கல்ஹின்னை மக்களின் கொழும்பு ராஜா என்ற தலையங்கத்துடன் எழுதப்பட்ட கட்டுரையை படித்தேன்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தும் உண்மையானவை.இதில் முக்கியமாக போட்டியும்,பொறாமையும் தாராளமாக இருக்கின்றது.
தற்போது ஊரில் நடக்கின்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூலகாரணம் Changing Galhinna என்ற whatapp குழுமம்தான்.இவர்கள் ஆரம்பித்தது முதல் பிரச்சினைகளையும் கூடவே வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
குழுமம் என்ற ஒன்றை ஆரம்பித்து எப்படி வேண்டுமென்றாலும் பேசுங்கள்,எவனை வேண்டுமென்றாலும் வசை பாடுங்கள்,எவனுடைய வீட்டில் என்ன நடக்கின்றது என்று எட்டிப்பாருங்கள் ,அடுத்தவர்களைப் பற்றி அவதூறுகளைப் பரப்புங்கள் என்று அந்த குழுமத்தை பகிரங்கமாக விட்டிருக்கின்றார்கள்.
கண்ட கண்டவர்கள் தங்களை பெரும் வீரர்களாக நினைத்துக்கொண்டு வீர வசனங்களைப் பேசி தங்களை கல்ஹின்னையின் தியாகிகளாக முன்னிறுத்த முனைகின்றார்கள்.
ஒரு சிலர் வாழ்நாள் முழுவதும் குறிப்பிட்ட ஹாஜிகளிடமும்,வேறு சிலரிடமும் வாங்கித் திண்டே பழகிவிட்டார்கள்.இவர்கள் அந்த நன்றிக் கடனுக்காக ,ஹாஜிகளுக்கு பொய்யான தகவல்களை எத்திவைப்பது,நேருக்கு நேர் ஹாஜிகளைப் பற்றி பெருமையாக கதைப்பதும்,ஹாஜிகளின் எதிரிகளிடம் ஹாஜிகளைப் பற்றிய தவறான கருத்துக்களை தெரிவித்து 'மூட்டி'விட்டு இரு சாராரிடமும் ஒரு தொகையைப் பெற்றுக்கொள்வது அவர்களின் வழமையானதொன்றாகிவிட்டது.
கல்ஹின்னையில் changing கல்ஹின்னையாள் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் ஏராளம்.இவர்களுக்கு முஸ்லிம் ஹாஜியாரிடமோ,ஜிப்ரி ஹாஜியிடமோ தனிப்பட்ட ரீதியில் ஏதாவது கொடுக்கல் வாங்கல் இருந்தால் அதை ரகசியமாக தீர்த்துக்கொள்ளலாம்.
அப்படியில்லாமல் ஒரு விபச்சார விடுதியைப் போன்று பகிரங்கமாக திறந்துவிட்டு,"அடித்துக்கொண்டு சாகுங்கள்"என்று கூறுவதைப் போன்று செயல்படுகின்றது "changing galhinnai"whatsap குழுமம்.
இந்த குழுமத்தின் Adminகள் கல்ஹின்னையை பற்றி எதையும் பேச மாட்டார்கள்.குழுமத்தில் இணைந்துள்ளவர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள்.இது இவர்களுக்கு புதிதள்ள.
கல்ஹின்னை பிரச்சினைகளுக்கு முடிவு கட்ட மக்கள் நினைத்தால் தயவு செய்து குழுமங்களில் புகுந்து வீர வசனங்கள் பேசுவதை நிறுத்திவிட்டு, சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாகச் சென்று சுமூகமான முடிவுகளை எடுங்கள்.
இல்லையென்றால் கல்ஹின்னை பல நல்ல உதவிகளை இழக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப் படும் என்று நினைக்கின்றேன்.
GALHINNA FMH