உலகளவில் இலங்கைக்கு கிடைத்துள்ள பெருமை

உலகளவில் இலங்கைக்கு கிடைத்துள்ள பெருமை

20 வயதான இலங்கை யுவதி ஒருவர் 2023 ஆம் ஆண்டில் நிலவில் காலடி வைக்கப் போகிறார் - இது உலகளவில் இலங்கைக்கு கிடைத்துள்ள பெருமையாகும்.

இலங்கை இளம் யுவதியான சந்தலி சமரசிங்க, Dear moon திட்டத்தின் கீழ் நாசா நிறுவனம் ஊடாக நிலவுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ள குழுவினரில் இடம்பிடித்துள்ளார்.

இதேவேளை, 2019ஆம் ஆண்டு நாசா நிறுவனத்தில் விசேட பயிற்சி பெறுவதற்கு புலமைப் பரிசில் பெற்ற சந்தலி, தனது பொருளாதார நெருக்கடி தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து உதவி கோரியிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் குறித்த யவதிக்கு தேவையான பண உதவிகளை செய்து கொடுத்தார்.

இதன் மூலம் 2023 ஆம் ஆண்டு நிலவுக்கு செல்ல வேண்டிய தெரிவு செய்யப்பட்ட 17 பேர் கொண்ட குழுவில் இலங்கையைச் சேர்ந்த 20 வயதான சந்தலியும் இடம்பிடித்துள்ளார்.

தனக்கு உதவி புரிந்த முன்னாள் ஜனாதிபதியை சந்தித்து குறித்த யுவதி ஆசி பெற்றதோடு தான் நிலவுக்கு செல்ல உள்ள செய்தியையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். 

Post a Comment

Previous Post Next Post