நாம் வாழும் இந்த உலகில் பல விசித்திரமான நிகழ்வுகளும், ஆச்சரியமான சம்பவங்களும் அரங்கேறிக்கொண்டே தான் இருக்கின்றது. இந்நிலையில் நமது அறிவுக்கு எட்டாத சில புதிரான விடயததினை இங்கு காணலாம்.
#கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்து விடும்.
#யானையின் கால் தடத்தின் நீளத்தை அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.
#கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம்.
#1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 310 பேர் தான்.
#ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் - ஈரிதழ்சிட்டு.
#வால்ட் டிஸ்னி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.
#ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.
#பெரியார் பொதுக் கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21,400 மணிநேரம் பேசியுள்ளார்.
#தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான் குங்பூ வீரர் ஆனார் - புருஸ்லீ.
#‘தாஸ் காப்பிட்டல்’ நூல் எழுத காரல் மார்க்ஸூக்கு 14 ஆண்டுகள் தேவைப்பட்டது.
#சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.
#விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டி ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
#சீல் வண்டுகள் 17 ஆண்டுகள் மண்ணிற்குள் புதைந்திருக்குமாம். 17 ஆண்டிற்கு பின்பு வெளியே வரும் இதன் ஆயுட்காலம் வெறும் 7 நாட்கள் தான்.
#யானை குதிரை நின்று கொண்டே தூங்கும்.
#நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
#டால்பின் ஒரு கண்ணை திறந்துகொண்டே தூங்கும்
#புழுக்களுக்கு தூக்கமே கிடையாது.
#மரங்கொத்தி பறவை ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தை கொத்தும்.
#நாம் இறந்து பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.
#எறும்பு தன் உடல் எடையைவிட 50 மடங்கு எடையை தூக்கும்.
Tags:
கல்வி /பொது அறிவு