கல்ஹின்னை ஜாமிஅதுல் பத்தாஹ் அரபுக் கலாபீடத்தின் ஆசான்களே

கல்ஹின்னை ஜாமிஅதுல் பத்தாஹ் அரபுக் கலாபீடத்தின் ஆசான்களே


(15-01-2023,யில் அல்ஆலீம் கற்கையை நிறைவு செய்து 
செல்லும் மாணவர்களின் இதய ஓசைகள்!_)

அறிவின் ஆசான் நீங்கள்
ஆனந்தத்தின் வாயில் நீங்கள்
இன்முகம் கொண்டவர் நீங்கள்
எம்மதத்தையும் மதித்தவர் நீங்கள்

அன்பை கொடுத்தவர் நீங்கள்
அறிவை வளர்த்தவர் நீங்கள்
அடக்கம் கொண்டவர் நீங்கள்
அழியாப் புகழ் பெற்றவர் நீங்கள்

மாணவர்களின் விடியல் நீங்கள்
மறைந்து போகாத வானவில் நீங்கள்
மகிழ்ச்சியின் இருப்பிடம் நீங்கள்
மனசாட்ச்சியின் பிறப்பிடம் நீங்கள்

எண்ணத்தை விதைத்தவர் நீங்கள்
ஏற்றத்தை கொடுத்தவர் நீங்கள்
சோதனை கடந்தவர் நீங்கள்
சாதனை செய்தவர் நீங்கள்

காலம் கடந்தாலும் கடைசிவரை 
தொடரும் உமது புகழ் கல்ஹின்னை 
ஜாமிஅதுல் பத்தாஹ் அன்பான ஆசான்களே.
அல்ஹம்துலில்லாஹ்.


M.M.பாரூக் (WC)
கல்ஹின்னை.

 


Post a Comment

Previous Post Next Post