தேசகீர்த்தி, கலாநிதி, Dr, அல்-ஹாஜ் மர்ஹும் H சலாஹுத்தீன் மௌலவி (பாரி) அவர்களின் 10 ஆண்டு நினைவு தினம்

தேசகீர்த்தி, கலாநிதி, Dr, அல்-ஹாஜ் மர்ஹும் H சலாஹுத்தீன் மௌலவி (பாரி) அவர்களின் 10 ஆண்டு நினைவு தினம்



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
 
தேசகீர்த்தி, கலாநிதி, Dr, அல்-ஹாஜ் மர்ஹும் H சலாஹுத்தீன் மௌலவி (பாரி) அவர்களின் 10 ஆண்டு நினைவு தினம் இன்று  (07,ம் திகதி ஏப்ரல் 2023) வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படயுள்ளது .

அதனையொட்டி பி. ப. 5,00 மணியளவில் அவர் பெயர் தாங்கிய வீதி பெயர்ப்பலகையை  திரைநீக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில்  இன்ஷா-அல்லாஹ் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ திலக் ராஜபக்ச, அல்-ஹாஜ் அப்துல் ஹலீம், மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின்  தலைவர் கௌரவ ஹட்ஷன் சமரசிங்க, மற்றும் பூஜாபிட்டிய பிரதேச சபையின் முன்னால் தலைவர் கௌரவ அனுரா பெர்னான்டோ உட்பட ஊர் அரசியல் பிரமுகர்கள் அனைவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.

 அத்தோடு கல்ஹின்னை ஒன்றியத்தின் தலைவர் அல்-ஹாஜ் S.M.ஜிப்ரி மற்றும் கல்ஹின்னை பெரிய ஜும்மாப் பள்ளிவாசல் பரிபாலன சபையின் தலைவர் அல்-ஹாஜ் A.L.M.ரியாஸ் அவர்களுடன் இந்நிகழ்வில் (12) மகல்லாக்களை  சேர்ந்த தக்கியாப் பள்ளி நிர்வாகத் தலைவர்களும், அங்கத்தவர்களும் மற்றும்   முன்னைநாள் கல்ஹின்னை ஜும்மாப் பள்ளிவாசல் பரிபாலன சபையின்  தலைவரும் சட்டத்தரணியுமான அல்-ஹாஜ் H.M. பாரூக் அவர்களும் கல்ஹின்னை அகில இலங்கை ஜாமியத்துள் உலமா கிளையின் தலைவர் உட்பட  அங்கத்தவர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.

இந்த நிகழ்வில் ஊரார்கள் அனைவர்களும் கலந்து சிறப்பிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். 
அல்ஹம்துல்லாஹ்
 
இப்படிக்கு 
ஏற்பாட்டு குழு
1)கல்ஹின்னை ஜாமியத்துள் உலமா சபை 
2)கல்ஹின்னை ஒன்றியம் 
3)கல்ஹின்னை பெரிய ஜும்மாப் பள்ளி பரிபாலன சபை 
4)தேசகீர்த்தி, கலாநிதி, Dr, அல்-ஹாஜ் மர்ஹும் H சலாஹுத்தீன் மௌலவி (பாரி) அவர்களின் குடும்பத்தார்கள் 
 
குறிப்பு: இன்றைய தினம் நாள்  (07,ம் திகதி ஏப்ரல் 2023) வெள்ளிக்கிழமை இப்தார் நிகழ்வு கல்ஹின்னை பெரிய ஜும்மாப் பள்ளிவாசலில் நடைபெறும் (12) மகல்லாகளையும்  சேர்ந்த ஆண்கள் அனைவர்களும் கலந்து கொள்ளுமாறு மிகப்பணிவாய் கேட்டுக்கொள்கின்றோம்.
 
அத்தோடு இப்தார் நிகழ்வுகள் யாவும் இலங்கை ஒலிபரப்பு கூட்டிஸ்தாபனத்தின் முஸ்லிம் சேவையின் ஊடாக நேரடி ஒலிபரப்பு செய்யப்படும் என்பதையும் அறியத்தருகின்றோம்.
வஸ்ஸலாம்.

எம்.எம்.பாரூக்(WC)
கல்ஹின்னை


 


Post a Comment

Previous Post Next Post