நல்லன செய்பவர்கள் கல்ஹின்னைக்கு என்றென்றும் தேவை...!

நல்லன செய்பவர்கள் கல்ஹின்னைக்கு என்றென்றும் தேவை...!


மூஸாமுனையின் மூலபிதாவான முகம்மது அலிபவாவின் மகன் ஹபீபு முஹம்மது லெப்பை  அவர்களின்  புதல்விகளுள் ஒருவரான ஸல்ஹா பீபி என்பவரை  "மூஸா"  என்று அழைக்கப்பட்டுவந்த ஹபீபு முஹம்மது என்பவர் மணந்துள்ளார்.

அவர்களுக்குப் பிறந்த புதல்வியர்களுள் ஒருவரான பாத்துமுத்து பறகஹதெனியவில் அப்துல் ஹமீத் என்பருக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டுள்ளார்.

அவர்களின் இரண்டாவது மகனான முஹம்மது உவைஸ் தனது இறத்தவுறவு முறையான ஸரீனா என்பவரை மணமுடித்து, கல்ஹின்னைக் கிராமத்திலேயே தொழில் புரிந்து வந்ததோடு, சமூக சேவைகளிலும், அரசியலிலும் அதிக ஈடுபாடுகாட்டி வந்தவராகாவும் இருந்தார்.

ஹாரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியில் பிரபல்யம் பெற்றிருந்த மர்ஹூம்  ஏ.சீ.எஸ். ஹமீத் அவர்கள் கல்ஹின்னைப் பிரதேசத்துக்கான தனது பிரசாரப் பணியைச் செய்வதற்காகத் தேர்ந்தெடுத்தவர்களுள் முகம்மது உவைஸும் ஒருவராவார். 

1977ம் ஆண்டைய தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமோக வெற்றிக்குப் பின்னர், முகம்மது உவைஸ் ஈராக் நாட்டிலுள்ள 
இலங்கைத் தூதரகத்துக்குப் பணிக்காக அனுப்பப்பட்டார்.

அங்கு சிலகாலம் பணி செய்த பின்னர், தாய்நாடு திரும்பிய முகம்மது உவைஸ், தொடர்ந்தும் அரசியலில் அதிக ஈடுபாடு காட்டி வந்தார்.

அரசியலுக்குள் பல்வேறு வழிகளிலும், தமது எதிரிகளினால், அவர் தாக்குதல்களுக் குள்ளாக்கப்பட்டும், சேறுபூசப்பட்டும் வந்த நிலையில், தனது பணியைத் தொடர்வதற்காக மூத்த மகன் ரஸானைத் தயார்படுத்திவிட்டு, சில வருடங்களுக்கு முன்னர் அவர்  இவ்வுலகை விட்டும் மறைந்து போனார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!


தனது தந்தையின் அபிலாசையை நிறைவேற்றும் நோக்கில் அரசியலுக்குள் சங்கமமான உவைஸ் றசான்,  கிராமத்துக்கான சமூக சேவைகள் செய்வதில் அதிக ஈடுபாடுகாட்டி வந்தார்.

பள்ளிவாயில், பாடசாலைகளின் குறைகளைக் கண்டறிந்து, அவற்றை நிறைவு செய்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்துவது, கிராமத்தில் ஆங்காங்கே சீரற்றுக் கிடந்த பாதைகளை  அபிவிருத்தி செய்வது, இருளில் மூழ்கிக்கிடக்கின்ற இடங்களை  இனங்கண்டு, ஒளியேற்றுவது போன்ற நற்பணிகளைச் செய்து கொண்டிருந்தபோது, 2010ம் ஆண்டு சுயேட்சை வேட்பாளராகி, வெற்றி ஈட்டியதன் மூலம் அவர் பிரதேச சபைக்குள் நுழைந்தார்.

அங்கிருந்தும் தனது பணிகளை மேன்படுத்திக் கொண்டவராக கிராமத்தின்அபிவிருத்திகளில் ஈடுபட்டு வந்த நிலையில், 2020ம் ஆண்டில்  கொவித் -19 தலைகாட்டியது.

அவ்வேளையில் கிராமம் நிர்க்கதியாக்கப் பட்டபோது, கல்ஹின்னைக்  கிராமத்துக்கு மட்டுமன்றி, சுற்று வட்டார பெரும்பான்மை இனமக்களுக்கும் உணவு வினியோகம், மருத்துவ உதவி போன்றவற்றைச் செய்ததன் மூலமும், நிர்க்கதிகளுக்குள்ளான சகல மக்களுக்கும், உள்நாட்டுத்  தனவந்தர்களிடமும், வெளிநாட்டு நன்கொடையாளர்களிடமும் இருந்து உதவிகளைப் பெற்றுத் தன்னாலாவற்றை ஊர் மக்களுக்குச் செய்ததை அவர்கள் எப்போதும் மறந்து விடமாட்டார்கள்.

இப்பொழுது உவைஸ் றசான் அவர்கள் எதிவரும் பிரதேச சபைத் தேர்தலில் மயில் சின்னத்தில் போட்டியிட்டு, வெற்றிக்குப் பின்னர்  மென்மேலும் தனது கிராம மக்களுக்குச் சேவைசெய்ய விழைந்துள்ளார். 

இதுவரை காலமும்  பல்வேறு நிர்க்கதியான நிலைகளிலும், வரிந்து கட்டிக்கொண்டு மக்கள் பணியை உயர்வாக மதித்து சேவைகள் பல செய்த அவரைக் கிராம மக்கள் தமது பிரதிநிதியாகத் தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்கு வீண்போகமாட்டாது என்ற திடமான கருத்தை உவைஸ் ரஸான்  'கல்ஹின்னை டுடே' க்குத் தெரிவித்துள்ளார்!

நல்லன செய்தவர்கள் கல்ஹின்னைக் கிராமத்துக்கு என்றென்றும் தேவை என்பதை, கிராம மக்கள் எப்போதும் உணர்வார்களாக!

கல்ஹின்னை டுடே நிருபர் 


 


Post a Comment

Previous Post Next Post