும்பத் தலைவர்,ஊர்த்தலைவர், பள்ளித் தலைவர்,பாடசாலைத் தலைவர்,சமூகத் தலைவர்,சங்கத் தலைவர்,சமயத் தலைவர்,அறிவகத் தலைவர்,அரசியல் தலைவர் ஆகிய முஸ்லிம் ஆண் பெண் அனைவருக்கும் இது சமர்ப்பணம்! 
 
உலகில் யூதர்களுக்கென ஒரு இடம் இருக்கவில்லை!
இருக்க வீடுகள் அறவே இல்லை! 

பெயர் ஒரு சொல்லிக்கொள்ள நாடு இல்லை! நாதி இல்லை! 

இந்நிலையில் பலஸ்தீனக்குள் வந்து முஸ்லிம்களுக்குள் புகுந்து, முஸ்லிம்களின் நல்லெண்ணங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, முஸ்லிம்களின் வீடுகளை கூலிக்கும் குறைந்த விலைகளுக்கும் பெற்றுக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக வாழ்ந்து வந்தார்கள்!

 இந்த சந்தர்ப்பத்திலே உலகில் ஆங்காங்கே வாழ்ந்து வந்த யூதர்கள் அனைவரையும் இந்த பாலஸ்தீனத்துள் ஒன்று சேர்க்கவேண்டும்; ஒரு தேசத்தை தமக்காக உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையிலே இரகசியமாக ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தார்கள். 

அந்தக் கூட்டத்திலேயே பற்பல ஆலோசனைகள் முன்மொழியப்பட்டது,பல்வேறு ஆலோசனைகளுக்கு அப்பால் 95 சதவீத  யூதர்கள் பின்வருமாறு சொன்னார்கள்!
எம்மைச் சுற்றி இருப்பதெல்லாம் பணமும் பலமும் படைத்த சக்திவாய்ந்த அரபு நாடுகள்! பல லட்சக்கணக்கான அரபு மக்கள் எம்மைச்சுற்றி வாழ்கின்றனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து சிறுநீர் கழித்தாலே போதும்! அதில் மூழ்கி நாம் இறந்து விடுவோம்! இவ்வாறான நிலையில் நாம் எமக்கான இஸ்ரேல் தேசத்தை எவ்வாறு இவ்விடத்தில் உருவாக்க முடியும்! ஒருநாளும் அது சாத்தியப்படாது வேறு ஆலோசனைகள் இருந்தால் முன்வையுங்கள் என்று உறுதியாகத் தெரிவித்தார்கள்!

உண்மையும் அதுதான்!

என்றாலும் அங்கிருந்த ஒரு வயது முதிர்ந்தவர் எழுந்து; பயப்பட வேண்டாம்! பயப்பட வேண்டாம்!  

நான் சொல்வதை நிதானமாகச் செவிமடுத்துக் கேளுங்கள் என்று முஸ்லிம்களின் பழம்பெரும் பண்புகளை இவ்வாறு எடுத்துரைத்தார்!
 
முஸ்லிம்களிடத்தில் மூன்று பழக்கங்கள் இருக்கின்றன. அந்த மூன்று பழக்கங்களும் முஸ்லிம்களிடத்தில் எப்போதும் மாறவே மாறாது! ஒருவேளை அந்த மூன்று பழக்கங்களும் மாறும் காலத்தில்தான் எமக்கு பிரச்சினை வரும்! அதற்குள் எம்மைவளர்த்துக் கொள்ளலாம்!  

ஆனாலும் ஒருநாளும் அந்தப் பழக்கங்கள் அவர்களை விட்டும் மாறாது!  போகாது!. 

அனைவரும் ஒரே குரலில் ஒருமித்துக் கேட்டார்கள்..  அவை என்ன?

அவர் சொன்னார்.... அவை 
1)முஸ்லிம்கள் ஒருநாளும் அவர்களது சமூகத்தின் நல்ல ஒரு விடயத்துக்காக ஒன்று சேரமாட்டார்கள்!

2)அவ்வாறு ஒன்று சேர்ந்தாலும் சமூகத்துக்காக ஒழுங்கான ஒரு முடிவை எடுக்க மாட்டார்கள்!

3)ஒருவேளை அவ்வாறு நல்ல ஒரு முடிவை எடுத்தாலும் ஒருநாளும் அதனை நடைமுறைப்படுத்த மாட்டார்கள்! நான்...நீ... என்ற தலைமைப் போட்டியிலும் ஒருவர் மேல் ஒருவர்பழியைப் போட்டவாறும்  காலத்தைக் கடத்துவார்கள்!

விட்டுப்போகாத இந்தப் பண்புகள் அவர்களிடம் இருக்கும் வரை அவர்களால் எம்மை ஒன்றும் செய்ய முடியாது!. எனவே பயப்படாமல் எமது தேசத்தை உருவாக்குவதற்காக முன்வாருங்கள். வாருங்கள் வேலையை துவங்கலாம் என்றார்! 

இப்படித்தான் இஸ்ரேல் தேசம் உருவானது! 

இஸ்ரேலின் வளர்ச்சியை இப்போது நாம் அண்ணாந்து 
பார்த்தாலும் கணிப்பிட முடியாதநிலை!

முஸ்லிம்கள் மத்தியிலே இன்று..பாடசாலை மட்டமாக இருக்கட்டும், நிர்வாக சபைகளாக இருக்கட்டும், பொதுச் சேவைச் இயக்கங்களாக இருக்கட்டும்,அல்லது ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப இயங்கபடுகின்ற அமைப்புக்களாக இருக்கட்டும் இவை அனைத்தும் சிறப்பாக இயங்கப்பெறுகின்றனவா? எனப்பார்த்தால் அது இல்லவே இல்லை என்று உறுதியாய்ச் சொல்லமுடியும்! 

இன்றைய சூழ்நிலைகளில் ஒரு அமைப்பு ஒரு வருடம் இயங்குவதே பெருவியப்பாக இருக்கிறது!

இதன் உண்மைத் தன்மையை நாங்கள் அனைவரும் இந்த இடத்தில் புரிந்து கொள்ள வேண்டும்!

நான்தான்,என்னால்தான் என்ற வார்த்தை,நான்தான் சரி என்ற வார்த்தை என்ற சுய எண்ணங்களை விட்டுவிட்டு நாம், எம்மால் என்று இணைந்து வல்ல அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மாத்திரம் எதிர்பார்த்து எமது பொதுப்பணிகளை மேற்கொள்வோம்!

எனது இந்த ஆக்கம் ஆனது யாரையும் நோவினைப் படுத்தவோ குற்றங் காணவோ எழுதப்படவில்லை! மாறாக எமது சமுதாயத்தின் நிலைமையை இந்த யூதனின் சொல் இவ்வளவு தூரம் உண்மைப்படுத்தி வருகிறது என்பதை நாம் ஒருமித்து சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்!

படித்ததில் பிடித்தது 
அனுப்பியவர் 
எம்.எச்.எம்.நியாஸ் 
மீடியாலின்க் 


 


 


Post a Comment

Previous Post Next Post